சிறிலங்கா ஜனாதிபதியின் பாரியார் உள்ளிட்ட அரசஅதிகாரகள் குழுவினர் தென்னிந்திய திரைப்பட நடிகை அசினுடன் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்தனர். அங்கு கடந்த மூன்று தினங்களாக நடைபெற்ற கண் சத்திரசிகிச்சை முகாமின் இறுதி நாள் நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவே அவர்கள் அங்கு வருகை புரிந்தனர்.
தென்னிந்திய நடிகை அசின் மற்றும் இந்தி நடிகர் சல்மான்கான் ஆகியோரின் நிதியுதவியில் புனரமைக்கப்பட்டு நவீனமயப்படுத்தப்பட்டுள்ள யாழ்.போதனா வைத்தியசாலையின் கண்சிகிச்சை நிலையத்தில் இந்திய கண்சிகிச்சை நிபுணர்களால் விழி வெண்படல சத்திரசிகிச்சை முகாம் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இக்குழுவினர் நேற்றுக் காலை வவுனியா வைத்தியசாலைக்கும் விஜயம் செய்தனர். நடிகை அசின் வருகை தந்த செய்தி கசிந்ததும் வைத்தியசாலையை நோக்கி பல இரசிகர்கள் படையெடுக்கத் தொடங்கினர் இருந்தபோதும், இவர்களின் வருகையை முன்னிட்டு வவுனியா, யாழ்.வைத்தியசாலைகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தமிழ்நாடு திரைப்பட அமைப்பினரின் பணிப்பை மீறி இலங்கையில் நடைபெற்ற திரைப்பட விழாவிற்கு சென்ற காரணத்தினால் தமிழ் படங்களில் நடிப்பதற்கு நடிகை அசினுக்கு தடைவிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
BC
தடையை மீறி தமிழ் பகுதிகளுக்கு சென்ற அசினுக்கு பாராட்டுகள்.
thuari
அசினிற்கும் தமிழக அரசியலிற்கும் தொடர்பில்லை. அதனால் ஈழத்தமிழருடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளார். ஈழத்தமிழரின் பெயரால் அரசியல் லாபம் கருதும் தமிழக நடிகர், நடிகைகள் அவர்களை வைத்து பிழைப்பு நடத்தும் புலம்பெயர் புலிக்கூட்டத்திற்கும் இதனால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எந்தப்புலி எந்தநடிகையை நாளை திருமணம் செய்யுமென்பதும் யாருக்கும் தெரியாத விடயம்தான்.
துரை
shanthan
நலிந்த ஈழத்தமிழரின் பெயரைச் சொல்லி தமிழகத்தில் பல தமிழ் சினிமாக்காரர்கள் அரசியலையும் பணவசூலையும் நடத்துகையில் தமிழரல்லாத அசினும் சல்மான் கானும் ஈழத்தமிழ் மக்களுக்கு உதவி செய்யும் போது அவர்களின் பெயரில் பணம் சுரண்டும் புலிக்கும்பல்களுக்கு வயிறு பற்றி எரிவதுடன் தமது பிழைப்பில் மண்ணள்ளிப் போடப்போகின்றார்களே எனப் பயமும் ஏற்பட்டுள்ளது.அசினுக்கும் சல்மான் கானுக்கும் ஈழத்தமிழ் மக்களின் நன்றியும் வாழ்த்துக்களும் என்றும் உரித்தாகுக.