கிளிநொச்சியில் மீள்குடியேறிய மக்களுக்கான இலவச மருத்துவ முகாம் நாளை (17-06-2010) நடைபெறவுள்ளது. கிளிநொச்சி கனகபரம் மகாவித்தியாலயத்தில் காலை 9 மணி தொடக்கம் மாலை 3 மணிவரை இம்மருத்துவ முகாம் இடம்பெறவுள்ளது.
கண். பல். காது, மூக்கு, தொண்டை மருத்துவம், மகப்பேறு, பெண்களுக்கான நோய்கள், இதயநோய், புற்று நோய் உட்பட அனைத்து நோய்களுக்கான மருத்துவ சேவைகளும் நடைபெறும் என கிளிநொச்சி பிராந்தி சகாதார சேவைகள் பணிப்பாளர் ஈ.தேவநேசன் தெரிவித்துள்ளார்.
மேற்படி நோய்களுக்கான வைத்திய நிபுணர்கள், நவீன உபகரணங்களுடன் சமுகமளித்து சிகிச்சையளிக்கவுள்ளதாகவும், கிளிநொச்சி நகரிலிருந்து கனகபரம் பாடசாலை வரை நோயாளிகளுக்கான வாகன வசதிகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.