வடமராட்சியில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டு அவரது உடமைகள் கொள்ளையிடப்பட்டு உள்ளன. 13-07-2010 வடமராட்சி இமையாணன் கிழக்கு, உடுப்பிட்டியில் முற்பகல் 11 மணியளவில் 40 வயதான திருமணமாகாத பெண்ணான ஜெயகௌரி என்பவரது சடலம் வல்வெட்டித்துறை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இவரை கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்த (July 11 2010) காணவில்லை என அயலவர்களினால் தெரிவிக்கப்பட்டிருந்தது. நேற்று இவரின் சடலம் கிணறு ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
இவரின் தலையில் அடிகாயங்கள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவரது விட்டிலிருந்த தொலைக்காட்சிப் பெட்டி, கைத்தொலைபேசி மற்றும் இவரது நகைகள் யாவும் கொள்ளையிடப்பட்டுள்ளன. இவரது நான்கு சகோதரர்கள் வெளிநாட்டிலுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவரது கொலை தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.