”நீதிபதிகள், சட்டத்தரணிகள் துணிச்சலுடன் செயற்பட வேண்டும்” ஓய்வுபெற்ற நீதியரசர் விக்னேஸ்வரன்

Wigneswaran_C_V_Justiceகுற்றச் செயல்களை, சமூகச் சிரழிவு நடவடிக்கைளை துணியுடன் கண்டிக்க, தட்டிக் கேட்க விழையும் நீதிபதிகள் திடீரென இடமாற்றம் செய்யப்படுவது அதிர்ச்சியளிக்கும் விடயம் என ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.  காலஞ்சென்ற சட்டத்தரணி எஸ்.ஆர் கனகநாயகத்தின் உருவப்படம் நேற்று (June 24 2010) மாலை யாழ். நீதிமன்றக் கட்டடத்தொகுதியில் அமைந்துள்ள யாழ்.சட்ட நூலகத்தில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக கலந்துகெண்டு உருவப்படத்தை திரை நீக்கம் செய்து நிகழ்த்திய நீண்ட உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

”‘ஏசியா நியூஸ்’ என்ற ஊடகத்திற்கு மனித உரிமைகள் பணியாளரும், சட்ட சமூக நம்பிக்கையகப் பணிப்பாளருமான ஒரு சிங்கள சகோதரர் ருக்~ன் பெர்னாண்டொ வடமாகாணத்தில் இராணுவ ரீதியான தாக்குதல்களுக்கு பதிலாக கலாசார, மதரீதியான தாக்குதல்கள் நடைபெறுவதாகவும், வடமாகாணம் சிங்கள மயமாதலை எதிர்கொண்டுள்ளதெனவும் கூறி அது பற்றிய விபரங்களையும் கூறியிருந்தார்.

இப்படியான ஒரு சூழலில் யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக கொலை. கொள்ளை, கற்பழிப்பு, மற்றும் கலாசார சிரழிவுகள் நடைபெற்று வருவருவதை நீங்களும் அறிவீர்கள். தெற்கிலிருந்து விலைமாதர்களும் கொண்டுவரப்பட்டு எமது இளைஞர்களுக்கு வலைவிரிப்பதாகவும், போதைப் பொருட்கள் கல்விக் கூடங்களுக்கு அருகில் விற்பனைக்கு விடப்படுவதாகவும் அறியக்கிடைத்தது.

எமது சொந்த தமிழ் இரத்தங்களும் இப்பேர்பட்ட சமூகச் சீரழிவு நடவடிக்கைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டிருக்கின்றார்கள் என்று கேள்விப்படுகின்றபோது மனவேதனை ஏற்படுகின்றது.  இவ்வாறான சமூகச் சீரழிவுகளை துணிச்சலுடன் கண்டிக்கும் நீதிபதிகள் திடீரென இடமாற்றம் செய்யப்படுகின்றமை அதிhச்சியளிக்கின்றது. எனினும், இந்த அழிவுகளிலிருந்து குடாநாட்டை மீடபதற்கு நீதிபதிகள், சட்டத்தரணிகள் ஆகியோரின் ஒன்றிணைந்த துணிச்சலான பங்களிப்பு முக்கியமானது. 

பின்னணியில் வன்முறைகளைக் கையாள்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு அதிகாரத்திலுள்ளவர்கள் துணை போகின்றார்கள் எனப் பயந்து சட்ட நடவடிக்கைகளைக் கைவிடக்கூடாது.  எமது சூழலில் நடப்பவை நீதிமன்றங்களில் எதிரொலித்தால் தான் வெளிநாட்டவர் கூட அவற்றைக் கவனத்தில் எடுப்பர்.”

இவ்வாறு ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரன் தனது உரையில் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 Comments

  • pandithar
    pandithar

    நீதியரசருக்கும் அரசியல் காய்ச்சல் பிடித்து விட்டது.
    சிங்கள மயமாக்கல் எங்கே ஐயா நடக்கிறது?.. ஆதாரத்துடன் சொன்னால் தலையிடலாம்…

    அதை தடுக்க சட்டம் உண்டோ?… சொல்லுங்கள்..
    கொழும்பில் தமிழ் மயமாக்கல் என்று பெரினவாதிகள் கூட கூறவில்லை. கபிதா வத்தையில் ஒரு பிள்ளையார். மயூராபாதி> தெகிவளை என்று கோயில்கள் அமைத்து நாங்கள் மட்டும் கொழம்பிலும் தென்னிலங்கையிலும் கம்மாளம் போடலாமா?…

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…கொழும்பில் தமிழ் மயமாக்கல் என்று பெரினவாதிகள் கூட கூறவில்லை. கபிதா வத்தையில் ஒரு பிள்ளையார். மயூராபாதி> தெகிவளை என்று கோயில்கள் அமைத்து நாங்கள் மட்டும் கொழம்பிலும் தென்னிலங்கையிலும் கம்மாளம் போடலாமா?…….//

    பண்டிதர்,
    தமிழன் கோவில் கட்டியது சொந்த காசில். ஆனால் சிங்கள மயமாக்கல் நடப்பது அரச செலவில். இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்வது நல்லது!

    Reply
  • Rohan
    Rohan

    “தமிழன் கோவில் கட்டியது சொந்த காசில். ஆனால் சிங்கள மயமாக்கல் நடப்பது அரச செலவில். இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்வது நல்லது!” என்பதுடன், தமிழர்கள் இடம் வாங்கி அனுமதி பெற்று செய்தார்கள் – அரசு இடம் பிடுங்கி அடாவடியாகச் செய்கிறது.

    புத்த கோயில்கள் தமிழருக்கு ஒரு பிரச்சனையாக இருந்திருக்காது. சிங்கள் மக்கள் பெளத்தர் ஆவதற்கு முன்னர் தமிழர்கள் பெளத்தராக இருந்திருப்பர். ஆனால், பெளத்தம் சிங்களத்தினதும் பேரினவாதத்தினதும் அடையாளமாகப் போனது தானே பிரச்சனை.

    கொழும்பில் என்னநடந்திருக்கிறது என்று பாருங்கள். இருபத்தைந்து வருடங்களுக்கு முந்திக் கட்டப்பட்ட ஒரு தேவாலயம் இடித்துத் தள்ளப்பட்டிருக்கிறது! மதகுரு மக்களுக்கு முன்னால் வைத்துத் தாக்கப்பட்டுள்ளார். தண்டனை கிடைக்காது என்று தெரிந்து தைரியமாக மதகுருவிலும் கை வைத்திருக்கிறார்கள்.

    அரச அனுமதியுடன் கட்டப்பட்ட வழிபட்டுத்தலத்துக்கு இந்தக் கதி.

    பண்டிதர் கும்மாளம் என்று சொல்வது எதை என்றும் தெரிய ஆவல்.

    http://www.lankaenews.com/English/news.php?id=9698

    Reply
  • thurai
    thurai

    //தமிழன் கோவில் கட்டியது சொந்த காசில். ஆனால் சிங்கள மயமாக்கல் நடப்பது அரச செலவில். இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்வது நல்லது!” என்பதுடன், தமிழர்கள் இடம் வாங்கி அனுமதி பெற்று செய்தார்கள் – அரசு இடம் பிடுங்கி அடாவடியாகச் செய்கிறது//

    தமிழரில் சில சமூகத்தினர் தமிழ் மொழியும், இந்து சமயமும் தமக்கே உரியதென்பதும், தமிழரின் மற்ர சமூகத்தினரிற்கு உருமையில்லையென்பதும் சரித்திரம். எனவே தமிழர் ஓர் இனமாகவுமில்லை, அவர்களிற்கென்று ஓர் அரசுமில்லை. சிங்களவர் ஓர் இனமாக வாழ்கின்றார்கள், அவர்க்ளிற்கென்றொரு அரசுண்டு, புத்தமதத்தை அந்த அரசே காக்கின்றது.

    உலகினில் ஒரு இடத்தில் ஒரு கோவிலைக்கட்டி ஒற்ருமையாக கடவுளின் முன்னேகூட போகமுடியாமல். நீதி மன்றத்தில் நிற்கும் தமிழரே ஏன் சிங்கள அரசை குற்ரம் சாட்டுகின்றீர்கள்.

    துரை

    Reply
  • BC
    BC

    கொழும்பில் தமிழர்கள் கோவில் கட்டி கலகலபாக இருப்பதை எவரும் தடுக்கவில்லை. அதற்கு மேலே போய் கல்கி பகவான்,அம்மா பகவான் என்றும் நடத்துகிறார்கள். சிங்கள பெளத்த மயமாக்கல் நடக்கிறது என்று தமிழ்நாட்டில் சொன்னால் அவர்கள் தான் நம்புவார்கள்.

    Reply
  • Ajith
    Ajith

    The fact is what the former judge said is about the immediate transfer order of Chavakacheri and Vanni judges. We all know it was a political transfer becuase of the courage of those judges who made judgements against EPDP members who involved in the murder and abductions. Another fact is Sinhala state is involved in the cultual damge to the tamil society through drugs and prostitution. This was mentioned by a Sinhala educationist. Any one who defend those culprits of murders are criminals.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    வக்கீல் நீதிபதிகளாலேயே தமிழ்மக்களின் வாழ்வு சூறையாடுப்பட்டது. “நல்ல வக்கீலை பிடித்தால் நல்ல தீர்ப்பு வரும்” என்ற போக்கு உலகம் முழுக்க காணப்படுகிறது. ஆம் .உலகச் சனத்தொகையின் ஒருவீதத்தை கொண்ட மூலதனம் கொண்டவர்களுக்காவே இந்த கலை கலாச்சாரம் நீதி படைத்து உருவாக்கப்படுகிறது. அதற்காகவே நீதிமன்றங்கள் நீதிபதிகள் வக்கீல்கள். இதுவே நீதிக்கு -அரசராகயிருக்கும் விக்னேஸ்வரன் கருத்தும்.
    அனேக இயக்கங்கள் விபச்சாரிகளை சுட்டுக்கொன்றார்கள். அவர்கள் சொல்லும் காரணம். சிங்கள இராணுவத்திற்கு உளவுசொல்லுகிறார்கள் இல்லையே கலாச்சார சீரழிவுகளில் ஈடுபடுகிறார்கள் என்பதாகும். இதில் இறுதிவரை முன்னோடியாகயிருவர்கள் புலிகள் தான். வாழ்வின் இடைக்காலத்தை தாண்டிய ஒரு விபச்சாரியை தனது எதிர்காலம் எப்படி அமையும் என்பது தெரியாத ஒரு யுவதியைக்கொண்டு…. தன்பிள்ளைகளும் தானும் இந்த கொடுமை நிறைந்த உலகில் வாழ்நாளை நீடிப்பதற்காக வயிற்றை பராமரிக்க வயிறுக்கு கீழ்பகுதியை வாழ்வாதரமாகக் கொண்டவளுக்கு நவீனதுப்பாக்கி கொண்டு வாழ்வை முடித்துவிட்டார்கள். (இது நடந்த இடம் நாச்சிமாகோவில்-கொக்குவில் இடைப்பட்ட காங்கேசன்துறைவீதி. ஆண்டு 2002-2004 பூறாறிமரத்தடி)

    தனது மக்களின் சமூகசீரழிவை நீதிமன்றத்தின் முன் விபரித்து இந்த நியாயத்திற்கு இந்த நீதிக்கு நீங்கள் தலைவணங்கவில்லை இல்லையென்றால் “உங்களுக்கு ஏன் இந்த கறுப்பு அங்கி” என்ற கேட்ட வக்கீல்களும் இந்த உலகத்தில் இன்னும் உயிருடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
    விக்னேஸ்வரனின் தனிப்பட்ட வாழ்கை எனக்கு தெரியும். அதை இங்கு வெளிப்பட்டுத்துவது நாகரீகமானது அல்ல. தென்இலங்கை வடஇலங்கையின் கலாச்சாரத்தை சீரளித்துவிடும் என்றவாதம் தமிழீழம் பிரிவாதம் போன்ற கோட்பாட்டில் உருவானதே!இவர் பேசியதைவிட இவரை பேச வைத்திருக்கிறார்கள் என்பதையே கவனத்தில் எடுக்கவேண்டும்.

    “குற்றவாளிக்கு தண்டணை கொடுப்பதை விட குற்றவாளிகளின் பிறப்பிடங்கள் அழிக்கப் படவேண்டும்” என்ற மாமேதையின் கருத்தைவிட வேறு என்னத்தை சொல்லமுடியும்?.

    Reply