நேற்று முன்தினம் (10-07-20100) அன்று வேலணை வைத்தியசாலையில் மர்மமான முறையில் தூக்கிட்டு சடலமாக மீட்கப்பட்ட மருத்துவமாதுவான சரவணை தர்சிகாவின் மரணம் குறித்து தொடர்ந்து விசாரணகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இம்மரணம் தொடர்பாக அவ்வைத்திய சாலையின் பொறுப்பதிகாரி டொக்ரர் பிரியந்த செனவிரட்னவும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார். விசாரணகள் முடியும் வரை குறிப்பிட்ட வைத்தியர் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறுவதற்கு தடைவிதிக்கபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை. தர்சிகாவின் மரணம் தற்கொலையாக இருக்க முடியாது என அவரது பெற்றோரும், உறவினர்களும் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பூரண விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தமக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.