ஜோன் ஹோம்ஸின் இடத்திற்கு புதியவர் நியமனம் – ஐ.நா. செயலர் அவசர நடவடிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் பிரதிச் செயலாளர் நாயகமாகப் பணியாற்றிய ஜோன் ஹோம்ஸின் இடத்துக்குப் புதியவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவுஸ்திரேலியாவுக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராகக் கடமையாற்றும் திருமதி வெலேரி அமோஸ் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூனினால் ஹோம்ஸின் இடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளதா அவரின் இணைப் பேச்சாளரான ஃபர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

ஜோன் ஹோம்ஸ் இதுவரை காலம் ஆற்றிய பணிகளுக்காக அவருக்கு நன்றி தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் பான் கி மூன் புதியவர் அந்தப் பணியைத் திறம்பட மேற்கொள்வாரென நம்பிக்கை தெரிவித்துள்ளார்.ஜோன் ஹோம்ஸ் இலங்கை அரசாங்கத்தரப்பால் முன்னர் கடும் விமர்சனத்திற்கு ஆளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *