அன்புடையீர்,
இறைவன் திருவருளினால் நான் எங்கள் சிவன் கோயிலை ஆரம்பிப்பதற்கு வேண்டிய அங்குரார்ப்பணக் கூட்டத்தை எனது (49 Ravensbourne Park Crescent, Carford, London, SE6 4YG,UK) இல்லத்தில் ஒழுங்கு செய்திருந்தேன். அப்போது ஆண்டு 1993. நானும் துடிப்புடன் இருந்தேன். இக்கூட்டத்திற்கு என்னால் அழைக்கப்பட்டவர்கள்: திருவாளர்கள் வி.கணேசமூர்த்தி, செ.யோகராசா, வ.கிருஷ்ணானந்தராஜ், தி.அருள்தாஸ், சு.பேரின்பநாதன், ந.சிவசுப்பிரமணியம், நா. ஸ்ரீ கெங்காதரன், ஆ.ரவீந்திரன் ஆகிய அப்பெரியார்கள் என் அழைப்பை ஏற்று வந்தனர்.
சிவன் கோயில் அங்குரார்ப்பணப் பூசை Newstead Community Hall, Lee எனும் மண்டபத்தில் நடைபெற்றது மண்டபத்திற்குரிய வாடகை முதலிய பிரதான செலவினங்களையும் நானே உற்சாகத்துடன் பொறுப்பேற்றிருந்தேன். அத்துடன் நானே அடியார்கள் தரிசித்து வரும் மூலஸ்தானத்திலுள்ள சோமஸ்கந்த மூர்த்தியின் திருமேனியையும் மகிழ்வுடன் உபயம் செய்தேன். ஆலயம் அமைந்துள்ள காணியை வாடகைக்கு எடுப்பதற்கு மூலகாரணமாகவும் பின் அக்காணியில் ஆலயம் அமைப்பதற்கான முயற்சிகளையும் ஏனைய அறங்காவலர்களுடைய ஒத்துழைப்புடன் 1993 -1994 இல் நான் மேற்கொண்டேன்.
தொடக்கத்தில் ஆரம்பகால அறங்காவலர்களுடைய நிதி உதவிகள் கிடைக்காமையினால் நிதிப் பற்றாக்குறையின் நெருக்கடியைச் சமாளிக்கும் நிலையும் எனக்கு ஏற்பட்டது. எனினும் என் பணி தயங்காமல் நடந்தது. தற்போது சிவன் நிலையம் அமைக்கப்பட்டுள்ள காணியை வாங்குதவற்கும் நானே மூலகாரணமாக இருந்தேன் என்பதும் மறுக்க முடியாத உண்மை. அக்காணியை வாங்குவதற்கு ஏதுவாகும் வகையில் வைத்திய கலாநிதி சீ.நவரத்தினம், வைத்திய கலாநிதி சி சோமசேகரம், கலாநிதி து. ஸ்ரீஸ்கந்தராஜா, அமரர் மு. அழகப்பன் ஆகியோரை அறங்காவலர்களாக வருவதற்க்கு அழைத்தேன். அவர்களும் வந்து எனக்கு ஊக்கம் தந்தனர்.
இதனைத் தொடர்ந்து அமரர் க.செல்வேந்திரன், திரு.சோ.பாலசுந்தரம், திரு.த. ஸ்ரீதரன், வைத்திய கலாநிதிகள் சி.இராஜசுந்தரம், சு.சிவதாசன், ஆர். கந்தவேள் ஆகியோர் அறங்காவலர்களாக வருதவதற்கும் மூலகாரணமாக இருந்துள்ளேன் என்பதையும் பெருமையுடன் இன்று நினைவு கூருகிறேன். எனது அழைப்பின் பேரில் ஆரம்பகால அறங்காவலர்களில் சிலர் சில விக்கிரகங்களை தாராள மனதுடன் உபயமாக வழங்கினர். சிலர் அலங்கார உற்சவ உபயகாரர்களாக வந்தனர். மற்றும் சிலர் விசேட உபயகாரர்களாக வந்தனர். பொதுமக்களில் சிலரும் விசேட உபயகாரர்களாக வருவதற்கு அடியேனுடைய உற்சாகமும் பங்கும் பிரயத்தனமும் காரணிகள் ஆகின.
அடுத்த கட்டமாக எம் கோயிலில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் திருவுருவங்களையும் பொதுமக்களின் உதவியுடன் ஸ்தாபிதம் செய்வதற்கும் அவர்கள் உபயகாரர்களாக வருவதற்கும் நான் எடுத்தபிரயத்தனங்கள் வெற்றியளித்தன. இவ்வாறு எம்கோயில் உருவாக்கப்பட்டது. கோயிலுக்கு அர்ச்சகர்கள் தேடும் கட்டத்தில் இங்கு பணி புரிவதற்கு சிவஸ்ரீ சபாமகேஸ்வரக் குருக்கள், சிவஸ்ரீ ஸ்ரீம சுந்தரக் குருக்கள் அவர்களையும் தமிழில் பூசை செய்வதற்கு சிவஸ்ரீ மணிவாசகக் குருக்கள் அவர்களையும் பன்னிரு திருமுறை ஓதுவதற்கு திரு. சாமி தண்டபாணி ஓதுவார் அவர்களையும் அடியேன் மூல காரணமாக இருந்து வரவழைத்தேன். வெற்றிக்கு மேல் வெற்றி வர, நானும் ஊக்கப்பட்டேன்.
இப்பணிகளை எல்லாம் செய்தபின்னர் ஆலயத்தை ஆகம முறைப்படி புனரமைப்தற்கு எண்ணினேன். எனவே கோயில் கர்ப்பக்கிரகத்தில் பிரதிஷ்டை செய்தவற்கான சிவலிங்கத்தையும் வட இந்தியாவிலிருந்து சுணக்கம் இன்றித் தருவித்திருந்தேன். கோயில் தொடர்ந்து நடந்தது. கோயில் அமைந்துள்ள காணி கோயிலுக்குச் சொந்தமாக இல்லாத படியால் சட்டத்தரணி திருமதி. இந்திரா செபஸ்தியான் அவர்களையும் பொறியியலாளர் (Mr. Payne) திரு.பெயின் அவர்களையும் அறங்காவலர் சபைக் கூட்டத்திற்கு அழைத்து வேண்டிய சட்ட ஆலோசனைகள் பெறுவதற்கான ஒழுங்குளையும் என் தர்க்கரீதியான நல்லெண்ணத்துடன் செய்திருந்தேன்.
குறைந்த கால குத்தகைக் காணியில் பெருமளவில் பொதுமக்களின் பணத்தைச் செலவுசெய்து கோயிலை அமைப்பதில் உள்ள சட்டமுறை ஆபத்துக்களால் அது உகந்த வழியல்ல என இவர்கள் இருவரும் தமது ஆலோசனையை அறங்காலர்களின் கவனத்திற்கு முன்வைத்தனர். இந்த ஆலோசனைக்கமைய கோயிலைச்சிறு அளவில் புனரமைப்பதற்கு வேண்டிய விபரங்களை அறங்காலர் சபையில் நான் முன்வைத்தேன். இதற்கான செலவுத்தொகை 200,000 பவுண்களேயாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஆலோசனையைப் பெரும்பான்மையான அறங்காவலர்கள் ஏதோ துரதிஷ்ட்டத்தினால் ஏற்றுக் கொள்ளவில்லை.
இக்காலகட்டத்தில் அறங்காலவர்கள் சபை தன் தலைவரை மாற்றிக் கொண்டது. அத்துடன் நான் செய்து வந்த பணிகளும் முடங்கத்தொடங்கின. என் வேகமும் குறைந்தது. எனினும் விடமனமின்றி தொடர்ந்து என்னால் ஆகியவற்றைச் செய்தேன்.
புதிய தலைவர் கலாநிதி து. ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் குறைந்த கால குத்தகைக் காணியில் (Short term Lease) கோயில் கட்டுவதற்கு ஒரு மில்லியன் பவுண்கள் (1,000,000) செலவில் ஒரு ஆடம்பரமான ஆபத்தான திட்டம் வகுத்தார். அத்தொகை அதிகரித்துக் கொண்டு வருகின்றது. அந்தத்திட்ட விபரங்களை எமது பொதுமக்கள் அறிவதற்கு முன்வைக்க வேண்டுமெனவும் பொதுமக்களின் ஆலோசனைகளையும் இணக்கமும் பெறப்பட வேண்டும் எனவும் எம் அறங்காவலர் சபையை நான் மிகவும் பணிவுடன் வேண்டினேன்.
அதற்கு எம்தலைவர் ஏனோ சம்மதிக்கவில்லை. நானும் எம்தலைவர் கலாநிதி து.ஸ்ரீஸ்கந்தராஜாவின் பெரிய செலவுத் திட்டத்தை ஏற்க என்மனச்சாட்சி இடங்கொடாத நிலையில் அவர்களின் திட்டத்தை பொதுமக்கள் கவனத்திற்கு நானாகவே முன்கொணர்ந்தேன். அறங்காவலர்களின் இத்தவறான திட்டத்தை அடியேன் பொறுப்புணர்வுடன் பொது மக்களின் முன் வைத்த காரணத்தால் தலைவர் ஸ்ரீஸ்கந்தராஜாவின் வேண்டுகோளின் படி அறங்காவலர் சபையிலிருந்து நான் நீக்கப்பட்டுள்ளேன்.
நான் முன்னின்று தொடங்கிய கோயிலின் விருத்தியிலும் நிர்வாகத்திலும் நான் பங்குகொள்ள முடியாதநிலை என்னை வெகுவாகப் பாதித்துள்ளது. மேலும் கோயில் நிர்வாகம் செல்லும் போக்கையும் பொறுக்க முடியாது ஈசனிடமே எம் அடியார்கள் மூலம் விண்ணப்பிக்க ஒரு நூலை வெளியிட எண்ணியுள்ளேன். எனவே மேற்கூறிய உண்மை விபரங்கள் எல்லாம் அடங்கிய இலண்டன் சிவன்கோயில் வரலாற்று நூல் வெகுவிரைவில் வெளிவரவுள்ளது. இந்நூலில் இதுவரை பொதுமக்கள் அறியாத எல்லா விடயங்களையும் கூறலே நலம்.
எனவே எம்ஆலயம் சம்பந்தமான பூரண வரலாறும் விபரங்களும் அடங்கிய அடியார்களுடைய கட்டுரைகளையும் இந்நூலில் சேர்க்க விரும்பி இத்தால் நல்லெண்ணத்துடனும் அன்புடனும் தயவாக உங்களையும் அழைக்கிறேன்.
கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி:
Maazaru Printers,
28/8 Muthukalathi Street,
Triplicane
Chennai-5
Tamilnadu (South India).
தயவுசெய்து கட்டுரைகளை விமானத்தபாலில் அனுப்புங்கள். தட்டச்சுவசதி இல்லாதவர்கள் மட்டும் தெளிவான கையெழுத்தில் அனுப்பினால் நான் அவற்றை உசிதமாக உள்ளடக்கத்தெண்டிப்பேன். மின்ஞ்சல் வசதி உள்ளவர்கள் maazaru@rediffmail.com எனும் மின்னஞ்சல் விலாசத்துக்கு முடியுமான கெதியில் அனுப்பி வைக்கவும். உங்கள் கட்டுரைகள் 31.06.2010 கடைசித் திகதிக்கு முன்னதாக எமக்கு அனுப்பி வைக்குமாறு இத்தால் அன்பாக வேண்டுகிறேன். தமிழிலேயே எழுதுவதை விரும்புகிறோம். ஆங்கிலமும் பரவாயில்லை.
இங்ஙனம்
தங்கள் ஆதரவை நாடும்
நடராஜா சச்சிதானந்தன்
நிறுவனர் – இலண்டன் சிவன் கோயில்
T Constantine
One million is lot of money. I would assume temple should have at least £600,000 in liquid funds in order to aim for £1 M project. By any standard, investing £1 million on leased property is a stupid idea. Considering this is a temple, investing such amount should be a criminal act!
There are large property companies have gone under recently. E.g.: Edinborough Inns. If you know the right people you can buy 6000 Sq Ft free hold building for under £600,000 in South East. I do not think this temple is more than 3000 Sq ft.
Obviously there will some licence (classes) issue to be dealt with. Offer can be made subject to obtaining licence or agree on a compensation to revert the contract.
This seems to another ‘Vanaga Man’ project!!!
Ajith
Before making comments about this one, first we should get the views of the current trustees. This is something like just believing what Rajapakse government said about numbers in Vanni. I donot understand why Satchi choose this web which is a propaganda machine for Rajapakse.
sanjeevan
தமிழினம் அங்கெ பட் டினியில் சிவத்தொன்ட இது…இவனுகே இது அடுக்குமா….
suthahar
Choosing the web is not important. The Fact it disclose is important. What constantine said is fact. I hope this message will reach to so called Sivan Temple business partners. Now they do not want to give money to Tigers. See how much they are affordable within one year? Why couldn’t they spend these on other social projects.
T Constantine
What Rajapakse is to do with Lewisham Temple?? I am lost..
Blame Rajapakse and Prabaharan for everything.
rohan
“நான் முன்னின்று தொடங்கிய கோயிலின் விருத்தியிலும் நிர்வாகத்திலும் நான் பங்குகொள்ள முடியாதநிலை என்னை வெகுவாகப் பாதித்துள்ளது. மேலும் கோயில் நிர்வாகம் செல்லும் போக்கையும் பொறுக்க முடியாது ஈசனிடமே எம் அடியார்கள் மூலம் விண்ணப்பிக்க ஒரு நூலை வெளியிட எண்ணியுள்ளேன்” என்று சொல்கிற ஐயாவிடம் இரண்டு கேள்விகள்:
1. என் கடன் பணி செய்து கிடப்பதே என்று விடுவதை விடுத்து ஏன் நிர்வாகத்தில் இடம் கேட்கிறீர்கள்?
2. தாமாகவே தெரிகிற வல்லமை இல்லையா ஈசனுக்கு?
Ajith
It is a habit for Thesamnet and few others to put the blame on LTTE for every aspect of what is happening here and back home. The purpose of this message sent by Satchi is to create an image between the Sivan Kovil trustee and LTTE. It is not about what constantine said. It is about what Satchi said through this web.
This person try to say that he did everything. It is clear from his statement that he is angry with others because he was not elected to the President. This is a typical behaviour that is equivalent to politicians. I understand this person is doing the same kind of practice for the past few years.
thurai
//1. என் கடன் பணி செய்து கிடப்பதே என்று விடுவதை விடுத்து ஏன் நிர்வாகத்தில் இடம் கேட்கிறீர்கள்?
2. தாமாகவே தெரிகிற வல்லமை இல்லையா ஈசனுக்கு//றோகன்
இந்து சமயமும், தமிழ் மொழியும் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழரரிடையேயுள்ள வியாபாரப் பொருட்கள். வாழும் நாட்டினைக் கட்டியெழுப்பியவர்களிற்கும் அந்த நாட்டு மக்களிற்கும் ந்ன்றி சொல்லாமலும், மதிக்காமலும் சிலர் வாழ்கின்றார்கள். தமிழரைத் திசை திருப்பி வாழும் சுயநலம் கொண்டவர்களின் புகலிடமே சமயங்கழும் தமிழ் மொழி சார்ந்த அமைப்புகழும்.
துரை
thurai
அன்பின் அஜீத்,
கோவில்களைக் கட்டும் போது பக்தர்களின் நலன் மட்டுமே கருதப்பட்டதா அல்லது பூசாரிகளினது நலன்களிற்காகவா அல்லது தனிப்பட்டவ்ரின் சுயநலமா என்பது காலப்போக்கில்தான் தெரியவரும். இதற்கும் புலிகளை புலம்பெயர் நாடுகளில் காப்பாற்ரி வளர்ப்பவர்க்ளிற்கும் ஒற்றுமையுண்டு. இதுவே தமிழரிடையே வளர்ந்த்திருக்கும் சந்தேகங்கள்.
கோவில் கட்டியவ்ர்களிற்கும், புலிகளிற்காக வேலை செய்தவர்களில் அநேகரும் பணக்காரர்களாக வாழ்வதே இதற்கு உதாரணம். எனவே பண விடயம் எமது போராட்டத்திலும், ஆன்மீகத்துறையிலும் ஒன்றாகக் கலந்துவிட்டது. இதுவே எமது இன்றைய நிலைமைக்கு ஓர் காரணம். இத்னிலிருந்து விடுபட்டு வாழும்போதே எமக்குள் ஒற்றுமை வளரும்.
துரை
Ajith
Mr Thurai
I don’t understand none of your comments. There is no sense in your arguments.
இந்து சமயமும், தமிழ் மொழியும் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழரரிடையேயுள்ள வியாபாரப் பொருட்கள். வாழும் நாட்டினைக் கட்டியெழுப்பியவர்களிற்கும் அந்த நாட்டு மக்களிற்கும் ந்ன்றி சொல்லாமலும், மதிக்காமலும் சிலர் வாழ்கின்றார்கள். தமிழரைத் திசை திருப்பி வாழும் சுயநலம் கொண்டவர்களின் புகலிடமே சமயங்கழும் தமிழ் மொழி சார்ந்த அமைப்புகழும்.
Can you tell me any other relegion and language that are not used as a business objects now. Hinduism and tamil language are the only relegion and language that are not state sponsored by any state, purely sponsored by people. It is the only relegion where relegious leaders talk politics. It is the Buddhists monk in Sri Lanka feed poison to poor Sinhala masses. Islam fundamentalism around the world orginate from mosques. In Sri Lanka, buddhist temples are funded by state for create anti minority mission. It is the Sinhala state that bombed and destroyed hindu and christian temples and churches.
Tell us clearly which country you are talking about and who built up that country and for whom that belongs to and who has to thank who and who did not respect who?
I am sure you are one of those who believe that the country you live was built up by others and ou were given free food and house at the expense of their pockets.
புலிகளை புலம்பெயர் நாடுகளில் காப்பாற்ரி வளர்ப்பவர்க்ளிற்கும் ஒற்றுமையுண்டு. இதுவே தமிழரிடையே வளர்ந்த்திருக்கும் சந்தேகங்கள்.
i don’t understnad who you refer here as tamils. Tamils have very clear understanding about LTTE. There are few elements like you that always there to claim as representatives of tamils. People never be forced in temples to donate funds unlike refugees were asked to pay Rajapakse Rs. 2500000 to get released from the camps.
LTTE is not an imported liberation organisation unlike others. It is emerged from the people, funded by its people and fought for its people. There may elements intruded to damge its credibility. It is up to the people to decide who should be protected and how? For tamils there is no suspicion about that.
Varathan
sanjeevan on June 10, 2010 10:36 pm
தமிழினம் அங்கெ பட் டினியில் சிவத்தொன்ட இது…இவனுகே இது அடுக்குமா
Before blaming others you do your best. Have you committed your body and soul to the people who are suffering more than thirty years?
thurai
அஜீத்,
ஓர் தனிமனிதன் தன்னிலுள்ள பலவீனங்களையும், குறைபாடுகளையும் சீர் செய்தபின்பு தான் பகிரங்கமாக யாருடனாவது பேச வேண்டும். இதே போல்தான் தமிழினமும். புலிகளிற்கு முன்பு இருந்ததுலும் பார்க்க இப்போ மேலும் சீரழிந்த நிலைமையில் தமிழினம் உள்ளதென்பதை ஏற்கின்றீரா இல்லயா? இதற்கான காரணம் புலிகளை மக்கள் ஆதரித்தமையினாலா அல்லது ஆதரிக்காமல் நடந்ததனாலா?
மக்கள் விட்ட தவறென்ன, புலிகள் விட்ட தவறென்ன? தவறின்றி யாரும்வாழ முடியாது. தவறினை ஏற்காதவர்கள் திருந்தவும்முடியாது.
நமக்குள் உள்ள தவறுகளை நாம் திருத்தாமல் நாம் சிங்கள அரசினைமட்டும் தவறென்று வாழ்நாள் முழுவதும் கூறிக்கொண்டே இருக்கலாம்.
புலம்பெயர் நாடுகளில் தமிழரின் அந்தஸ்து எத்தனையாவது இடத்தில் என்பது புரியுமா? ஒருவர் இருவர் பாரழுமன்ற்த்திலும் உயர்பதவிகளிலும் இருந்து கொண்டு தொலைக்காட்சிகளில் வருவதனால் தமிழினம் சர்வதேசப் புகழோடு வாழ்கின்றதென் அர்த்தமா?
30 ஆண்டுகளிர்கு முன் சிங்களவர்களிலும் பார்க்க புலம்பெயர்நாடுகலில் தமிழர்களிற்கு அனுதாப்ம மேலாக இருந்த்து. இப்போ நிலமை மாறியுள்ளது.
இலங்கையின் போர்குற்ரத்திற்காக புலம்பெயர்நாடுகளிலும் தமிழர்களிற்கு அனுதாபம் கிடைக்குமென்பது நடவாத காரியம். இனியாவ்துநான் சொல்வது புரிகின்றதா?
துரை
Ajith
Mr. Thurai,
I understand what you are telling. I am well educated enough to understand your motive and attitude towards tamils. First, you didn’t answer my question about what you said about the country and respecting.Hope that you will respond to that one.
Secondly,
ஓர் தனிமனிதன் தன்னிலுள்ள பலவீனங்களையும், குறைபாடுகளையும் சீர் செய்தபின்பு தான் பகிரங்கமாக யாருடனாவது பேச வேண்டும். இதே போல்தான் தமிழினமும்.
It looks very attractive in theory but in practice no indidiviual or community or country have the right to talk publicly. Look at you and ask yourself and assess yourself. don’t you have any weeknessess, have you corrected yourself all your weaknesses and tell me are you a complete perfect human being. Tell me any one individual, community, nation that are eligible to come into this category. You may think you are perfect. I may think I am perfect. You may think I have a weaknes and you don’t have that. I may think you have the weakness and I don’t have that. It is the reality. We are in a world surrounded by varying individuals. You are not always responsible for some of the outcomes that you face. Tamils are no different to other communities. In each community, you have variety of differences (rich/poor, high/low class , criminals/non-criminals,so on). Nowhere in the world you find that a individual, community, nation kept silent in public until they corrected their weakness.
புலிகளிற்கு முன்பு இருந்ததுலும் பார்க்க இப்போ மேலும் சீரழிந்த நிலைமையில் தமிழினம் உள்ளதென்பதை ஏற்கின்றீரா இல்லயா? இதற்கான காரணம் புலிகளை மக்கள் ஆதரித்தமையினாலா அல்லது ஆதரிக்காமல் நடந்ததனாலா?
At least you agree that tamils were in a good position before LTTE. Tamils lost their land, economy, language, employment, legal rights systematically to Sinhala fundamentalists since 1948 before and after LTTE and continues it even after LTTE. Do you agree that it is planned destruction of Sinhala fundamentalism against tamils. do you think that if tamils would have better off and gained more rights than they had before LTTE. You must understand it is nothing to do with whether people supported LTTE or it. It is the fundamental vision and mission of the Sinhala as a whole.
Do you think the worse situtation in Gaza is due to the weakness of PLO or Hamas? Do you think that collapse of Soviet Union is the weakness of Russians? Do you think the victory of Sinhalese over Tamils is because Sinhala did not have weekness. The success or failure in the liberation struggles are decided by not only the parties involved but it is relative to various other factors may or may not relevant to you. The factors that appear not favourable may become favourable in future or that favoured you in the past may turn non favourable to you. The situation may be bad than before but no one has the power to predict future.
மக்கள் விட்ட தவறென்ன, புலிகள் விட்ட தவறென்ன? தவறின்றி யாரும்வாழ முடியாது. தவறினை ஏற்காதவர்கள் திருந்தவும்முடியாது.
LTTE and Tamils are not superior to anyone or any others are superior to tamils or LTTE. I am confident tamils and LTTE learn from their mistakes and continue their struggle towards achieving the goal. At the same I expect others who just put fingers at LTTE and tamils (I am not bothered about non tamils) to understand you are part of that group and you also need to correct your mistakes and takes responsibility. Tamils and LTTE are not enemies for you and you have the right to give your opinion snd views towards achieving the freedom from Sinhala fundamentalist oppression.
லம்பெயர் நாடுகளில் தமிழரின் அந்தஸ்து எத்தனையாவது இடத்தில் என்பது புரியுமா? ஒருவர் இருவர் பாரழுமன்ற்த்திலும் உயர்பதவிகளிலும் இருந்து கொண்டு தொலைக்காட்சிகளில் வருவதனால் தமிழினம் சர்வதேசப் புகழோடு வாழ்கின்றதென் அர்த்தமா?
Mr. Thurai,
I do’nt know. Do you know? I don’t understand the point you are trying to raise here. Did tamils ever said tamils are popular internationally when few of them in Parliament or in TV. I think you are having some inferiority complex yourself.
30 ஆண்டுகளிர்கு முன் சிங்களவர்களிலும் பார்க்க புலம்பெயர்நாடுகலில் தமிழர்களிற்கு அனுதாப்ம மேலாக இருந்த்து. இப்போ நிலமை மாறியுள்ளது.
இலங்கையின் போர்குற்ரத்திற்காக புலம்பெயர்நாடுகளிலும் தமிழர்களிற்கு அனுதாபம் கிடைக்குமென்பது நடவாத காரியம். இனியாவ்துநான் சொல்வது புரிகின்றதா?
Again you are talking without any relevance. Can you explain why there was more sympathy to tamils than Sinhalese 30 years before and why it has changed and how?
How do you predict that tamils will not get international sympathy for Sri Lanka’s war crimes? Who do you defend by saying things. What is there to understand from your statement. If I correctly understand what you are saying that Sri Lanka was responsible war crimes and genocide but tamils will not get justice from international community. I am happy you are accepting the fact that Sri Lanka is a nation that should be punished for its crime against humanity.
thurai
புலிகளை இன்னமும் ஈழத்தமிழருடன் இணைப்பதன் மூலம் அஜீத் தமிழர்களின் நிலமையை இன்னமும் மோசமாக்கிக் கொண்டிருக்கின்றீர்.
அரசாங்கம் செய்த குற்ரத்திற்காக ராசபக்சா மீது குற்ரவாளியென தீர்மானித்து முடிவு செய்வோம். புலிகள் செய்த குற்ரங்களிற்கும் கொலைகளிற்கும் புலிகளால் பாதிக்கப்பட்டோர் யாரிடம் முறையிடுவது என சொல்வீரா? புலிக்குத்தானே பொறுப்பென உலகின் முன் யாராவது கூறியுள்ளார்களா?
அப்படிக் கூறியவர்கள் புலிகள் செய்த குற்ரங்களை ஏற்பார்களா?
இராசபக்ச தவறு செய்தார் என்பதற்காகவும், இலங்கை அரசை புலிகள் எதிர்க்கின்றார்களென்பதற்காகவும், புலிகளின் பெயரால் வாழும் கொள்ளையர்கள், கொலைகாரர்களை தமிழினம் பார்த்துக் கண் மூடியிருக்க வேண்டுமா?
புலிகளின் பெயரால் புலம்பெயர்நாடுகளில் பணம் பறிப்பும் கொலை மிரட்டலும் செய்தவ்ர்களைப்பற்றியும் அவர்கள் இப்போ தடுத்து வைக்கப்பட்டுள்ளதும் தெரியாதா? இவர்களை காட்டிக் கொடுப்பது சிங்களவ்ர்களா? காட்டிக் கொடுத்த தமிழர்கள் துரோகிகளா?
புலம்பெயர் நாடுகளில் புலிகழும் அவர்களின் பெயரால் மற்ரவர்க்ழும் செய்த தவறுகளினால் இன்று தமிழரைப் பற்ரிய அந்தஸ்து எவ்வாறுள்ள தென்பது இன்னமும் அறியவில்லையா?
ஈழத்தமிழர் தற்போதுள்ள நிலைமையில் உருமைகள் பற்ரிப் பேசுவது கால் முறிந்து கிடப்பவனை எழுந்து ஓடும்படி துன்புறுத்துவது போலாகும்.
மீண்டும் சொல்கின்றேன் இலங்கை அரசு செயும் தவறுகளிற்கெல்லாம் பாதுகாப்பு புலம் பெயர்நாடுகளில் ஏந்தப்படும் புலிக்கொடியேயாகும்.
துரை
Ajith
புலிகளை இன்னமும் ஈழத்தமிழருடன் இணைப்பதன் மூலம் அஜீத் தமிழர்களின் நிலமையை இன்னமும் மோசமாக்கிக் கொண்டிருக்கின்றீர்.
Once again it is upto the tamils to decide not you or me Mr Thurai.
அரசாங்கம் செய்த குற்ரத்திற்காக ராசபக்சா மீது குற்ரவாளியென தீர்மானித்து முடிவு செய்வோம். புலிகள் செய்த குற்ரங்களிற்கும் கொலைகளிற்கும் புலிகளால் பாதிக்கப்பட்டோர் யாரிடம் முறையிடுவது என சொல்வீரா? புலிக்குத்தானே பொறுப்பென உலகின் முன் யாராவது கூறியுள்ளார்களா?அப்படிக் கூறியவர்கள் புலிகள் செய்த குற்ரங்களை ஏற்பார்களா?
This is why tamils call for international investigation.You can make your complaint there.
இராசபக்ச தவறு செய்தார் என்பதற்காகவும், இலங்கை அரசை புலிகள் எதிர்க்கின்றார்களென்பதற்காகவும், புலிகளின் பெயரால் வாழும் கொள்ளையர்கள், கொலைகாரர்களை தமிழினம் பார்த்துக் கண் மூடியிருக்க வேண்டுமா?
I agree those who used Tigers name for their murderous act should be punished. It is good that you agree that there is a difference between LTTE and individuals who used LTTE’s name for their personal interest.
புலிகளின் பெயரால் புலம்பெயர்நாடுகளில் பணம் பறிப்பும் கொலை மிரட்டலும் செய்தவ்ர்களைப்பற்றியும் அவர்கள் இப்போ தடுத்து வைக்கப்பட்டுள்ளதும் தெரியாதா? இவர்களை காட்டிக் கொடுப்பது சிங்களவ்ர்களா? காட்டிக் கொடுத்த தமிழர்கள் துரோகிகளா?
So what? Did LTTE named you as a betrayor for you informing police where you live? Who said that this is the work of Sinhala. you are talkng without any relevance.
புலம்பெயர் நாடுகளில் புலிகழும் அவர்களின் பெயரால் மற்ரவர்க்ழும் செய்த தவறுகளினால் இன்று தமிழரைப் பற்ரிய அந்தஸ்து எவ்வாறுள்ள தென்பது இன்னமும் அறியவில்லையா?
I am fully aware of those who work for Sinhala masters and some elements used LTTE name for their crimes but I am not of aware of LTTE crimes in these countries.
ஈழத்தமிழர் தற்போதுள்ள நிலைமையில் உருமைகள் பற்ரிப் பேசுவது கால் முறிந்து கிடப்பவனை எழுந்து ஓடும்படி துன்புறுத்துவது போலாகும்.
It is your imagination. It is the tamils diaspora who take the liberation struggles. Tamils back home understand this but no can force tamils to be slaves of Sinhala oppression.
மீண்டும் சொல்கின்றேன் இலங்கை அரசு செயும் தவறுகளிற்கெல்லாம் பாதுகாப்பு புலம் பெயர்நாடுகளில் ஏந்தப்படும் புலிக்கொடியேயாகும்.
I don’t agree with you again. Sinhala oppression against tamils has a long history. Sri Lanka’s action against are not mistakes, they are planned activities to eliminate tamils from tthere homeland. It is sad some tamils still think they are masters and tamils should not ask for their rights.
Mr. Thurai, still you are avoiding to respond to what you said about the country we have to respect.
Jeyabalan T
//It is a habit for Thesamnet and few others to put the blame on LTTE for every aspect of what is happening here and back home. // Ajith on June 11, 2010 6:30 pm
மேலுள்ள கட்டுரையோ அல்லது அதனைத் தொடர்ந்து வந்த பின்னூட்டங்களோ நேரடியாகவோ மறைமுகமாகவோ எல்ரிரிஈயை எங்கும் குற்றம்சாட்டவில்லை. அஜித் உங்களுடைய பின்னூட்டம் தான் எல்ரிரிஈ என்ற அம்சத்தையே இங்கே கொண்டு வந்தது. ஊரில் ஒரு பழமொழி ‘மருண்டவன் கண்ணுக்கு காண்பது எல்லாம் பேய்.’ என்று சொல்வார்கள். அது போல உங்களுக்கு என்னத்தைப் பற்றி விவாதித்தாலும் அது பேயாகவோ அல்லது எல்ரிரிஈ ஆகவோ தான் தெரியும். இது தேசம்நெற் இன் தவறல்ல.
//LTTE is not an imported liberation organisation unlike others. It is emerged from the people, funded by its people and fought for its people. There may elements intruded to damge its credibility. It is up to the people to decide who should be protected and how? For tamils there is no suspicion about that.// Ajith on June 12, 2010 6:25 pm
புலிகளின் தலைவர் வே பிரபாகரன் மட்டுமல்ல முசோலினி இடிஅமீன் சதாம் உசைன் போன்ற சர்வதிகாரிகளும் அவர்களின் அமைப்புகளும் தான் மக்கள் மத்தியிலேயே தோன்றின. மக்களுக்காகப் போராடுவதாகக் கூறிக்கொண்டு அதிகாரங்களைக் கைப்பற்றியவுடன் அதனைக் கொண்டு எந்த மக்களுக்காகப் போராடுவதாகக் கூறினார்களோ அந்த மக்களையே எதிரியிலும் பார்க்க கீழ்த்தரமாக நடத்தினர். தேவைப்பட்ட போது கொலையும் செய்தனர். அப்படிச் செய்த போது அஜித் உங்களைப் போன்றவர்கள் அதற்கு தத்துவ விளக்கம் கொடுத்து பழியை எதிரியும் துரோகியும் ஊடுருவிவிட்டார்கள் என்று சொல்லி அந்தச் சர்வதிகாரிகளைள எதிரியின் பெயரில் புனிதர்கள் ஆக்கினர். அதற்குப் பின் தங்களை யார் எப்படிக் காப்பாற்றுவது என்பதை மக்கள் எப்படித் தீர்மானிப்பது.
// The success or failure in the liberation struggles are decided by not only the parties involved but it is relative to various other factors may or may not relevant to you.// Ajith on June 13, 2010 12:27 pm
அதென்ன அஜித் சக்ஸா நடந்தால் மட்டும் எல்லாம் நாங்கள் தலைவர் விட்டம்போட்டு உள்ளுக்கு வரவிட்டு அடிச்சனாங்கள் என்றது. அடிவாங்கினதும் வெற்றி தோல்வி எல்லம் சம்பந்தப்பட்டவையில மட்டும் தங்கியில்ல. புறக்காரணிகளும் காரணம் என்றது.
முள்ளிவாய்க்காலுக்கு 32 வருசத்துக்கு முதலே தமிழீழ விடுதலைப் போராட்டத்தை புறக்காரணிகள் தங்களுக்கு ஏற்ப பயன்படுத்தம் என்று வாதிட்டவர்கள் இன்றும் இலங்கையில் உள்ளனர். அந்தப் புறக்காரணிகளையும் கணித்து அரசியல் தலைமை தாங்குபவன் தான் அரசியல் தலைவனாக இருக்க முடியும். வெடிகுண்டை உடபிலை கட்டி அனுப்புறவரோடே டினர் சாப்பிடுபவர் விடுதலைப் போராட்டத்துக்கு தலைமை தாங்கும் தகுதியற்றவர். 3 00 000 மக்களை வைத்து சீட்டு விளையாடின மாதிரி அரசியல் செய்துவிட்டு இப்ப அதுக்கு விளக்கம் வேறை.
thurai
அஜீத்,
உங்களால் புலிக்குள் யார் நல்லவர் கெட்டவர் என்பதை அறியமுடியுமா? அறிந்தாலும் அதனை வெளிப்படையாகா கூறுவீர்களா? தமிழருக்குள் இன்னமும் புலியின் பயங்கரவாதம் குறிப்பாக புலம் பெயர் நாடுகளில் அற்ருப் போகவில்லை. இதனை ஏற்காவிட்டால் , இராசப்க்சவையும் இந்தியாவையும் குற்ரம் சொல்லுபவர்கள், முதலில் புலிகளைத் தவறாக புலம்பெயர்நாடுகளில் வழிநடத்தியவர்களின் பெயரை குறிப்பிடவும்.
இன்று ஈழத்தமிழரின் போராட்டம் புலத்துத் தமிழர் கைகளில் என்பதே உமது கருத்து.
புலத்துத் தமிழர் பற்றி:
காட்டில் வாழும் மிருகங்கள் தமக்குள் இன ஒற்றுமையுடன் ஓர் இனமாகவே வாழ்கின்றன. தமிழர் புலம் பெயர்நாடுகளில் வாழ்ந்தாலும் அந்த நாட்டின் வளர்சியடைந்த கலாச்சாரத்துடன் இன்னமும் இணையவில்லை. இன்னமும் 1000 வருடத்து சாதித் துவேசத்துடன் வாழ்வது சரியா? இவர்கள் ஓர் இனமென்று பேசும்மொழியின் ஒற்றுமையைக் கொண்டா சொல்கின்றீர். போராட்டக் காலங்களில் இந்த சாதித்துவேசமே அமைப்புகளிர்குள் விரிவுகளை ஏற்படுத்தியதை அறியவில்லையா?
ஒருநாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு பணத்திற்காக மாறி மாறி ஓடித்திரியும் குணம் கொண்டவர்கள் எந்த நாட்டுப் பற்றுள்ளவர்கள் என்பதை கூறுவீரா? விடுதலை சுதந்திரம் என்பது பிறந்த மண்ணில்வாழும் மக்கள் தீமானிப்பதும் அவர்களே போராடிப் பெற வேண்டியதுமேயாகும். இதற்காக நீங்கழும் உங்கள் புலம் பெயர் சமூகமும் அம்மக்களை எந்தவகையில் தயார்படுத்திக் கொண்டிருக்கின்றீர்கள்?
இதுவரை நடந்தது விடுதலைப் போராட்டமென்ற் பெயரில் புலிகளின் பணம் தேடும் போராட்டமே. ஆபிரிகாவில் முதலீடு தெனனமெரிக்காவில் முதலீடு, தென்னாசியாவில் முதலீடு தென் இந்தியாவில் தொழிற்சாலைகள், இலங்கையில் உல்லாசவிடுதிகள், புலம்பெயர்நாடுகலில் சொந்தமாக வீடு பெறுமதிமிக்க உல்லாச வாகனங்கள் இன்னும் எத்தனையோ.
மேல் கூறப்பட்ட விடயங்களில் 1 வீதமாவ்து ஈழத் தமிழரின் உருமை, விடுதலையோடு சம்பந்தப்பட்டுள்ளதா? இவரகளிற்கு ஆதரவு கொடுப்போரினாலும், முன்னிற்போரினாலுமே தமிழர்க்ளிற்கு இக்கொடிய அழிவு ஏற்பட்டதென்பதை இன்னமும் ஏற்க ஏன் தயக்கமென விளக்கவும்.
முதலில் புலிகள் புலம்பெயர் நாடுகலில் போடும் உருமை, விடுதலைக் கோசங்களை கைவிட்டு சாதாரண மனிதராக வாழுங்கள், பின்பு எல்லோரும் தமிழராக வாழ்வோம், அதன் பின் இலங்கையில் என்ன நடக்கின்றதென்பதைபற்றி எல்லோருமாக பேசித் தீர்மானிப்போம்.
துரை
Ajith
There are enough articles in this web to show your intention to relate relegious matters with LTTE. For examples Nagapoosani amman article by you. Most of the people who write comments in this web are well aware of your relationship with Rajapakse. Your comparison of Pirabakaran with முசோலினி இடிஅமீன் சதாம் உசைன் போன்ற சர்வதிகாரிகளும் clearly shows your sincereity to the top dictator Rajapakse. this sort of comparison mayhelp to justify your alliance with murderous Rajapkase regime. I have seen some of your colleagues in the DAN TV during Presidential election campagin next to Rajapkase. What can we expect other than this sort of behaviour from an ally of Rajapakse.
thurai
அஜீத்,
பிரபாகரனையும், புலிகளையும் விமர்சிக்கும் எல்லோரும் இலங்கை அரசிற்கு சாதகமானவர்கள் எல்லோரும் ராஜ்பக்சவின் ஆதரவாளர், என்ற உங்கள் கருத்து தவறானது. நீங்கள் மட்டுமல்ல புலிகளின் உலகமே இப்படியான குறுகிய மனப்பான்மையுடையது தான். இவர்கள் திருந்தாமல் தமிழர்களிற்கு வழிகாட்டவும் விடுதலை பெற்றுக் கொடுக்கவும் இவர்களால் எப்படி முடியும்.
தமிழர்களிற்குத் தேவை அறிவாளிகளேயாகும். ஆயுததாரிகளல்ல. புலிகளின் பகைவர் அறிவாளிகள். தமிழர்களிற்கு எது அவசியமோ அதனை அழித்து விட்டு அந்த் இடத்தில் அமர்ந்து தம்மை வளர்த்தவர்கழும், வளர்ப்பவர்கழுமே புலிகள்.
துரை
Jeyabalan T
கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ள முடியாதவர்கள் மூன்றாம்தர அரசியலில் இறங்குவது தவிர்க்க முடியாது. அஜித் ராஜபக்சவின்ர ஆள் என்பார். நத்தா புலிகளின் பினாமி என்பார். இன்னுமொருவர் குயின் எலிசபத்தின்ர ஆள் என்பார். இன்னொருவரோ இல்லை இல்லை அவர் ஒபாமாவின்ர ஆள் அவர் நித்திரைக்குப் போக முதல் சீஐஏ யோட அதைச்சால் தான் நித்திரை வருமாம் என்பார்.
இங்கு எடுத்துக்கொள்ளப்பட்ட விடயம் லண்டன் சிவன் கொயிலும் அதன் திருப்பணியும். சச்சி அவர்களின் குற்றச்சாட்டை தவறு எனக் கருதினால் அதற்கு ஏற்ப கருத்துக்களை முன்வைப்பதே ஆரோக்கியமான விவாதம். அதைவிடுத்து ராஜபக்வின்ர ஆள் பிரபாகரன்ர ஆள் என்று மல்லுக்கட்டுவது அர்த்தமற்றது.
மேலும் குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் ஆளுபவர்கள் மீதும் அதிகாரத்தை வைத்துள்ளவர்கள் மீதுமே கூடுதலாக அமையும். பிரித்தானியாவில் கோர்டன் பிரவுன் பிரதமராக இருந்தவரை தொழிற்கட்சி மீதான விமர்சனங்கள் கடுமையாக இருந்தன. தற்போது அந்த விமர்சனங்கள் கொன்சவேடிவ் கட்சி நோக்கியும் லிபரல் கட்சி நோக்கியும் திரும்பியுள்ளது.
அதேபோல் தமிழர்கள் மீது அதிகாரத்தை வைத்திருந்த புலிகள் மீதும் அவர்களது சகபாடிகள் மீதும் விமர்சனங்கள் வைக்கப்படுவது தவிர்க்க முடியாதது. தமிழ் மக்களைப் பொறுத்தவரை மகிந்த ராஜபக்ச அரசு சிறிலங்கா அரசு பேரினவாத அரசு. இதனை தமிழர்கள் இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் அறிவர். அதனாலேயே தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பமானது. ஆனால் தமிழ் மக்களுக்கு விடுதலை பெற்றுத்தருவதாகக் கூறி தங்களை ஏகபிரதிநிதிகள் என்று அறிவித்த புலிகள் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள கோயில்கள் தமிழ் பள்ளிகள் பொது ஸ்தாபனங்கள் எல்லாவற்றையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அவற்றின் தனித்துவத்தை சிதைத்து இன்று அவை ஊழல் நிறைந்தவையாக உள்ளன.
தாங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலம்பெயர் ஏஜென்டுகள் என்று கூறி எவ்வதி கணக்கு வழக்குகளும் இன்றி இயங்குகின்றன. இவ்வாறே மே 18 வரை புலிகளின் வசம் இருந்த 300 மில்லியன் ஆண்டு வருமானத்தை ஈட்டும் 5 பில்லியன்வரையான சொத்துக்கள் தற்போது காணாமற் போயுள்ளது.
ஆனால் சச்சி அந்த சொத்துக்களைக் கேட்டு கட்டுரை எழுதவில்லை. குறுகியகால லீஸில் உள்ள இடத்தில் ஒரு மில்லியன் பவுண்களைச் செலவு செய்து மேற்கொள்ளப்படும் ஆலயத்திருப்பணி பற்றியே எழுதி உள்ளார். ஆகவே விவாதம் அது பற்றி அமைவதே பொருத்தமானது. ஆலயத்தின் ரஸ்டிகள் என்ன அரசியல் பின்னணி உடையவர்கள் என்பது இங்கு விவாதம் அல்ல. அப்படி இருந்தால் யார் புலி யார் எலி யார் சிங்கம் என ஆய்வு செய்யலாம்.
அஜித்ற்கு தாழ்மையான வேண்டுகோள் கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளப் பழகுங்கள். எங்கள் மீதோ தேசம் தேசம்நெற் மீதோ சேறடிக்கப்படுவது இது முதற்தடவையல்ல. எங்களுக்கு எதிராக மொட்டைக் கடிதங்கள் வந்தது. பின்னூட்டங்கள் வந்தது. எங்களுக்கு எதிராக இணையத்தளங்களே உருவாக்கப்பட்டு நடத்தப்பட்டது. பத்திரிகை கூட நடாத்தப்பட்டது. இந்தச் சலசலப்புக்கு எல்லாம் அஞ்சுவதாக இருந்தால் ஊடகங்களை நடாத்திட முடியாது.
சாந்தன்
இக்க்கட்டுரையாளர் ஏன் தேசத்தில் வந்து இதனை எழுதி கருத்துக்கேட்டு புத்தகம் அடிக்க நினைக்கிறார். நியாயமாகப் பார்த்தால் கோட்டுக்கு போக வேண்டுமல்லவா. மேலும் இவரின் கட்டுரையை பிரசுரித்த தேசம்நெற் எதிர்த்தரப்பாரிடம் அவர்களின் கருத்தையும் கேட்டதா? அதற்கு அவர்கள் என்ன சொன்னார்கள்? அதை ஏன் ஒரு disclaimer ஆக பிரசுரிக்கவில்லை. பத்திரிகை உலகத்தில் நாகரிகம் கருதிக்கடைப்பிடிக்கும் முறை அல்லவா அது!
NANTHA
ஆலயம் கட்டுவது வெளினாடுகளில் வியாபாரமாகிவிட்டது. அதனை செய்பவர்கள் பணத்தையே குறி வைக்கிறார்கள். இது “பொது சேவை”யாகப் படவில்லை.
Ajith
Mr jeyapalan,
It is not my purpose to attack your web. I don’t mind you work for Rajpakse or Fonseka. I am not belong to any political movement. Don’t play double game. Let make it clear about who you are, what your political motive. Don’t pretend that you are a balanced journalists. If you are honest about your motives, you must follow the code of conduct of journalism. If there is a corruption in the temple administration he should have gone to courts or you should have checked with other side. If it is proven in the courts, then you have the right to publish them. But your motive here is to bring conflict rather than bringing the fact.
Jeyabalan T
சாந்தன் கட்டுரையாளர் தெருவில் நின்று லண்டன் சிவன் கோவிலுக்கு கல்எறிபவர் அல்ல. அந்த ஆலயத்தின் தலைவராக இருந்தவர். அவருடைய கட்டுரையை பொதுநலன் அடிப்படையில் தேசம்நெற் பிரசுரித்து உள்ளது. கட்டுரையாளர் அந்த ஆலயத்துடன் மிக நெருங்கியவர். மேற்படி கட்டுரையில் அந்த ஆலயத்திற்கு உடன்பாடு இல்லையானால் அதனை மறுக்க வேண்டிய பொறுப்பு ஆலயத்தினுடையது. அவ்வாறு அவர்கள் தரும் மறுப்பறிக்கையை வெளியிடாமல் இருந்தால் அது தேசம்நெற் இனுடைய தவறு.
பத்திரிகை உலக நாகரீகத்தில் இதுவும் அடக்கம். லண்டன் சிவன் கோவில் ஸ்தாபகருடைய குற்றச்சாட்டுக்கு அதன் தற்போதைய நிர்வாகம் பதிலளிக்கும் பட்சத்தில் அதனை நிச்சயம் பிரசுரிப்போம். ஆலயத்தின் ஸ்தாபகர் பொதுத்தளத்தில் வைக்கும் குற்றச்சாட்டுக்கு ஊடகம் சென்று விசாரணை வைக்க வேண்டிய அவசியம் இல்லை. பொறுப்பான ஆலய நிர்வாகம் அதற்குப் பதிலளிக்க வேண்டும். அந்தப் பதிலை பதிவு செய்வதற்கான வெளி தேசம்நெற் இல் எப்போதும் திறந்தே இருக்கும்.
தேசம்நெற் ஒரு விடயத்தை துருவி வெளியிடும் போது சம்பந்தப்பட்ட இரு தரப்பினது கருத்துக்களையும் அறிவதற்கான அனைத்து முயற்சியையும் எடுக்கும். ஒரு அமைப்பைச் சார்ந்தவர் தான் சார்ந்த அமைப்புப் பற்றி விமர்சிக்கும் கட்டுரைக்கு தேசம்நெற் விசாரணை செய்வதிலும் அவ்வமைப்பினர் அதற்கான விளக்கத்தை அளிப்பதே பொருத்தம்.
Jeyabalan T
அஜித் உங்கள் எழுத்துக்களிலேயே தடுமாறுகின்றீர்கள். //It is not my purpose, I don’t mind, I am not belong to, Don’t play, Don’t pretend // நீங்கள் ஒரு கெட்டித்தனமான சிந்தனையாளர் என்று நினைத்து தகிடுதத்தம் செய்கின்றீர்கள். நீங்கள் சொற்சிலம்பாடுகிறீர்களே அல்லாமல் வாதத்தை வைக்கவில்லை. சின்னப் பையன்கள் பள்ளியில் சண்டைபிடிப்பது போல் ‘நீ யார் தெரியுமா? நான் யார் தெரியுமா?’ என்பதை ஆங்கிலத்தில் எழுதி இருக்கிறீர்கள்.
அதென்ன புதுக்கதை நீதிமன்றம் சென்றுதான் ஊடகங்களில் செய்தி வெளியிட வேண்டும் என்று அதுக்கு நீங்கள் ஊடகவியல் பற்றி பாடம் எடுக்க வேறை வெளிக்கிட்டாச்சுது. உலகத்தில் வெளியாகிற எந்தப் பத்திரிகையையாவது எடுத்து அந்தப் பத்திரிகையில் ஒரு 5 வீதம் நீதிமன்றச் செய்திகள் வருவதை சுட்டிக்காட்ட முடியுமா? சில வேளை அவர்கள் ஒருவரும் உங்களிடம் ஜேர்னலிஸம் படிக்காதவர்களாக இருக்கலாம். ஆகையால் உங்களிடம் ஜேர்னலிஸம் படித்த ஊடகவியலாளரைக் கூறுங்கள் அவருடைய ஊடகத்தில் 100 வீதம் நீதிமன்றச் செய்தியைத்தான் பிரசுரிக்கின்றாரா பார்க்கலாம்.
அஜித் விதண்டாவாதம் செய்வதாக இருந்தால் எப்படியும் செய்யலாம்.
பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய (Expenses Claim) எக்ஸ்பென்சஸ் க்ளைம் டெய்லிரெலிகிராபில் (Daily Telegraph) பிரசுரிக்கப்பட்டது அறிந்திருப்பீர்கள். அந்த ஊடகம் நிதிமன்றத்துக்குச் சென்று அதன் பின் அவற்றை பிரசுரிக்கவில்லை. அந்த ஊடகம் பிரசுரித்த பின்னரே பாராளுமன்றக்குழு அது பற்றி ஆராய்ந்து அதில் யார் தவறுவிட்டனர். யார் மீது நடவடிக்கை எடுப்பது என்பதை தீர்மானித்தனர்.
‘கேட்கிறவன் கேனையன் என்றால் எலி ஏரோப்பிளென் ஓட்டும்’ என்பதுபோல எல்லோரும் ஜேர்னலிஸம் படிப்பிக்க வெளிக்கிடக்கூடாது.
சாந்தன்
//…சாந்தன் கட்டுரையாளர் தெருவில் நின்று லண்டன் சிவன் கோவிலுக்கு கல்எறிபவர் அல்ல. ..//
ஜெயபாலன் இங்கே பிரச்சினை அதுவல்ல. நீங்கள் பத்திரிகைத்துறையில் நீண்டகாலமாக இருப்பவர். ஒரு ‘முறைகேடு’ சம்பந்தமாக ‘தனிமனிதர்’ ஒருவர் ’குற்றச்சாட்டு’ ஒன்றுடன் பத்திரிகை ஒன்றுக்கு வரும்போது அப்பத்திரிகையின் எடிற்ரருக்கு எதிர்த்தரப்பை தொடர்பு கொள்ள வேண்டிய எல்லோரும் அடிக்கொருதடவை சொல்லிக்கொள்ளும் ‘தார்மீக கடமை’ உண்டல்லவா?
சாதாரணமாக இங்கே புலம்பெயர் நாடுகளில் இவ்வாறான செய்திகளை வெளியிடும்போது செய்தி முடிவில் ‘நாம் இதற்கு கருத்துக்கூறும்படி எதிர்த்தரப்பிடம் கேட்டோம். அவர்கள் மறுத்து விட்டனர்’ என அறிவிப்பது சாதாரனமாக நடப்பது. இதற்கு மேல் என்னிடம் சொல்ல ஒன்றுமில்லை!
Jeyabalan T
சாந்தன் உங்கள் பதிலுக்கு நன்றி. //ஒரு ‘முறைகேடு’ சம்பந்தமாக ‘தனிமனிதர்’ ஒருவர் ’குற்றச்சாட்டு’ ஒன்றுடன் பத்திரிகை ஒன்றுக்கு வரும்போது …//
1. இக்கட்டுரையாளர் தனிமனிதரல்ல அந்த நிறுவனத்தின் ஸ்தாபகர்.
2. தேசம்நெற் ஆசிரியர்கள் செய்தியாளர்கள் செய்தியையோ கட்டுரையையோ எழுதவில்லை.
அதனால் எதிர்த்தரப்பை நாம் விசாரிக்க வேண்டிய பொறுப்பு ஊடகத்திற்கு இல்லை.
3. இலங்கைக்கு எதிரான மனித உரிமை தீர்மானத்தில் ஐநா தவறுவிட்டதை லூயில் ஆர்ப்பர் அம்மையார் கண்டித்து இருந்தார். அவர் ஐநா மீதும் அதன் செயலாளர் நாயகம் பான்கி மூன் மீதும் குற்றம் சுமத்தி இருந்தார். அண்மையில் வெளியான இச்செய்தி பெரும்பாலான ஊடகங்களில் வெளியாகி இருந்தது. செய்தி வெளியிட்ட ஊடகங்கள் பெரும்பாலும் ஐநா வின் பதிலையோ பான்கி மூன்னி பதிலையோ கேட்டிருக்கவில்லை. செய்தி வெளியான பின்னரே ஐநாவும் பான்கி மூனும் தங்கள் அபிப்பிராயத்தை வெளியிட்டனர்.
சாந்தன்
//…1. இக்கட்டுரையாளர் தனிமனிதரல்ல அந்த நிறுவனத்தின் ஸ்தாபகர்….//
அதற்காக அவரின் ‘குற்றச்சாட்டுகளை’ மறுதலிக்க மறுபக்கத்துக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்குவது தேவையில்லாத ஒன்றா? பரவாயில்லை அவ்வாறே வைத்துக்கொண்டாலும் அவரே வாசகர்கள் கருத்துகளை சொல்லுமாறும் (விமானத்தபாலில் கூட அனுப்பும்படி- அவ்வளவு அவசரம்!) அவற்றை ஒரு புத்தகமாக வெளியிடப்போவதாகவும். இது அவருக்கு ‘லாபம்’ விளைவிக்கும் செயலல்லவா? அதாவது ஓசி விளம்பரம். அதற்கு தேசம் வழி செய்து கொடுக்கி்றது. மேலும் கருத்துகளை அவரின் தனிப்பட்ட மின்னஞ்சலுக்கோ அன்றி தனது தனிப்பட்ட விலாசத்துக்கோ அனுப்பும் படி கோரி உள்ளார். ைதை அவர் ஒரு புதகமாக அடித்து தனக்கு ஆதாயம்/விளம்பரம்/நியாயம் தேடப்போகிறார். இவர் கருத்துகளை மறுதலித்து எழுதும் கருத்துகளை அப்புத்தகத்தில் பதிப்பிப்பார் என நினைக்க முடியுமா? அவ்வாறு செய்வார் என தேசம் உறுதி அளிக்குமா?
//…2. தேசம்நெற் ஆசிரியர்கள் செய்தியாளர்கள் செய்தியையோ கட்டுரையையோ எழுதவில்லை.அதனால் எதிர்த்தரப்பை நாம் விசாரிக்க வேண்டிய பொறுப்பு ஊடகத்திற்கு இல்லை…//
அதுதான் பிரச்சினையே. ஒருவர் ஒரு கட்டுரை எழுதிதந்தால் அதை சரிபார்க்க வேண்டிய பொறுப்பு கட்டுரை வெளியிடும் நிறுவனத்துக்கு உண்டு. அவ்வாறு நீங்கள் சொல்லுவீர்களாயின் ஏன் வாசகர்களின் கருத்துகளை மட்டிறுத்தல் செய்கிறீர்கள்? மறுபக்கம் பதில் எழுதும்வரை பொறுத்து அதனை வெளியிடலாம் அல்லவா?
/…இலங்கைக்கு எதிரான மனித உரிமை தீர்மானத்தில் ஐநா தவறுவிட்டதை லூயில் ஆர்ப்பர் அம்மையார் கண்டித்து இருந்தார். அவர் ஐநா மீதும் அதன் செயலாளர் நாயகம் பான்கி மூன் மீதும் குற்றம் சுமத்தி இருந்தார். அண்மையில் வெளியான இச்செய்தி பெரும்பாலான ஊடகங்களில் வெளியாகி இருந்தது. செய்தி வெளியிட்ட ஊடகங்கள் பெரும்பாலும் ஐநா வின் பதிலையோ பான்கி மூன்னி பதிலையோ கேட்டிருக்கவில்லை. செய்தி வெளியான பின்னரே ஐநாவும் பான்கி மூனும் தங்கள் அபிப்பிராயத்தை வெளியிட்டனர்…//
ஆம் அது செய்திஆசிரியரால் (அதனை வெளியிட்ட பத்திரிகைக்கு வேலை செய்யும்) எழுதப்பட்டது. அது செய்தி. தேசத்தில் இருக்கும் இது ஒரு ஒருபக்க சார்பான குறறச்சாட்டுகளைச் சுமத்தும் கட்டுரை. மேலும் திருமதி லூஜி ஆபர் சொன்ன கருத்துகளை வைத்து எழுதப்பட்ட செய்தி. நான் பலமுறை ஐ.நா செய்தியாளர் கருத்தரங்கில் கலந்து கொண்டிருக்கிறேன் அப்போதெல்லாம் இவ்வகை சிக்கல் வரும்போது நிச்சயமாக ஐ.நா தரப்பிடம் கருத்துக்கேட்பார், ஐ.நா அதற்கு பின்னர் பதிலளிப்பதாக சொல்லுவார். இதனை ஒரு Op-Ed ஆக எழுதி இருந்தால் கூட பரவாயில்லை நீங்கள் சொல்வதை ஏற்கலாம். அவ்வாறு நிகழும் பட்சத்தில் கூட லூஜி ஆர்பர் என்னை “வெளியில் போட்டு விட்டனர்”, ”எனக்கு துரோகம் செய்தனர்” எனும்படியாக இல்லை. மேலும் அவர் ஐ.நா வினால் உத்தியோக பூர்வமாக அனுப்பப்பட்டவர். ஒரு நாட்டில் நிகழ்ந்த மானிடப்படுகொலை சம்பந்தமாக தானது அவதானங்களில் இருந்து தனது கருத்தைத் தெரிவித்திருந்தார், அதைப்போய் கோயில் கட்டுவதில் இருக்கும் கருத்து வேறுபாடுகளுடன் ஒப்பிடுகிறீர்களே?
pahee
You spent lots of money for this purpose but you can give this for another purpose. For exampleyou can built a appartment for house lss people in your mother land and occupaid poor people or your relatives.That gives plenty of peaceful mind to you.
thurai
தேசம் இணையத்தளம் புலிகளின் சர்வாதிகாரம் உலகம் முழுவதும் நடந்து கொண்டிருந்த காலத்தில் தொடங்கப்பட்டது. தமிழர் தமது கருத்துக்களை அச்சமின்றி வெளிக்கொண்டு வருவதற்கு பெருமுதவியாக இருந்தும் இருப்பதும் தேசம் போன்ற ஊடகங்களேயாகும்.
புலிகளின் அடக்குமுறையினாலேயே இங்கு நாம் முகமூடியுடன் எழுதிக்கொண்டிருக்கின்றோம். நாட்டிற்கு நல்ல கருத்துக்களை வழங்கக் கூடியோரும் பயனுள்ளோரும் வளராமல் தடுத்தது புலியின் பயங்கரவாதமே.
ஈழத்தமிழரின் கருத்துச் சுதந்திரம்கூட இன்னமும் விடுதலை பெறவில்லை. இதனை அழித்தவர்கழும் அடக்கியவர்கழும் புலிகளேயாகும் சிங்கள்வர்களல்ல.
இந்த நிலையில் ஓர் ஊடகம் வழி திறந்து விட்டதென்றால் அது புலிகளிற்கு ஆனந்தமாக இருக்குமா? எனவே புலியினை ஆதரிப்போர் தேசம் இணயத்தளத்தின் மீதும் அதன் ஆசிரியர் மீதும் எந்த வகையான குற்றச்சாட்டும் சொல்வதற்கு அருகதையற்ரவர்கள்.
துரை
ponniah
Gone for a bath but put mud all over the head. This is what you all do. I do not know why you talk about National leader.
Please this is our hindus matter and non one else has the right to make comments.
Who knows about Dr. Sriskantharajah and what he does. He does not say but acts. He came from highly religious background and whao has proof that he takes what he cant do. He does what he is capable of doing. He is an Engineer in UK. He is also econimist. He never collects money and rob them. He does not need money. Those who makes comment about him will regret soon.
Lewisham tamilan
நம்மமைப் போல பலர் 80ன் நடுப்பகுதியில் அகதிகளாக வந்து லூசியத்தில் குடியேறினோம். எம்மை இங்குள சிட்டிசன் டமிலர் ” நீ ரிபூஜியா? பிளக்கில்நாட்டுக்கு வந்தனியா? என கூசாமல் கேட்பார்கள்.எம்மை ஒரு புளுவை பார்த்தமாதிரித்தான் பார்பார்கள்.டெம்மை வைத்து பிழைப்புநடத்த கட்டிய கோவில் தான் இது.இந்த அறங்காவலர்கள் யாவரும் “நல்ல வியாபாரிகள்” எனக்கு சட்டிக்கும் பானைக்கும்நிறத்தில் வித்தியாசம் தெரியவில்லை.
Ajith
நான் முன்னின்று தொடங்கிய கோயிலின் விருத்தியிலும் நிர்வாகத்திலும் நான் பங்குகொள்ள முடியாதநிலை என்னை வெகுவாகப் பாதித்துள்ளது. மேலும் கோயில் நிர்வாகம் செல்லும் போக்கையும் பொறுக்க முடியாது ஈசனிடமே எம் அடியார்கள் மூலம் விண்ணப்பிக்க ஒரு நூலை வெளியிட எண்ணியுள்ளேன். எனவே மேற்கூறிய உண்மை விபரங்கள் எல்லாம் அடங்கிய இலண்டன் சிவன்கோயில் வரலாற்று நூல் வெகுவிரைவில் வெளிவரவுள்ளது. இந்நூலில் இதுவரை பொதுமக்கள் அறியாத எல்லா விடயங்களையும் கூறலே நலம்.
Mr Satchi,
YYou can contribute to the temple whatever the way. Your behaviour is not acceptable to the principles of hinduism. You were ousted from the trustee long time back and you are now alone. None of the members that you claim introduced are with you. There may be valid reason for not including you in the trustee because you want to dictate your authority in the temple. If your claim is justified, at least a few of those who were with you would have joined you or public would have given their support to you. I can remember you started your campagin again this trustee the day you ousted. I have seen you distributing notices for long. If you have any legal issues or large scale corruption is going, you should have gone to the courts or public protest. I understand you tried court option as well. My understanding is that temple construction work has almost reached the final stages. You wants to take revenge or ousting you from the authoritarian rule. If you a gentleman, and if you believe that temple is for good for theople leave aside and do some usefil charitable work. Don’t fall into the hands of those who try to use you as means of destroying the purpose that you started.