நாடுகடந்த அரசாங்கத்தின் பேர்மிங்காம் கூட்டத்தில் கைவரிசை! ஏற்பாட்டாளர் சிறுகாயத்துடன் தப்பினார்!

Bermingham_TGTE_Incidentயூலை 3 2010 பேர்மிங்காமில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களின் கூட்டத்தில் வன்முறைத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் செல்வா அண்ணா என்பவர் கூட்டியிருந்த இந்தக் கூட்டத்தை நீல நிற 7 இருக்கைகள் கொண்ட வாகனத்தில் வந்த சிலர் தாக்கி உள்ளனர்.

இச்சம்பவத்தையடுத்து பேர்மிங்காம் கவுன்சிலர் பொலிஸ் மற்றும் மருத்துவ ஊர்திக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

Bermingham_TGTE_Incidentவெள்ளை நிற ரிசேர்ட் அணிந்த குமரன் மற்றும் அவரின் பின்புறமாக உள்ள பச்சைநிற கோடுள்ள ரீசேர்ட் அணிந்த மோகன் ஆகியோர்களும்  இந்த நீலநிற வாகனத்தில் வந்ததாக இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஒருவர் தேசம்நெற்க்கு தெரிவித்தார்.

இத்தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் லண்டனில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதிசேகரிப்பில் ஈடுபட்ட தனம் மற்றும் கமல் ஆகியோருக்கு நெருக்கமானவர்கள் என தேசம்நெற்க்கு தகவல் வழங்கியவர் மேலும் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் வந்தவர்கள் தங்களுக்கு அறிவிக்காமல் எவ்வாறு கூட்டம் கூட்ட முடியும் என வாக்குவாதப்பட்டதாகவும் அதன் பின் வன்முறையில் இறங்கியதாகவும் தெரிவித்தார். வாக்குவாதத்தில் ஈடுபட்டவரை ஏற்பாட்டாளர்களில் ஒருவர் கைத்தொலைபேசியில் படம் எடுக்கவும் விவாதத்தில் ஈடுபட்டவர் கைவரிசையைக் காட்டி உள்ளார்.

Bermingham_TGTE_Incidentஇத்தாக்குதல் சம்பவத்தில் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த செல்வா அண்ணாவுக்கு சொண்டு வெடித்து பல்லுடைந்ததாகவும் அதனால் இரத்தம் வெளிவந்ததாகவும் அச்செய்தி மேலும் தெரிவித்தது. மேலும் பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து இருதரப்பையும் சமாதானப்படுத்தியதாகவும் தெரியவருகின்றது.

இச்சந்திப்பில் நாடுகடந்த தமிழீழ பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் இருவரும் பேர்மிங்காம் பகுதியைச் சேர்ந்த சிலரும் கலந்துகொண்டனர்.

அவர்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலில் இடம்பெற்ற மோசடிகள் பற்றியும் வாக்குவாதப்பட்டதாக இன்னுமொரு செய்தி தெரிவிக்கின்றது. தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலில் போட்டியிட்டதாகவும் அவருக்கு கிடைத்த வாக்குகள் மோசடியானவை என தேர்தல் ஆணையாளரால் நிராகரிக்கப்பட்டு இருந்ததாகவும் அச்செய்தி மேலும் தெரிவிக்கின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    மொத்தத்தில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் முதல் நாடு கடந்த தமிழீழ உட்பட, தொடர்ந்து நடக்கும் தேர்தல்கள் யாவும், மோசடிகள் நிரம்பியதும் தமது சுருட்டல்களை தொடர்வதற்காக உருவாக்கப்பட்டதென்பதையும், அவர்களே தெளிவாக்கி வருகின்றார்கள்.

    Reply
  • thurai
    thurai

    ஈழத்தமிழர்களை மிரட்டியும், ஏமாற்ரியும் வாழ்ந்தவர்கள் சிங்களவர்களா அல்லது தமிழர்களா என்பதே மக்கள்முன் வைக்கப்பட வேண்டிய கேள்வியாகும்.

    தந்தை செல்வா காலத்தில் தமிழரசு என்னும் போதை பிரபாகரனின் காலத்தில் தமிழீழமென்னும் போதை. இந்தப் போதையின் பின்னால் வாழ்வை நடத்தியவர்கள், பிரபாவின் குடும்பமும், அவரின் நண்பர்க்ழுமேயாகும்.

    வாய்ப்பேச்சில் தமிழீழம் நடந்ததும் நடப்பதும் பிரபாகரனின் ஈழம். மிரட்டல், பறித்தல், அழித்தல். இதனையே புலிகள் ஈழத்தமிழர்க்ளிற்கு விட்டுச் சென்றது வேறொன்றுமில்லை.

    துரை

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இன்றைய செய்தியொன்றில் கனடாவிலுள்ள கட்டிடத் தொடரொன்றின் உரிமையாளராகவிருக்கும் புலிகளின் பினாமிப் பொறுப்பாளருடன், அங்கு வாழும் சு.ப.தமிழ்ச்செல்வனின் சகோதரி குடும்பத்தினர் அந்த கட்டிடத்தொடரை தம்மிடம் கையளிக்கும்படி வாக்குவாதத்திலீடுபட்டு பிரைச்சினை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. செய்தியை சொன்ன ஊடகம் பிரித்தானிய GTBC வானொலி.

    Reply
  • sarangan
    sarangan

    லண்டனில் கமலை அல்லது தனத்ததை மக்கள் எல்லொருமாக ஒதுக்கினீர்களானால் எல்லாம் உருப்படும். லண்டனுக்கு வெளியே உள்ள புலி கட்டமைப்பை கமல் தான் இயக்குகிறார்.

    Reply
  • thuari
    thuari

    யாழ்ப்பாண்த்தில் சந்தியில் சண்டியன் போல் மாறும் புலத்துபுலியின் முகவர்கள். இவர்களில் சிலர் பதுக்கியது போதுமென ஒதுங்கிவிட்டார்கள். சிலர் இலங்கையிலும், இந்தியாவிலும் முதலீட்டாளர்களாகி விட்டார்கள் சிலர் போலீஸ் வலையிலிருந்து தப்ப இரவு பகலாக சிந்திக்கின்றார்கள். மிகுதியாகவுள்ளோர் தங்களின் பதவிகழும், பண வருவாய்கழும் தடைபட்டதனால் யாரிடமிந்த கோபங்களை தீர்க்கலாமென அலைகின்றார்கள்.

    இவர்களிற்கு உதவக்கூடியவ்ர்கள் புலியின் பணத்தை(ஈழத்தமிழரிடம் பறிக்கப்பட்ட பணத்தை) பதுக்கியவர்களேயாகும். இராஜ்பக்ச புலிகளிற்கு
    புனர்வாழ்வு அளிப்பதுபோல் புலத்துப் புலிகளிற்கு யராவது புனர்வாழ்வு அளிப்பார்களா?

    துரை

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //இவர்களில் சிலர் பதுக்கியது போதுமென ஒதுங்கிவிட்டார்கள். – துரை //

    பதுக்குவது என்பது சொந்தக் காசில் பொருட்களை வாங்கி அவற்றை மறைத்து வைத்து செயற்கையாக விலையை அதிகரிக்கச் செய்வதை குறிப்பிடுவது. ஆனால் இவர்கள் செய்தது சுருட்டலும், மோசடியுமே. அடுத்தவன் பணம் தான் இவர்களின் முதலீடு.

    Reply