குவைத் இளவரசர் ஷேக் பாசல் (52), அவரது மாமாவால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். கார் வாங்குவது தொடர்பாக இருவருக்கும் ஏற்பட்ட தகராறின் காரணமாக இளவரசரின் மாமா அவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இளவரசரின் உடல் நேற்றே அடக்கம் செய்யப் படுமென குவைத் அரசு தெரிவித்திருந்தது. கொலை குறித்து உடனடி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக குவைத் அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே, இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. பலமுறை துப்பாக்கியால் சுட்டும் குவைத் இளவரசர் சையிக் பாசல் தப்பி விட்டார்.
தற்போது துப்பாக்கி குண்டுக்கு பலியாகி விட்டார் என்ற தகவல் விசாரணையில் தெரிய வந்துள்ளது.சுட்டுக் கொல்லப்பட்ட இளவரசர் ஷேக் பாசல் குவைத்தின் 12 வது அரசர். ஷேக் ஷாப் அல்சலீம் அல்சபாவின் பேரன் ஆவார். இளவரசர் ஷேக் பாசலின் கொலைக்கான காரணம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.