“நாங்கள் நடிகர்கள், கலைஞர்கள் இங்கு நாம் வருவது அரசியல் செய்ய அல்ல அந்த வேலைகளை அரசியல்வாதிகள் பார்த்துக் கொள்வார்கள். நாங்கள் மக்களின் மனங்களை ஆற்றுப்படுத்துபவர்களாக உறவுப் பாலமாக இங்கு வந்திருக்கிறோம். ஐஃபா போன்றதொரு விழாவை இங்கு நடத்துவதன் பின்னணியிலோ படப்பிடிப்பை இங்கு நடாத்துவதன் பின்னணியிலோ எந்தவொரு அரசியலும் இல்லை” என்று சல்மான்கான் கூறினார்.
ஒரு திரைப்படத்தின் படப் பிடிப்புக்காக நாங்கள் பல நாடுகளுக்குச் செல்வோம். அழகிய கடற்கரைகளுக்காக ஒரு நாடு, அழகான மலைப்பிரதேசங்களுக்கு இன்னொன்று என்பதாக அது அமையும். ஆனால் இவையெல்லாம் ஒருங்கே இலங்கையில் இருப்பதால் ‘ரெடி’ திரைப்படத்தின் வெளிப்புறப்படப்பிடிப்பு முழுவதையும் இலங்கையில் நடத்தத்திட்டமிட்டோம் என்றும் சல்மான்கான் கூறினார்.
‘ரெடி’ திரைப்படத்தின் வெளிப்புறப்படப்பிடிப்பு முழுவதும் இலங்கையில் நடைபெறுகின்றது. இது தொடர்பான பத்திரிகையாளர் மாநாடு கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது. ரெடி திரைப்படத்தின் கதாநாயகி அசின், திரைப்படக் கூட்டுத்தாபனத் தலைவர் குமார் அபேசிங்க, விஸ்கிராப்ட் நிறுவனத் தலைவர் சபாஷ் ஜோசப், ரெடி திரைப்பட இயக்குநர் அரீஸ் பஸ்மி ஆகியோர் மேற்படி பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்துகொண்டனர்.
பத்திரிகையாளர் மாநாட்டில் தொடர்ந்து உரையாற்றிய சல்மான் கான், இயற்கையின் வனப்பையெல்லாம் ஒருங்கே, இலங்கை கொண்டிருப்பதாலேயே ‘ரெடி’ திரைப்படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பு முழுவதும் மொரிஷியஸ்ஸிலிருந்து இலங்கைக்கு மாற்றப்பட்டது. இலங்கையில் படப்பிடிப்பு நடாத்தப்படுவது குறித்து பலத்த எதிர்ப்புகள் தமிழகத்தில் எழுந்தன.
ஐஃபா நடாத்தப்படக் கூடாதென்று முன்னதாக பலத்த எதிர்ப்புகள் எழுந்தன. எந்தவொரு திரைப்படத்தையும் திரையிடத் தடைவிதிக்கப்பட்டால் அதனால் பாதிக்கப்படுவது தயாரிப்பாளரே. தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படக்கூடாதென்பற்காகவே சில நடிகர்கள் ஐஃபாவைத் தவிர்த்தனர்.
இலங்கையும் எம்மைப்போன்ற கலாசார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. சுமார் 80 இலங்கைத் தொழில்நுட்பக் கலைஞர்கள் எம்முடன் இத்திரைப்படத்தில் பணியாற்றுகிறார்கள். அவர்களின் திறமை எம்மவர்களின் திறமைக்கு எந்த வகையிலும் குறைந்தது இல்லை என்றார்.
thurai
உலகமுழுவதும் சிலோன் ரீ புகழ்பெற்ரது. உலகமெங்கும் பரந்து வாழும் புலிகள் தாமும் இந்த ரீயை குடிக்காது, மற்ரவர்க்ளையும் குடிக்க விடாது தடுப்பதற்கான ஓர் போராட்டத்தை முன்னெடுப்பார்களா?
புலிகழும், புலியின் ஆதரவாளர்கழும் காட்டும் எதிர்ப்பெல்லாம் வெறும் வாய்ப்பேச்சுத்தான். புலம்பெயர் தமிழர்க்ளிற்கு புலிகள் இன்னமும் அழியவில்லை உயிருடந்தான் இருக்கின்றது எனக்காட்டத்தான். இவர்களின் சொல்லிற்கும் செயலிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
துரை