கிளிநொச்சி நகரை அண்டிய பகுதிகளுக்கு தற்போது மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது. இரணைமடுச்சந்தி, பாரதிபுரம், தொண்டமான்நகர், கிளிநொச்சி நகர்ப்பகுதி, திருநகர், கணேசபுரம். பரந்தன் ஆகிய பகுதிகளுக்கே மின்சார விநியோகம் வழங்கப்பட்டு வருகின்றது. ஏனைய பகுதிகளுக்கு மின்சார இணைப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் மீள்குடியேறிய மக்களுக்கு மின்சாரம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், ஏ-9 பாதையின் இருபுறமும் அமைந்துள்ள வணிக நிறுவனங்கள், அரசாங்க அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் முதலானவற்றிற்கே தற்போது மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது. அழிவடைந்த, சேதமுற்ற பொதுமக்களின் வீடுகள் மீளமைக்கப்படாத நிலையில் உள்ளபோது, அம்மக்களுக்கான மின்சார விநியோகத்தை வழங்குவது என்பது இயலாத விடயம் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.