அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்தியாவால் தேடப்படும் குற்றவாளி அல்லவென்று அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்திய அரசின் குற்றச்சாட்டுகளிலிருந்து அமைச்சர் தேவானந்தா விடுவிக்கப் பட்டுள்ளதால் அவரை தேடப்படும் குற்றவாளியெனக் கூற முடியாது என அமைச்சர் குறிப்பிட்டார்.
அனுமதியின்றி ஆயுதங்களை வைத்திருப்பதற்கு எதிரான தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தின்போதே அமைச்சர் குணவர்தன மேற்கண்டவாறு கூறினார். இந்தப் பிரேரணையில் உரையாற்றிய ஐ. தே. க. எம்.பி. ஸ்ரீரங்கா, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்தியாவால் தேடப்படும் ஒரு குற்றவாளியெனவும், அவ்வாறான சர்வதேச குற்றவாளியொருவருடன் ஜனாதிபதி இந்தியா சென்றுள்ளதாகவும் கூறினார். இந்தக் கூற்றை அமைச்சர் தினேஷ் குணவர்தன கடுமையாக எதிர்த்தார். அமைச்சர் டக்ளஸ் குற்றமற்ற நிரபராதி எனவும் அமைச்சர் கூறினார்.
BC
புலி ஆதரவாளர்கள் டக்ளஸ் இந்தியாவில் இருந்து தப்ப முடியாது என்ற அளவில் செய்தி வெளியிட்டார்கள். மிகவும் மன நிலை பாதிப்புக்குள்ளாகியுள்ளார்கள். டக்ளஸ் என்ன சொல்கிறார் என்றால் சேறு வீசினால் அது தன் மீது விழும்போது சந்தணமாக மாறும் என்றும் கற்களை வீசினால் அது பூக்களாக விழுந்து மணம் வீசும் என்று.
Rohan
“அமைச்சர் தேவானந்தா தேடப்படும் குற்றவாளியெனக் கூற முடியாது” என அமைச்சர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டது சரி தான். ஆனாலும், “அமைச்சர் டக்ளஸ் குற்றமற்ற நிரபராதி” என அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறியதும் தவறே.
குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர் குற்றவாளி அல்லர். ஆனால் ‘குற்றமற்ற நிரபராதி’ என்று எப்படி?
thurai
//குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர் குற்றவாளி அல்லர். ஆனால் ‘குற்றமற்ற நிரபராதி’ என்று எப்படி?//றோகன்
புலிகள் புலிகளிற்கெதிரா எழுதுவோரையும், பேசுவோரையும் தமிழரின் துரோகிகள் என்று எப்போதுமே பேசிவருகின்றார்கள். துரோகிகளென எவ்வாறு இந்தப் பயங்கரவாதப் புலிகள் நிரூபிக்கின்றார்கள் என்பதை விளக்குவீர்களா?
துரை
Ajith
The whole Sinhala state found guilty of war crimes in the international court. Probably Indian government is also part of that crime. It is sad that both India and Sri Lanka are ruled by criminals. Justice from Criminals??
பல்லி
//அமைச்சர் டக்ளஸ் குற்றமற்ற நிரபராதி” //
இது பற்றிய விவாதம் செய்ய பல்லி வரவில்லை; ஆனால் தன்னை இந்தியா எப்படி அணுகும் என தெரியாத நபர் அல்ல தோழர்;
jimmy
அஜித் இந்தியா மட்டுமல்ல அமெரிக்கா செய்ததும் part of crime தான் தலைவருக்கு கப்பல் அனுப்புறதெண்டு ஏமாத்திப் போட்டாங்கள்
NANTHA
எந்த “இன்டர்னாஷனல்” கோர்ட்டில் இலங்கை “குற்றவாளி” என்று உலகத்துக்கே தெரியாத ஒரு விஷயத்தை ஒருவர் சொல்கிறார். பாவங்கள். விவகாரங்களே தெரியாதவர்கள்!
chandran.raja
ஒவ்வொருவரும் சாதகமான கருத்தை முன்வைக்கும் போதுதான் நானும் சாதகமான கருத்தை முன்வைப்பேன் என்று சொன்னால் அது கருத்தே அல்ல. கருத்தை கருத்தாகவே கையாளவேண்டும் அந்த கருத்து மக்களின் நலன் கொண்டதாக இருக்கும் போது அது அசுரபலத்தைப் பெறுகிறது. கருத்தும் இறப்பில் இருந்து விடுவிக்கப் பட்டு நித்தியமாகிறது.
அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தாக்கு புலம்பெயர் தமிழரும் தமிழ்நாட்டு சினிமாக்கூட்டமும் மதிப்புக்குரிய மகிந்தா ராஜயபக்சாவுக்கு மேற்குலத்தாலும் கொடுக்கப்பட்ட இடையூறுகளும் துன்பங்களும் வெறும் சதாரணமானவை யல்ல. ஒருவருக்கு தமிழ்இனத்துரோகி என்றும் மற்றவருக்கு சர்வதேச போர்குற்றவாளி என்றும் பலகோடி ரூபாய்களை செலவழித்து தீர்ப்பு சொன்னார்கள். தீர்ப்பு சொன்னவர்களும் அதன் கூக்குரல்களும் இன்னும் அடங்கவில்லை யாயினும் இனிவரும் காலத்தில் அது சக்தியிழந்து ஆடியடங்கி போய்விடுமென்பது தான் உறுதி!.
பல்லாண்டுகாலமாக நடந்து கொண்டிருந்த உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு கொண்டுவந்ததில் தேவானந்தாவும் மகிந்தா ராஜபக்சாவும் தீர்க்கமான பாத்திரத்தை வகித்திருக்கிறார்கள். டக்கிளஸ் தேவானந்தாவும் அவனது தோழர்களும் “என்னதான் நேரிடினும்” நாட்டைவிட்டு வெளியேறுவதில்லை உறுதிபூண்டிருந்தார்கள்.மகிந்தா ராஜபக்சாவோ “யார் என்னதான் தீர்ப்புகூறினிலும்” அதற்கான தீர்ப்பை ஏற்றுக்கொண்டு தூக்குமேடைக்கும் ஏறத்தயாராக இருக்கிறேன் என்றார்.ஆகா..இவர்கள் அல்லவா? இலங்கைதீவின் மைந்தவர்கள். இவர்களால் அல்லவா? எமது வாரிசுகள் கல்வி கற்கச்செல்வதற்கும் ஆசிரியன் பாடம் நடத்துவதற்கும் வழி சமைத்துவிட்டவர்கள்.இவர்கள் நீடுழி வாழ்க!.
ஓ!இலங்கைத்தீவே!. ஐக்கியப்பட்ட இலங்கைத்தீவில் ஓர்இனமும் ஒருமதமும்மாக இருக்க உன்னை வாழ்த்துகிறேன்.வடக்கும் தெற்கும் பல்லினமக்களின் தேசமென முழங்கட்டும்சங்கே!. இதன் ஒலிகேட்டு ஓடட்டும் பிரிவினைவாதிகளும் பிழைப்புவாதிகளும்.
NANTHA
மேதகு தலைவருக்கு “மாளயம்” கொடுக்கக் கூட முடியாதவர்கள் டக்லஸ் தேவானந்தாவைப் பற்றி கதைத்து சாதிக்க எதுவுமில்லை.