நாட்டின் உள்ளக பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் நாட்டு மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது. எனினும், ஏனைய நாட்டுப் படைகள் நாடொன்றின் உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு தீர்வாக முடியாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இலங்கை இதற்கு முன்னுதாரணமாக திகழ்கிறதெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
உக்ரேன் சென்றிருக்கும் ஜனாதிபதி நேற்று மாலை அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட அதிகாரிகள் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு கூறினார். பயங்கரவாதிகளை தோற்கடிப்பதில் இலங்கைக்கு கிடைத்துள்ள அனுபவமானது பயங்கரவாத செயற்பாடுகளின் சவால்களுக்கு முகம் கொடுத்துவரும் ஏனைய நாடுகளுக்கு சிறந்த முன்னுதாரணமாகுமெனவும் ஜனாதிபதி இதன் போது கூறினார்.
ஜனாதிபதி இங்கு மேலும் உரை நிகழ்த்துகையில், எமது இராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பான செயற்பாட்டின் பயனாகவே எமது நாட்டுக்கு இந்த பாரிய வெற்றி கிடைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார். குரூர பயங்கரவாதத்தினை தோற்கடிப்பதில் எமக்கு கிடைத்த அனுபவத்தை பயங்கரவாதத்தின் சவால்களுக்கு முகம் கொடுத்து வரும் ஏனைய நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதற்கு நாம் தயாரெனவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.
பயங்கரவாதிகளை தோற்கடிக்கும் செயற்பாட்டின்போது உக்ரேன் அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்பினை ஜனாதிபதி இதன் போது நினைவுகூர்ந்தார்.
thurai
பயங்கரவாதத்தை ஒழிப்பதை விட, பயங்கரவாதம் தோன்றாமல் காப்பதே முக்கியமானது. இராஜபக்ச சொல்வதுபோல் இராணுவத்தினர் மட்டும் புலிகளை வெல்லவில்லை. புலிகளின் செயற்பாட்டால் பாதிக்கப்பட்ட தமிழுலகம் முழுவதுமே புலிகளின் அழிவிற்குக் காரணமாக இருந்த்னர். இந்த உண்மையை மறைப்பதும் வீரம் பேசுவதும் சிறந்த அரசியலுமல்ல. இராஜதந்திரமுமல்ல.
துரை