தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்த பொது இணக்கப்பாடு ஒன்றை காண்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள தமிழ் கட்சிகள் நேற்று (June 28 2010) மாலை தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளன. கொழும்பில் ஏற்கனவே தமிழ் கட்சிகள் பேச்சு வார்ததைகளில் ஈடுபட்டுள்ள நிலையில் கூட்டமைப்பும் அதில் கலந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் ஆகியோர் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை நேரடியாக சந்தித்து இவ்வேண்டுகோளை விடுத்துள்ளனர். கொழும்பிலுள்ள இரா.சம்பந்தனின் வீட்டில் நேற்று மாலை 6 மணிக்கு இச்ந்திப்பு நடைபெற்றுள்ளது.
இன்று தமிழ் மக்கள் பலவேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். அவர்களின் உடனடிப் பிரச்சினை, அரசியல் தீர்வு, மற்றும் திட்டமிட்ட சிங்களக் குடியற்றங்கள் போன்ற விடயங்கள் தொடர்பாக அனைத்துக் கட்சிகளும் இணைந்து ஒருமித்த குரலில் பேச வேண்டியுள்ளமை குறித்து கூட்டமைப்பு தலைவரிடம் எடுத்து விளக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறவுள்ள அடுத்த தமிழ் கட்சிகளின் கூட்டத்தில் கூட்டமைப்பும் கலந்து கொள்ள வேண்டும் கேட்கப்பட்டுள்ளது.
chandran.raja
ஒறியினல் தமிழரசுகட்சியில் இருந்து வந்த சம்பந்தன் ஆயினும் புரட்சி முலாம் பூசிக் கொண்டவந்த சுரோஸ் பிரேமசச்சந்திரன் செல்வம் அடைக்கநாதன் ஆயினும் இந்தக் கூட்டமே ஆயுதம் ஏந்தாத புலிகள் என்பதை இங்கு பல தடவை சுட்டிக்காட்டியுள்ளேன்.
இவர்கள் உலகநாகரீகத்தில்லிருந்து கற்றுதேர்ந்தவர்களோ கற்பதற்கு முற்சிப்பவர்களோ அல்ல. ஒரு இனக்குழுக்களில் பல வித்தியாசபட்ட குழுக்கள் இருப்பது போல இது ரத்தம்குடிக்கும் அட்டைகள். மற்றவர்களை பலிகொடுத்து அதில் வழியும் ரத்தத்தில் சுவைத்து வயிறுநிறப்பி வாழ்வு நடத்துபவர்கள் பிரிவதும் பிரிந்துசென்று தனியரசு அமைப்பதும் சாத்தியம் இல்லாத சமாச்சாரம் இல்லை. அதை சாத்தியப்படுத்தக் கூடிய தகமை தமிழ் இனத்திற்கு உண்டா? என்பதே! இன்று முன்நிற்கும் கேள்வி.
ஆகக்குறைந்தது முப்பது வருடவரலாற்றை ஆய்வுசெய்து தமிழ்மக்கள்முன் சமர்பிக்கிற தகமை சம்பந்தனுக்கோ மாவை சேனாதிராஜவுக்கோ ஆயுதரெளடிகளாக இருந்த செல்வம் சுரேஸ்சுக்கோ உண்டா? இல்லையென்றுதான் யாரும் பட்டென பதில் சொல்லுவார்கள்.
எஞ்சிபோனது தமிழ்இனத்திற்கு உயர்ந்த இலட்சியங்கள் அல்ல. கண்னெதிரே இருக்கும் கூட்டுவாழ்க்கையே இதை வரவேற்பதும் அதை மெருகூட்டி உயர்ந்த இடத்திற்கு வளர்த்தெடுப்பதுமே ஒர்ரளவு அறிவுள்ள தமிழனின் அரசியல் கனவாக தற்போதைக்கு இருக்கமுடியும். குறைநிறைகள் எதிலும் உண்டு என்பதை உணருவதால் மட்டுமே பலவிஷயங்களை சாத்தியப் படுத்தமுடியும். இந்த தகுதி அதாவது விட்டுக்கொடுக்கிற மனப்பான்மை இவர்களுக்கு அறவே கிடையாது. இவர்களுக்கு இப்ப இருக்கிற “புளங்காகிதம்”முந்தியென்றால் தம்பி வெடிவைப்பார். இப்ப அந்த பயம் இல்லை என்பதே! சுதந்திரமாக ஓடிவிளையாடுங்கள் எலிகளே! பானையையும் உறுட்டலாம். புட்டுக்குழலிக்குள்ளும் குடித்தனம் நடத்தலாம்.