தற்போது இடைக்கிடையே பெய்து வரும் மழை காரணமாக வன்னியில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். கூரைகளற்ற வீடுகளிலும் தறப்பாள் கூடாரங்களிலும் வசிக்கும் மக்கள் மழை பெய்யும் போது பெரும் அவலங்களுக்கு உள்ளாகின்றனர். கூரைகளற்ற வீடுகளின் உள்ளேயும், தறப்பாள் கூடாரங்களுக்குள்ளும் மழைநீர் புகுந்து விடுவதால் சிறுகுழந்தைகள், வயோதிபர்கள் உள்ள குடும்பங்கள் பெரும் துன்பங்களை அனுபவிக்க நேரிடுகின்றது. அவர்களது நிவாரண உணவுப்பொருட்களும் மழையில் நனைந்து நாசமாகின்றன.
முன்னர் மீள்கடியேற்றப்பட்ட மக்கள் தற்காலிகக் கூடாரங்களை அமைத்துக்கொள்ள பன்னிரண்டு கூரைத் தகரங்கள் வழங்கப்பட்டு வந்தன. தற்போது மீள்குடியேற்றப்படும் மக்களுக்கு அவை வழங்கப்படுவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை. எதிர்வரும் பருவமழைக்கு முன்பாக இம்மக்களுக்கான வீடுகள் ஒழுங்கமைக்கப்படா விட்டால் பாரிய அவலங்களுக்கு அவர்கள் முகம் கொடுக்க வேண்டிவரும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.