போரில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் அவர்களின் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்து செயற்படுவதாக சிறிலங்காப் புலனாய்வுப் பிரிவினர் கருதுகின்றனர். இது தொடர்பாக அவர்கள் விழிப்புடன் இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினருக்கு நிதியுதவி வழங்கி வருகின்றவர்கள் தொடர்பாக சிறிலங்கா புலனாய்வுப் பிரிவின்ர் விசாரணைகளை நடத்தியும் வருகின்றனர்.
அண்மையில் மாத்தறைப் பகுதியில் பிச்சைக்காரர் தோற்றத்தில் நடமாடிய விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட நபரான ஈஸ்வரன் சந்திரகுமாரன் என்பவர் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனவும், முல்லைத்தீவில் கடும் பயிற்சி பெற்றவர் எனவும், விடுதலைப் புலிகளின் தலைவர் சார்ள்ஸ் அன்ரனிப் படைப்பிரிவின் போராளி எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால், சார்ள்ஸ் அன்ரனி படைப்பிரிவு பிரபாகரனின் மகனான சாள்ஸ் அன்ரனியின் தலைமையிலானதல்ல. சாள்ஸ் அன்ரனி விடுதலைப் புலிகளின் கணனி தொழில் நுட்பப்பிரிவிற்கு பொறுப்பாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
palli
புலிகள் இருக்கிறார்களா இல்லையா என கண்டறிய புலிகளின் புலனாய்வு செயற்படுகிறதோ??
chandran.raja
“மோப்பம்” பிடிக்கிறார்கள் என்பது உண்மை தான். இலங்கையில் பிச்சைக்காரர் வேஷசத்தில் என்றால் கனடாவில் வேறு வேஷத்தில்.
இலங்கையில் பிச்சைக்காரர் பரதேசி நாடோடி வேஷத்தில் உளவுபார்க்க திரிகிறார்கள் என்றால் “நான் ஏன் பிறந்தேன்” “நான் யாருக்காக வாழவேண்டும்” என்ற கேள்விகள் இல்லாது ஒரு விதவெறியூட்டப்பட்டு தன்னிலை மறந்து மூளைச்சலவை செய்யப் பட்வர்கள் இன்னும் இருப்பது புரிந்து கொள்ளக்கூடியதே!.
கனடா புலம்பெயர்நாடுகளில் புலித்தோலை உரித்துப்போட்டு வேஷம் போடுகிறார்கள் என்றால்..அதன் அர்த்தம் வேறு வகையானது. கனடாவிலிருந்து வந்த தொலைபேசி அழைப்பில் ஏன்?இனியும் இப்படி செய்கிறார்கள் என்று கேட்டேன்.என்து நண்பர் சொன்ன பதில் இதோ….
அவர்கள் தான் இங்கு நீண்டகாலம் இலங்கை தமிழர் பிரச்சனைக்கு முழுஉரிமையும் கோரியவர்கள். அவர்கள் கருத்துக்கெதிராக இங்கு ஒரு நுhல் நிலையமோ புத்தகக்கடையோ இருக்கமுடியாது. தமிழ்மக்களின் அரசியல் அறிவுக்கு இந்தபுலித்தோல் உரித்தவர்களும் உரிக்காதவர்களும் தான் இலக்கணம். அதுமட்டுமல்ல இவர்கள் வசதியாக வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள். முக்கிய புள்ளிகளுக்கு இரண்டுகார். இரண்டு வீடு. இரண்டு மணைவிமார்களையும் கொண்டவர்கள். இதை பராமரிப்பதற்கு சதாரண மனிதனை விட சிலமடங்கு கூடியபணம் தேவையென்பது உணரக்கூடியது தானே!.