‘நாட்டு மக்கள் எல்லோருமே ஒன்று தான் அனைவருக்கும் அனைத்தும் கிட்ட வேண்டும்!’ கிளிநொச்சியில் ஜனாதிபதி

Rajaparksa_in_Killinochieநேற்று (14 June) கிளிநொச்சியில் ஜனாதிபதி கலந்து கொண்ட அமைச்சரவைக் கூட்டமும், பொதுமக்கள் மத்தியில் உரையாற்றும் நிகழ்வும் நடைபெற்றுள்ளது. முற்பகல் வேளையில் அமைச்சரவைக் கூட்டம் இரணைமடுக் குளத்திற்கருகே  அமைந்துள்ள கிளிநொச்சி மாவட்ட இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்றது. தமிழ்ச்செல்வனின் இல்லம் என்றும் விடுதலைப் புலிகளின் அரசியல் செயலகம் என்றும் ஊடகங்களில் வெளிவந்திருந்த போதும், உண்மையில் அது நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு சொந்தமான கட்டடம் ஆகும் தற்போது அது கிளிநொச்சி மாவட்ட இராணுவத் தலைமையகமாகவுள்ளது.

Rajaparksa_in_Killinochieபிற்பகல் கிளிநொச்சியில் பொதுமக்கள் மத்தயில் ஜனாதிபதி உரைநிகழ்த்தினார். ஆனால், பொதுமக்கள் அனைவரும் அக்கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை என கிளிநொச்சி மக்கள் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தில் பணியாற்றும் அரச ஊழியர்கள் மற்றும் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே இதில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தவேளை, பொதுமக்கள் ஏ-9 பாதையுடாக பயணிப்பது தடைசெய்யப்பட்டிருந்ததாகவும் பலத்த பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்ததாகவும் கிளிநொச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வன்னிப்பிரதேசத்தில் அபிவிருத்திப்பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும், நாட்டு மக்கள் எல்லோருமே ஒன்று தான் அனைவருக்கும் அனைத்தும் கிட்ட வேண்டும் எனவும் ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் கொழும்பிற்கு வெளியே கூட்டப்பட்ட முதலாவது கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    // நாட்டு மக்கள் எல்லோருமே ஒன்று தான் அனைவருக்கும் அனைத்தும் கிட்ட வேண்டும் எனவும் ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்தார். //

    சொல்லிற்கும் செயலிற்கும் சம்மந்தமில்லாமல் மகிந்த அரசே பல விடயங்களை நடைமுறைப்படுத்தி, தமிழர்களை வேறுபடுத்திக் காட்டிவருகின்றது. இதற்கு நல்லதோர் உதாரணம் சமீபத்தில் மீண்டும் தலைநகர் வரும் தமிழர்கள் மாத்திரம் பொலிசாரிடம் சென்று பதிவுகளை மேற்கொள்ள வேண்டுமென்ற கட்டளை. என்று மகிந்த அரசு தனது சொல்லையும் செயலையும் ஒன்றாக்கி, தமிழ் மக்களையும் பாரபட்சமின்றி கவனிக்க முன்வருகின்றதோ, அன்று தான் இச்செய்தி உண்மையாகும்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….நாட்டு மக்கள் எல்லோருமே ஒன்று தான் அனைவருக்கும் அனைத்தும் கிட்ட வேண்டும் எனவும் ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்தார்…//

    இதைத்தான் 50 வருசமாக தினகரன், வீரகேசரி யில் பொங்கல் தீபாவளி ‘வாழ்த்துச்செய்திகளில்’ பார்க்கிறோமே. ஏன் சும்மா ரைமை வேஸ்ற் பணி ஸ்ரேற்மன்ற்..அதை தேசத்தில் விவாதம்.
    ஐ.நாவின் முன்னைநாள் அதிகாரீ திரு கோடன் வைஸ் ஸ்ரீலங்கா அரசு பற்றி அண்மையில் சொல்லி இருப்பது கீழே…
    “Its [Sri Lanka’s] government is dominated by racist ideologues who promote the notion of the Sinhalese as a “chosen people.”

    சிங்கள மக்களே “தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்” எனும் கருத்தாக்கத்தை முன்னெடுக்கும் இனவாத கொள்கையாளர்களால் ஸ்ரீலங்கா அரசு மேலாண்மை செய்யப்படுகிறது என்கிறார். ஆனால் முட்டுக்கொடுப்பதில் அசினுடன் போட்டி போடுகிறார்கள் நம்மவர்கள்!

    Reply
  • chandran.raja
    chandran.raja

    ஊடகச் செய்திகள் பொய் திரிபு வறட்டு வாதங்களுக்கு உட்பட்டவை. அதை நாம்தான் அலசி ஆராய்ந்து உண்மை தன்மையை அறியமுற்பட வேண்டும். கொழும்பில் குடியிருக்கும் தமிழர்கள். தலைநகருக்கு வரும் தமிழர்கள். வெளிநாடுகளில் இருந்து வரும் தமிழர்கள். என்பது போன்ற வாசங்களில் வெவ்வேறு அர்த்தங்களை வெளிப்படுத்துபவை அல்லாமலும் வேறுபல இணைப்புகளை சேர்ப்பதற்கும் வசதியானவை. ஒவ்வொரு ஊடகங்களும் தமது வசதிக்கேற்றமாதிரி இதை கையாளுவதற்கு இடம் உண்டு.நேற்று கொழும்புக்கு தொலைபேசியில் கதைத்ததில் அவர் சொன்ன பதில் இதோ..”நீங்கள் தான் வெளிநாடுகளில் இருந்துகொண்டு புதுப்புது கதைகளாக சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்”. என்பதே.

    Reply