வவுனியா அகதி முகாம்களிலிருந்து வெளியேறிய மக்களுக்கான உணவு நிவாரணம் நிறுத்தப்பட்டுள்ளது. முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட மக்களுக்கு ஆறு மாத காலமே உணவு நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு மீள்குடியேற்றப்பட்டு ஆறு மாதங்கள் கடந்த நிலையிலுள்ள மக்களுக்கே இந் நிவாரணம் நிறுத்தப்பட்டுள்ளது.
வவனியா மற்றும், யாழ்.குடாநாட்டிலுள்ள அகதி முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட மக்கள் யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் தங்கள் உறவினர் நண்பர்கள் வீடுகளில் இன்னமும் வசித்து வருகின்றனர். இவ்வாறானவர்களில் முல்லைத்தீவுப் பகுதிகளில் இன்னமும் மீள் குடியேற்றப்படாதவர்களுக்கு கிளிநொச்சிப் பகுதிகளில் அழிவடைந்த. சேதமுற்ற தங்கள் வீடுகளை மீளமைத்துக்கொள்ள முடியாதவர்களும் அடங்குகின்றனர்.
ஆறுமாத காலத்திற்குள் அம்மக்களுக்கான இழப்பீடுகள் வழங்கப்பட்டு அவர்களுக்கான தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் எனவும், இதனடிப்படையில் ஆறுமாத காலத்திற்குப் பின்னர் அவர்களுக்கான உணவு நிவாரணம் நிறுத்தப்படும் எனவும் முன்னர் வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தன.
ஆனால், எவ்வித இழப்பீடுகளோ, தொழில்களுக்கான உதவிகளோ அம்மக்களுக்கு வழங்கப்படவில்லை. இந்நிலையில், உணவு நிவாரண உதவியிலேயே அவர்கள் பெரிதும் தங்கியிருந்தனர். தற்போது இந்நிவாரணம் நிறுத்தபட்ட நிலையில் பாதிக்கப்பட்ட இம்மக்கள் மேலும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
rohan
இம் முடிவை நாம் வரவேற்கிறோம். அதிக காலம் அரசுநிவாரணம கொடுத்துக் கொண்டிருந்தால் மக்கள் சோம்பேறிகள் ஆகி விடுவர். தமிழர்களைத் தமது சகோதரர்களாகக் கருதும் மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் பாராட்டுக்கு உரியவர்.
அரசாங்கத்திடம் காசு வேறு இல்லை. இப்போது தான் ஜனாதிபதி ஒரு சர்வதேசப் பட விழா நடாத்தி முடித்திருக்கிறார். விவேக் ஒபராய் தவிர யாருமே ஒத்துப் போகவும் மறுத்து விட்டார்கள். வன்னியில் தானே பாலும் தேனும் வாய்க்கால் வழியோடி வரப்புகள் மீறி வழிந்தோடுகிறது. அவர்களுக்கு ஏன் மேலதிக உதவிகள் தேவைப்படுகின்றன?
BC
இப்படி எல்லாம் இந்த மக்களுக்கு நிவாரணமோ உதவிகளோ கிடைக்காமல் துன்பபடும் நிலை வருவதற்காக தானே இலங்கையில் இருந்து குத்தரிசியும் வாங்காதீர்கள்! இலங்கை பன்ரிஸ்சும் வாங்காதீர்கள்! என்று புறக்கணிப்பு நடத்துகிறார்கள். அங்கே மக்களுக்கான துன்பம் இங்கே புலிகளின் சுருட்டலுக்கான வசதி.
rohan
“இப்படி எல்லாம் இந்த மக்களுக்கு நிவாரணமோ உதவிகளோ கிடைக்காமல் துன்பபடும் நிலை வருவதற்காக தானே இலங்கையில் இருந்து குத்தரிசியும் வாங்காதீர்கள்! இலங்கை பன்ரிஸ்சும் வாங்காதீர்கள்! என்று புறக்கணிப்பு நடத்துகிறார்கள்.” / பிசி.
இப்படியான பகிஸ்கரிப்புப் போராட்டங்களில் எல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது. பிச்சை எடுக்க இடமே இல்லாத வட கொரியாவும் அமெரிக்காவின் தடைகளால் முனை முறிக்கப்பட முடியாது நின்ற கியூபாவும் இத்தனை கூத்து அடிக்கும் பர்மாவும் ஒரு கிலோ பாண் வாங்க பல கிலோ (அல்லது பல மில்லியன் டொலர்) பணம் தேவைப்படும் ஸிம்பாப்வேயும் இன்னமும் விழுந்து விடவில்லை.
ஒரு சில்லறைத் திரைப்பட விழாவுக்கு இவ்வளவு மில்லியன் (பில்லியன்?) செலவு செய்த இலங்கைக்கு குத்தரிசி விற்றுத் தான் வீடு கட்டித் தரச் சில்லறை சேர்க்க வேண்டி இருக்கிறதா?
NANTHA
தங்களாகவே முகாம்களை விட்டு வெளியேறியவர்கள் உதவிகள் கோர முடியாது. இது புரியாதவர்கள் கதைத்துப் பயன் கிடைக்காது.
இன்னமும் முகாம்களை விட்டு வெளியேற மாட்டோம் என்று பலர் இருக்கிறார்கள்.
அங்குள்ள நிலைமைகள சரிவர தெரிந்து கொள்ளாது செய்தி தலைப்புக்களை போட்டு தேவையில்லாத விமர்சனங்களை வெளியிட்டு யாருக்கும் பயன் கிடைக்காது!
Rohan
“அங்குள்ள நிலைமைகள சரிவர தெரிந்து கொள்ளாது செய்தி தலைப்புக்களை போட்டு தேவையில்லாத விமர்சனங்களை வெளியிட்டு யாருக்கும் பயன் கிடைக்காது!”
விளங்கிக் கொண்டால் சரி தான்.
Ajith
It is true tamils should not expect anything from the Sinhala state. Sinhala state had real terrorism in 1972 and 1989. Did Sinhala state destroy the Sinhala nation? No. Sinhala state is for Sinhala people only. For them, tamils are slaves. They have to live with whatever they give. This is the situation in our land and reality. Every tamil understand this reality. As long as the occupation continues nothing will change. Whatever the money goes in the hands of Sinhala state, it is for Sinhalese.