கே பி என்று அறியப்பட்ட குமரன் பத்மநாதனுடைய புதிய படம் ஒன்று இணையங்களில் உலாவருகின்றது. விடுதலைப் புலிகளின் அதிமுக்கிய நபரான இவரது உண்மைத் தோற்றம் கடந்த பல ஆண்டுகளாக அறியப்படாத இரகசியமாகவே பேணப்பட்டது. விடுதலைப் புலிகளின் ஆரம்ப காலங்களில் எடுக்கப்பட்ட படங்களால் மட்டுமே இவர் அறியப்பட்டு வந்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச இணைப்பாளராக அறிவிக்கப்பட்ட போது ஒரு படம் வெளியிடப்பட்டு இருந்த போதும் அது கே பியின் உண்மைத் தோற்றத்தை வெளிப்படுத்தி இருக்கவில்லை. அதன்பின் இலங்கை அரசால் கைதுசெய்யப்பட்ட பின் வெளியிடப்பட்ட படமே பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.
தற்போது கே பி யின் புதியபடம் ஒன்று இணையங்களில் உலாவவிடப்பட்டு உள்ளது. கைத்தொலைபேசியுடனும் சிரித்த முகத்துடனும் சந்தோசமான மனநிலையுடன் இவர் காணப்படுகின்றார். இப்படம் இலங்கை அரசினால் வெளியிடப்பட்ட படமா அல்லது கே பி க்கு எதிரானவர்களால் கே பி இலங்கை அரசின் ஆதரவில் மகிழ்ச்சியாக உள்ளார் என்பதை வெளிப்படுத்த அனுமதியற்று எடுக்கப்பட்ட படமா என்பது தெரியவில்லை.
கந்தையா
இது இலங்கையில்தான் சமீபத்தில் எடுக்கப்பட்ட படமாக இருக்கலாமென எதை வைத்துச் சொல்கிறீர்கள்.
பார்த்திபன்
இந்தப் படத்தை முதலில் விகடனில் வெளிவந்த “கே.பி துரோகியா” என்ற கட்டுரையில் பார்த்தேன். அப்போதே யோசித்தேன் சனல் 4 இல் பேட்டியளித்துவிட்டு சவரம் செய்யாத வாடிய முகத்துடன் நடக்க முடியாமல் தடுமாறியபடி நடந்த கே.பி எங்கே?? மெருகேறிய மேனியுடன் முகப்பொலிவுடனும் வரும் தற்போதைய கே.பி எங்கே?? என. மொத்தத்தில் கே.பி நன்கு சுகபோகமாகவே வாழ்கின்றார் என்பது நன்றாகவே தெரிகின்றது. அநேகமாக இந்தப்படம் கே.பியுடன் அரசில் சந்திப்பு நடத்திய 9 பேர்களில் ஒருவர் எடுத்ததாக இருக்கலாம்.
thurai
புலத்துப் புலிகளிற்குக் கவலை கே.பி துரோகியென்பதல்ல. தங்களை விட கூடுதலாக சுருட்டி விட்டாரென்பதுதான்.
அமரர் தந்தை செல்வாவின் நினைவுத்தூபியின் அருகில் பிரபாகரனிற்கு துரோகியாகக் காட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட துரையப்பாவின் மைதானம் உள்ளது.
புலத்துப்புலிகளின் தலைவர் பிரபாகரனிற்கோ, அல்லது அவர்களால் துரோகியாக்கப்பட்ட கே.பி.க்கோ எங்கு சிலை வைக்கப் போகின்றார்கள். தமிழர்களிற்குத்தான் புலத்துப் புலிகளால் அழிவுகள் நேர்ந்த்தென்றால், தலைவராலும், கே.பியாலும் தங்கள் வாழ்வை வளமாக்கிய புலத்துப் புலிகளின் பதிலை எதிர்பார்க்கின்றேன்.
துரை