500 பேரின் கண் சத்திரசிகிச்சைக்கான செலவை ஏற்கிறார் சல்மான் கான்

salman.jpgவடக்கு, கிழக்கு மற்றும் வவுனியா நிவாரணக் கிராமங்களில் இருக்கும் கண்ணில் விழிவெண்படலம் படர்ந்துள்ள 500 பேருக்கு தமது சொந்த செலவில் கண் சத்திர சிகிச்சை செய்வதற்கு இந்தியாவின் முன்னணி பொலிவுட் நடிகர் சல்மான்கான் முன்வந்துள்ளார்.

இது விடயமாக நடிகர் சல்மான்கான் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசி மூலம் நேற்றுமுன்தினம் கலந்துரையாடி தமது விருப்பத்தைத் தெரிவித்தார்.  இத்திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கிய அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அதற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதற்கேற்ப இந்தியாவின் ஐந்து கண்சத்திர சிகிச்சை நிபுணர்களும், இச்சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்களும் மருந்து பொருட்களும் அடுத்துவரும் இரண்டு மூன்று தினங்களில் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளன. இக் கண்சத்திர சிகிச்சை கொழும்பு கண்ணாஸ்பத்திரியில் நடைபெறும். அதேநேரம் கண் நோயாளர்களுக்குப் பாவிக்கவென ஒரு தொகை கண்வில்லைகளை வழங்கவும் நடிகர் சல்மான்கான் விருப்பம் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • palli
    palli

    சல்மானுக்கு ஒரு பாராட்டு
    ஆனால் இப்படி கண் போனவர் எண்ணிக்கை எத்தனையோ என்பது கூட இப்படி யாரும் உதவ வந்தால்தான் தெரியுமே;

    Reply
  • BC
    BC

    சல்மான்கான் இந்த உதவியை செய்ய தமிழ்நாட்டு வீரர்களின் மிரட்டலை மீற வேண்டியல்லவா இருக்கிறது! இதை பற்றிய ஒரு நையாண்டி பதிவு.
    http://nbavan7.blogspot.com/2010/07/blog-post_03.html

    Reply