இம்முறை மண்ணை வளப்படுத்தி, எல்லா இடங்களிலும் உயிர்களை வளப்படுத்துவோம் எனும் தொனிப் பொருளில் உலகெங்கும் இத்தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
பாலைவனமாதல் தொடர்பான உண்மை நிலவரத்தை மக்களுக்குத் தெளிவுபடுத்தி நிலங்கள் தரமிழத்தல் மற்றும் வரட்சி காரணமாக உயிர்ப்பல்வகைமைக்கு ஏற்படும் இழப்பைத் தடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதை இத்தினம் அடிப்படையாகக் கொண்டது.
ஏனெனில் வளமான மண் இருந்தால் மட்டுமே உயிர்கள் நிலைக்க முடியும். ஒவ்வொரு தனிநபரும் மண்ணை எங்ஙனம் பயன்படுத்துகிறார் என்பதிலேயே மண்ணின் ஆரோக்கியம் தங்கியிருக்கிறது.
நாம் உண்ணும் உணவின் அளவையும் தரத்தையும் கூட நாம் மண்ணில் மேற்கொள்ளும் செயற்பாடுகளே தீர்மானிக்கின்றன. அவற்றின் அடிப்படையிலேயே, சூழல்தொகுதி எமக்கு வழங்கும் சேவைகளும் அமைந்து விடுகின்றன.
chandran.raja
சகாரா பாலைவனத்தில் இருந்து சூரியஒளியை பெற்று உலகத்திகே ஒளிவழங்க முடியும் என்று இதற்கு பொறுப்பான அறிவாளிகள் கருத்து கூறுகிறார்கள். அதற்கான வேலையும் ஆரம்பிக்கப் பட்டுவிட்டது. இது ஒருபுறம் இருக்க… இந்த பரந்த பாலைவனம் ஒரு காலத்தில் பெரும் மழைகாடுகளாக இருந்தாக ஆதாரங்களுடன் நிரூபிக்கிறார்கள் பூலோக ஆய்வாளர்கள்.
ஆகவே இன்பமும் துன்பமும் வாழ்வும் மரணமும் பிரமனின் வலது கையில் ஏந்தியுள்ள சக்கரத்தை குறிப்பிடுகிறதா?. அல்லது பூமிமனிதனுக்கு சொந்தமில்லை பூமிக்குதான் மனிதன் சொந்தம் என்ற அந்த பத்தொன்பதாம் நாட்டு செவ்விந்தியகிழவன் சொன்னது உண்மையா?.
இல்லையேல் மாமேதை கால்மாக்ஸ் சொன்னது போல வாழ்ழும்வரை வாழுவோம் ஆதாயத்திற்கான உற்பத்தியை முடிவுக்கு கொண்டு வந்து தேவைக்கான உற்பத்தியை நடைமுறை படுத்துவதின் மூலமே நாம்வாழும் இந்த பூமியின் வாழ்நாளை அதிகரிக்க முடியும் என்ற கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளுவதா? இதற்கான விடை சுலபமானதல்ல. இதையும் வாசகர் தெரிவுக்கே விட்டு விடுவோம்.