ஹிந்தி படப்பிடிப்புக்காக இலங்கை சென்றுள்ள நடிகை அசின் மீது நடவடிக்கை எடுப்பது உறுதி என்று ராதாரவி கூறியுள்ளார்.
இலங்கையில் தமிழர்களின் நிலைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், படப்பிடிப்புக்காக நடிகர் நடிகைகள் இலங்கை செல்ல வேண்டாம் என்றும் தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு கேட்டுக்கொண்டது. இந்த வேண்டுகோளை ஏற்று தமிழ் நடிகர் நடிகைகள் படப்பிடிப்புக்காக இலங்கைக்கு செல்லவில்லை.
இந்நிலையில் நடிகை அசின், ரெடி என்ற படப்பிடிப்புக்காக இலங்கை சென்றுள்ளார். தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு விதித்த தடையை மீறி அசின் இலங்கை சென்றிருப்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி அறிவித்தார்.
thuari
தமிழகத்தில் நடிப்பவர்கள் சினிமா நடிகர்கள். ஈழத்தமிழர்களோ வாழ்வையே நடிப்பாகக் கொண்டவர்களென்பதை ராதா ரவியோ, மற்றும் புலிகளை வாழ்த்தும் சில தமிழகத் தமிழர்களோ இலகுவாக அறியமுடியாது.
பக்கது வீட்டிலிருக்கும் தமிழகத் தமிழருடன் பேசவே விரும்பாத ஈழத்தமிழர்கள் தமிழக சினிமா நடிகைகளை மணமுடித்து இணையத்தளங்களில் வெளியிடுவதும், தமிழக அரசியல் வாதிகழுடன் படமெடுத்து வீட்டுச்சுவரில் மாட்டுவதும் ஒரு நடிப்பேயாகும்.
துரை
பார்த்திபன்
தமிழக அரசியல்வாதிகள் சிலர் மட்டுமல்ல, நாங்களும் கோமாளிகள் தான் என்று ராதாரவி பந்தயம் கட்டிக் கொண்டிருப்பது நன்றாகவே தெரிகின்றது…..
பார்த்திபன்
வவுனியாவில் அனாதை குழந்தைகளை கவர்ந்த அசின் பரிசு பொருட்கள் வழங்கினார்!
செய்திகள்வவுனியாவில் உள்ள ஸ்ரீலயா சேவனா காப்பகத்துக்கு சென்ற அசின் குழந்தைகளுடன் அமர்ந்து பல மணி நேரம் செலவிட்டார். அங்குள்ள இளம் பெண்கள் அசினிடம் எங்களை விட்டு போக வேண்டாம் இங்கேயே இருங்கள் என்று சொல்லி பாசத்தோடு ஒட்டிக் கொண்டனர்.வவுனியாவில் நடைபெறும் கண் சிகிச்சை முகாமுக்கும் சென்றார். டாக்டர்களிடம் சிகிச்சை பற்றி கேட்டறிந்தார். டாக்டர்கள் பற்றாக்குறை இருப்பதை சுட்டிக்காட்டி இன்னும் கூடுதல் மருத்துவர்களை பணியமர்த்தலாமே என்று யோசனை சொன்னார். இந்தியாவில் இருந்து 5 கண் மருத்துவர்கள் அங்கு சிகிச்சை அளித்தனர். இப்பகுதி விடுதலைப்புலிகள் வசம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்கு சென்ற அசின் பரிசு பொருட்களை வழங்கினார். சில நிமிடங்களிலேயே அசினுடன் குழந்தைகள் நெருக்கமாகி விட்டனர். அவர் அங்கிருந்து புறப்பட்ட போது சில குழந்தைகள் அழுதனர். அங்கிருந்து போக விடாமல் தடுத்தனர். தயவு செய்து இன்னும் 5 நிமிடம் இருந்து விட்டு போங்கள் அக்கா என்று கெஞ்சினர்.
ஒரு இளம் பெண் அழுதே விட்டார்.அடுத்த முறை நீங்கள் வரும் போது விஜய்,சூர்யா, அஜீத் உள்ளிட்ட எல்லா நடிகர்களையும் அழைத்து வாருங்கள் என்று வேண்டினர். அவர்களிடம் இருந்து கனத்த இதயத்தோடு அசின் விடை பெற்று சென்றார்.
Posted in July 13th, 2010 by salasalappu
BC
ராதாரவியின் அறிவிப்பு இலங்கை தமிழர் விரோத நடவடிக்கை.
பார்த்திபன்
வேண்டுமென்றே என்மீது சர்ச்சையை கிளப்புகிறார்கள்:“இலங்கை தமிழர்களுக்கு உதவுவது தவறா?”
நடிகை அசின் பேட்டி
“என்மீது சிலர் வேண்டுமென்றே சர்ச்சையை கிளப்புகிறார்கள், இலங்கை தமிழர்களுக்கு நான் உதவுவது தவறா?” என்று நடிகை அசின் கேள்வி எழுப்பியுள்ளார்.நடிகை அசின் `ரெடி’ என்ற இந்தி படப்பிடிப்புக்காக இலங்கை சென்றிருக்கிறார். அவர் இலங்கை சென்றது தமிழ்த்திரையுலகில் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு, நடிகர், நடிகைகள் யாரும் செல்லக்கூடாது என்று தடை விதித்திருந்தது.
அந்த தடையை மீறி நடிகை அசின் சென்றிருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு வற்புறுத்தி வருகிறது. இதுதொடர்பாக அசின் மீது நடவடிக்கை எடுப்பது உறுதி என்று நடிகர் ராதாரவி பேட்டி அளித்திருந்தார்.அதற்கு பதில் அளித்து அசின் `தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-
நான் இலங்கை சென்றது அந்த நாட்டின் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அல்ல. என் வேலைக்காக நான் இலங்கை சென்றேன். அது நான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படம். அந்த படத்தின் படப்பிடிப்பை இலங்கையில் நடத்தியது என் கையில் இல்லை. தயாரிப்பாளரும், டைரக்டரும் முடிவு செய்த விஷயம்.
இலங்கை சென்றபின் அங்குள்ள தமிழர்கள் படும் துயரங்களை கேட்டறிந்து அவர்களுக்கு உதவி செய்ய முடிவு செய்தேன். தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியும், விடுதலைப்புலிகள் அதிகம் இருந்த இடமுமான ஜாப்னாவுக்கு துணிச்சலாக சென்றேன். கடந்த 32 வருடங்களாக அந்த பகுதிக்கு எந்த ஒரு முக்கிய பிரமுகரும் செல்லவில்லை. ஒரு பெண்ணாக இருந்தும் நான் துணிச்சலாக போனேன்.
ஜாப்னாவில் உள்ள ஆஸ்பத்திரியில் நோயினால் பாதிக்கப்பட்ட தமிழர்களைப் பார்த்து கண்கலங்கினேன். அவர்களுக்கு உதவுவதற்காக ஒரு அறக்கட்டளையை தொடங்கி இருக்கிறேன். அதன்மூலம் இலவச கண் சிகிச்சை நடத்தினேன். அதில் 300 தமிழர்களுக்கு என் சொந்த செலவில் ஆபரேஷன் செய்தேன்.
இந்தியாவில் இருந்து கண் மருத்துவத்தில் புகழ்பெற்ற 5 டாக்டர்களை என் சொந்த செலவில் வரவழைத்து இந்த இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தினேன். ஒரு நோயாளிக்கான லென்சுக்கு ஆன செலவு ரூ.5 ஆயிரம். நான் 10 ஆயிரம் பேர்களுக்கு இலவச கண் அறுவை சிகிச்சை நடத்த திட்டமிட்டு இருக்கிறேன்.இப்படி இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்வது தவறா? என் மீது எதற்காக நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்? நான் இலங்கை தமிழர்களுக்கு உதவியதற்காகவா? இலங்கையில் நடந்த போரில் அம்மா அப்பாவை இழந்த ஒரு வயது குழந்தை முதல் 16 வயது இளம்பெண்கள் வரை 150 பெண்களை தத்தெடுத்து இருக்கிறேன். இது தவறா?
என்மீது வேண்டுமென்றே சிலர் சர்ச்சையை தூண்டிவிடுகிறார்கள். தமிழ்நாட்டில் இருந்துகொண்டே சும்மா பேசுவதை விட, அறிக்கை விடுவதை விட இலங்கைக்கு வந்து ஜாப்னாவில் உள்ள தமிழர்களுக்கு உதவலாமே. அங்குள்ள தமிழர்கள், “அக்கா தமிழ்நாட்டில் இருந்து யாரும் எங்களை பார்க்க வராதது ஏன்?” என்று கண்கலங்கி கேட்கிறார்கள்.
“விஜய் அண்ணாவையும், சூர்யா அண்ணாவையும் வரச்சொல்லுங்கள் அக்கா” என்று கேட்கிறார்கள். எனக்கு சரி என்று தோன்றியதைத்தான் நான் செய்திருக்கிறேன். என் மீது சர்ச்சையை தூண்டிவிடுபவர்கள் பற்றி கவலை இல்லை.
இவ்வாறு நடிகை அசின் கூறினார்.
Theene.com
BC
தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு விதித்த தடையை மீது அசின்னின் நியாயமான அறச்சீற்றம் இது.
யாழ்பாணத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் நோயினால் பாதிக்கப்பட்ட தமிழர்களைப் பார்த்து கண்கலங்கினேன். அவர்களுக்கு உதவுவதற்காக ஒரு அறக்கட்டளையை தொடங்கி இருக்கிறேன். அதன்மூலம் இலவச கண் சிகிச்சை நடத்தினேன். அதில் 300 தமிழர்களுக்கு என் சொந்த செலவில் ஆபரேஷன் செய்தேன்.ஒரு நோயாளிக்கான லென்சுக்கு ஆன செலவு ரூ.5 ஆயிரம். நான் 10 ஆயிரம் பேர்களுக்கு இலவச கண் அறுவை சிகிச்சை நடத்த திட்டமிட்டு இருக்கிறேன். எது தவறு? இப்படி இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்வது தவறா? என் மீது எதற்காக நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்?நான் இலங்கை தமிழர்களுக்கு உதவியதற்காகவா? இலங்கையில் நடந்த போரில் அம்மா அப்பாவை இழந்த ஒரு வயது குழந்தை முதல் 16 வயது இளம்பெண்கள் வரை 150 பெண்களை தத்தெடுத்து இருக்கிறேன். இது தவறா? என்மீது வேண்டுமென்றே சிலர் சர்ச்சையை தூண்டிவிடுகிறார்கள். தமிழ்நாட்டில் இருந்துகொண்டே சும்மா பேசுவதை விட அறிக்கை விடுவதை விட இலங்கைக்கு வந்து ஜாப்னாவில் உள்ள தமிழர்களுக்கு உதவலாமே.இவ்வாறு அசின் கூறினார்.
ராஜதுரை
இலங்கையில் தமிழனுக்கு சோற்றுக்குத் திண்டாட்டம்! அந்தத் திண்டாட்டத்தின் மத்தியில் ‘அசின்’ வவுனியாவுக்கு வந்து வண்டாட்டம்…
“ஆக மொத்ததில், அசின் வந்ததால் இலங்கைத் தமிழர் பிறவிப்பயனைப் பெற்று ஜென்மசாபல்யம் பெற்றுக்கொண்டனர்”, அப்படியா?
அப்படியாயின் ஏனிந்த 30ஆண்டுகாலப் போராட்டம், எத்தனையோ அழிவுகள், இழப்புக்கள்? பேசாமல் அந்தக்காலத்தில் சாவித்திரியையோ, அல்லது சிலுக்கு சுமிதாவையோ கூட்டி வந்து – படம் காட்டியிருந்தால், இந்தப் பாரிய அழிவிலிருந்து இலங்கைத் தமிழினம் காத்திருக்கப்பட்டிருக்கலாம் தானே?
இலங்கைத் தமிழரின் வீடுபேற்றின் விடிவெள்ளியும், சுபீட்சத்தின் ஒரேயொரு நம்பிக்கைப் புள்ளியும் இனிமேல் அசினாகத் தான் இருக்க வேண்டும் போலிருக்கிறது!
நடிகர்களையும், படம் காட்டிப் பித்தலாட்டம் செய்பவர்களையும் நம்பி ஏமாறுகின்ற நமது ஏமாளித்தனமான போக்கு, எப்போதுதான் ஓயும்?
பார்த்திபன்
ராஜதுரை,
அசின் ஒன்றும் ஆண்டவன் கிடையாது. இங்கே கருத்துகள் பரிமாறப்படுவது அசின் படப்பிடிப்பிற்காக இலங்கைக்கு வந்ததால், அவர் மீதான திரையுலகின் தடை நடவடிக்கை பற்றியது. அசின் தொழில்முறையில் ஒரு நடிகை. அவர் ஒரு படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டால், அந்தப்படத்தின் படப்பிடிப்புகள் எங்கு நடத்தப்பட வேண்டுமென்பதை முடிவு செய்வது தயாரிப்பாளரும், இயககுனரும். அதனைப்பற்றி அசின் முடிவெடுக்க முடியாது. படப்பிடிப்பிற்காக இலங்கை சென்றாலும் அங்கு இன்னும் அகதியாய் அல்லலுறும் மக்களைச் சந்தித்து தன்னாலான உதவிகளைச் செய்து ஆறுதல் கூறியது பாராட்டத்தக்க விடயமே. முள்ளிவாய்க்காலில் கதை முடிந்து போனவரை இன்னும் உயிரோடிருக்கின்றார் என்று கதையளந்து, முன்பு சுருட்டிய பணங்களையும் அமுக்கி, இன்னும் தொடர்ந்து சுருட்டிக் கொண்டு அந்த மக்களுக்காக வெறும் அறிக்கைகளை விட்டுக் கொண்டிருப்பவர்களை விட, தன்னால் முடிந்த உதவிகளை அந்த மக்களுக்கு செய்ய முன் வந்த அசின் எவ்வளவோ மேல். அசினின் வருகையால் அந்த மக்களின் துன்பத்திலும் அவர்களுக்கு சிறிது ஆறுதல் கிடைத்ததா இல்லையா என்பதைக் கூறவேண்டியது நீங்களும் நானுமல்ல. அசின் விடைபெறும் போது கண்ணீர் விட்டழுத அந்த மக்கள் தான் கூற வேண்டும்.
BC
இலங்கையில் பயங்கரவாதிகளின் 30வருட கால நடவடிக்கைகளால் தமிழனுக்கு சோற்றுக்குத் திண்டாட்டம் ஏற்பட்டாலும் தங்களுக்கு பிடித்த நடிகையை நேரில் பார்த்து சந்தோசபட விரும்புகிறார்கள். அசின் தடையை மீறி அந்த மக்களை சந்தித்தாலே அதுவே உதவி தான். ஆனால் அவர் பெற்றோரை இழந்த பிள்ளைகள் சிலரை தத்தெடுக்கிறார், 300 தமிழர்களுக்கு கண் அறுவை சிகிச்சை செய்வித்துள்ளார். இன்னும் சிகிச்சை செய்விக்க திட்டமிட்டுள்ளார். ரஜனி விஜய் அஜித் இருந்து அசின் வித்தியாசப்படுகிறார். புலம் பெயர்ந்தவர்கள் சிமான், வைகோ, திருமாளவன் போன்றோரை பணம் செலவழித்து கூப்பிடுவது அவர்களின் இனவாத வன்முறை பேச்சுகளை கேட்டு குதுகலிப்பதற்காக தானே! ஒரு நடிகையை பார்ப்பதால் இப்படியான தீமை நிகழாது.
சுகுணகுமார்
||அப்படியாயின் ஏனிந்த 30ஆண்டுகாலப் போராட்டம் எத்தனையோ அழிவுகள், இழப்புக்கள்? பேசாமல் அந்தக்காலத்தில் சாவித்திரியையோ, அல்லது சிலுக்கு சுமிதாவையோ கூட்டி வந்து – படம் காட்டியிருந்தால், இந்தப் பாரிய அழிவிலிருந்து இலங்கைத் தமிழினம் காத்திருக்கப்பட்டிருக்கலாம் தானே?||
ஒரு பைத்தியத்தின் தலைமையில் தமிழ் மக்களை கடந்த 30வருடகலமாக பணயக்கைதிகளாய் வைத்திருந்தது மட்டுமல்லாது நன்றே மூளைச்சலவையும் செய்துள்ளது. அந்த பைத்தியத்தின் மூளைச்சலைவையுடன் ஒப்பிடுகையில் அன்று சிலுக்கு வந்து குலுக்கியிருந்தால் அந்த பைத்தியத்திற்கும் வைத்தியம் கொடுத்த மாதிரி இருந்திருக்கும்!
thurai
உலகமுழுவதும் நடிகர், நடிகைகள், பாடகர்கள் யாவரையும் அழைத்து பண வசூல் செய்யும் புலிகளும், உல்லாச பயணம் செய்யும் திரையுலக்மும், ஏழைகளின் கண்ணீர் துடைக்கும் அசினை துரோகிகளாக்ப் பார்பதேனோ?
அடிடாஸ், பூமா போன்ற தனியுடமை நிறுவன்ங்கள் போல தமிழும் தமிழக சினிமாவிற்கும், புலத்துப் புலிகளிற்கும் மட்டும் சொந்தமானதா?
சிங்களவர் தமிழரை அடிமைகளாக்குகிறார்களா அலல்து புலிகழும், தமிழக சினிமாவும் ஈழத்தமிழரை என்றும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவே விரும்புகின்றார்களா?
துரை
சாந்தன்
//…. கடந்த 32 வருடங்களாக அந்த பகுதிக்கு எந்த ஒரு முக்கிய பிரமுகரும் செல்லவில்லை. ஒரு பெண்ணாக இருந்தும் நான் துணிச்சலாக போனேன்….//
தமிழ்ப்பட ஹீரோயின் அல்லவா? அதுதான் அவ்வளவு துணிச்சல்!ஜாப்னாவுக்கு துணிச்சலாக போனாவாம்! மணி !
//… “அக்கா தமிழ்நாட்டில் இருந்து யாரும் எங்களை பார்க்க வராதது ஏன்?” என்று கண்கலங்கி கேட்கிறார்கள்…..//
அப்ப கனிமொழி அக்கா கோஷ்டி போகவில்லையா? போச்சாடா போச்சு!
//’…. அக்கா” என்று கேட்கிறார்கள்….// என்று எழுதி அவரின் 16 வயது கதாநாயகி ரோலுக்கு ஆப்பு வைக்கிறாங்கள் என கொஞ்ச நாளில் அழுவதும் நடக்கும்!
/….“விஜய் அண்ணாவையும், சூர்யா அண்ணாவையும் வரச்சொல்லுங்கள் அக்கா” என்று கேட்கிறார்கள்….//இதுதான் உச்சம்! அப்பப்பா…புல்லரிக்குது !!
பார்த்திபன்
//தமிழ்ப்பட ஹீரோயின் அல்லவா? அதுதான் அவ்வளவு துணிச்சல்!ஜாப்னாவுக்கு துணிச்சலாக போனாவாம்! மணி !
அப்ப கனிமொழி அக்கா கோஷ்டி போகவில்லையா? போச்சாடா போச்சு!
அவரின் 16 வயது கதாநாயகி ரோலுக்கு ஆப்பு வைக்கிறாங்கள் என கொஞ்ச நாளில் அழுவதும் நடக்கும்!
இதுதான் உச்சம்! அப்பப்பா…புல்லரிக்குது !!//
ஒரு பைத்தியத்தின் தலைமையில் தமிழ் மக்களை கடந்த 30 வருடகலமாக பணயக்கைதிகளாய் வைத்திருந்தது மட்டுமல்லாது, நன்றே மூளைச்சலவையும் செய்துள்ளது.
– நன்றி சுகுணகுமார்
கந்தையா
கொஞ்சக் காலமாய் சிலரை இந்தப்பக்கம் காணேலை எண்டு பார்த்தால் அசின் செய்திகளுடன் அமர்க்களமாய் வந்திறங்கினாங்கள். பல்லிதான் ஓராள் மிச்சம் போலிருக்கு.
பார்த்திபன்
// கொஞ்சக் காலமாய் சிலரை இந்தப்பக்கம் காணேலை எண்டு பார்த்தால் அசின் செய்திகளுடன் அமர்க்களமாய் வந்திறங்கினாங்கள். //
(மன)நோயாளிகள் அதிகரிக்கும் போதுதான் வைத்தியர்களின் தேவைகளும் அதிகரிக்கின்றது…….
palli
//கொஞ்சக் காலமாய் சிலரை இந்தப்பக்கம் காணேலை எண்டு பார்த்தால் அசின் செய்திகளுடன் அமர்க்களமாய் வந்திறங்கினாங்கள். பல்லிதான் ஓராள் மிச்சம் போலிருக்கு.//
கந்தையா அண்ணா உங்கள் கேலிக்கு பார்த்திபன் பதில் போதும்; ஆனாலும் பல்லியிடம் பதிலை எதிர்பார்ப்பது நையாண்டிதான்; இருப்பினும் அசினை வைத்து ஈழதமிழர் அரசியலை பேசும்படி வைத்த உங்கள் நேர்மை எனக்கு பிடித்திருக்கு; ஆனாலும் நமிதா வந்தபின் பல்லியின் பகுத்தறிவை பாவிக்கலாம் என மானாட மயிலாட பார்த்து கொண்டு இருந்து விட்டேன்,
அண்ணனை உங்க பின்னோட்டம்
குளிக்காத பெண்ணும்
குடிக்காத ஆணும்
மலடு என்பது போல் உள்ளது;