ஜே.வி.பியினர் வன்னியில் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று (June 16 2010) யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இன்று பிற்பகல் 2 மணியளவில் ஊடகவியாலாலர்களுடன் சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க உரையாற்றினார்.
வன்னியில் மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் சரியான உதவிகளை வழங்கவில்லை எனவும் ஏ-9 பாதையின் இரு மருங்கும் அழகாக காட்சிதரும் நிலையில் உள்ளே சென்று பார்க்கும் போதே மக்களின் அவல நிலை தெரிகிறதென்றும் அவர் கூறினார். பாதிக்கப்பட்ட தமிழ் மக்களைச் சந்திப்பதற்கு யாருடைய அனுமதியையும் பெற வேண்டிய அவசியமில்லை எனவும் குறிப்பிட்ட அவர் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் அது தோன்றியதற்கான காரணிகள் களையப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.
இதே Nவைளை, வன்னியில் மக்களின் அவல நிலைகள் குறித்து அம்மக்களுடன் கலந்துரையாடி ஆராய்ந்தாகவும், அம்மக்களின் மிள்குடியேற்றம் மற்றும் அம்மக்களுக்கான அரசியல் திர்வு குறித்து எதிர்காலத்தில் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க ஜே.வி.பி தீhமானித்துள்ளதாகவும் ஜே.வி.பியின் தமிழ் உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பியினர் நேற்று கிளிநொச்சி, இரணைமடு, தர்மபுரம், பரந்தன் ஆகிய பகுதிகளில் மீpள் குடியேற்றப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். மிள்குடியேற்றபட்ட மக்கள் தங்களின் பிரச்சினைகள் குறித்தும், காணாமல் போன தங்களின் உறவினர்கள் குறித்தும், தடுப்புக் காவிலுள்ளவர்களின் விடுதலை குறித்தும் தங்களுடன் கலந்துரையாடியதாகவும் அத்துடன் விடுதலைப் புலிகளின் ‘தமிழீழ வைப்பகம்’ வங்கியில் அடைவு வைக்கப்பட்ட தங்களின் நகைகளை மீட்டுத்தர உதவுமாறும் ஜே.வி.பியினரிடம் கூறியதாகவும் ஜே.வி.பியினர் தெரிவித்துள்ளனர்.
தமிழீழ வைப்பகத்தில் அடைவு வைக்கப்பட்ட மக்களின் ஒரு தொகுதி நகைகளை படையினர் மீட்டுள்ளதாக முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.