புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் முகாமிலிருந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் தப்பியோடி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலநறுவை மாவட்டத்திலுள்ள வெலிகந்த கந்தகடுவ பகுதியிலுள்ள புனர்வாழ்வு முகாம் ஒன்றில் தொழில் பயிற்சிகளைப் பெற்று வந்த முன்னாள் புலி உறுப்பினர் ஒருவரே இவ்வாறு தப்பியோடியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய் காரணமாக பொலநறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயெ கடந்த 30ஆம் திகதி அங்கிருந்து அவர் தப்பியோடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. புனர்வாழ்வு முகாம்களிலுள்ளவர்களில் காயமுற்றவர்கள், நோயாளிகள் இராணுவப் பாதுகாப்புடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவது வழமையானது. இவ்வாறான சூழ்நிலையிலேயே இவர் தப்பிச்சென்றுள்ளார்.
தப்பிச் சென்றவர் கிளிநொச்சியைச் சேர்ந்த 27 வயதான நித்தியானந்தன் ராசா என்பவர் எனவும், இவர் விடுதலைப் புலிகளின் உறுப்பினராக செயற்பட்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.