பதுளை வைத்தியசாலை டாக்டர் ஒருவர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் பதுளை வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் நேற்று (11) மாலை உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு டெங்கு நோயினால் பீடிக்கப்பட்ட நிலையில் அதிதீவிர பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த இவர், லக்மாலி விஜேநாயக்க (வயது 31) எனவும் திருமணமாகாவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவர் பதுளை மாகாண வைத்திய சாலையில் 23 வது சிறுவர் வார்ட்டில் டாக்டராகப் பணிபுரிந்தவர். இவர் நோயாளிகளுடன் மிகவும் காருண்யமாக நடந்து கொண்டு அனைவரினதும் பெரு மதிப்பைப் பெற்று வந்தமையும் குறிப்பி டத்தக்கது.
சில நாட்களுக்கு முன் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட இவரே வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுள்ளார். (10) நேற்று முன்தினம் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் இவர் அதிதீவிர சிக்சசைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வேளை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.