தோட்டங்களில் வேலைக்கமர்த்தப்படும் பெண்கள் கர்ப்பம் தரித்துள்ளனரா என சோதிக்கப்படுகிறார்கள்!

மலையகத் தோட்டப் பகுதிகளில் உள்ள இளம் பெண்கள் தோட்டத் தொழிற்துறையில் வேலைக்கமர்த்துவதற்கு முன்னதாக  அவர்கள் காப்பம் தரித்துள்ளனரா என ஆராயும் மருத்துவ சேதனைகள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைக் கண்டித்து தற்போது இலங்கை மனிதஉரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவரும், மத்திய மாகாணசபை உறுப்பினருமான முரளி ரகுநாதன் இம்முறைப்பாட்டைச் செய்துள்ளார். தோட்டத் தொழிற்துறையில் இளம் பெண்களை வேலைக்கு அமர்த்தும் போது அவர்கள் காப்பம் தரித்துள்ளனரா என ஆராயும் நடவடிக்கைகள் பெண்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

காப்பம் தரித்த பெண்களை வேலைக்கமர்த்துவதால். பிரசவத்தின் போது பல கொடுப்பனவுகளை வழங்க வேண்டி வரும் என்பதற்காகவே தோட்ட நிர்வாகம் பெண்களிடம் இவ்வாறான மருத்துவ சோதனைகளை நடத்தவதாக தெரியவருகின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • chandran.raja
    chandran.raja

    சுரண்டலை உக்கிரப்படுத்தலையும் ஆதாயத்தை அதிகப் படுத்தலையுமே இது நோக்கமாகக் கொண்டது.இதில் தொழில்சங்க தலைமைகள் என்ன பாத்திரத்தை வகிக்கப் போகின்றன?. தொழிலாளர் பக்கமா? நிர்வாகத்தின் பக்கமா?? இதுவே பிரதான கேள்வியாகிறது.

    Reply