அமெரிக்க யுத்தக் கப்பல் திருமலையில்

war.jpgஅமெரிக்க யுத்தக் கப்பல் பேர்ள் ஹார்பர் எல்.எஸ்.டி. 52 திருகோணமலைக்கு வருகை தந்துள்ளது. நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (13) காலை 11.00 மணியளவில் இக்கப்பல் திருகோணமலை சீனக்குடா அஷ்ரப் இறங்கு துறையில் நங்கூரமிட்டுக் கொண்டது. இதில் 800 படையினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பசுபிக் பிராந்திய கடற்படைக்குச் சொந்தமான இக்கப்பல் இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதல் தடவை. திருகோணமலைக்கு வருகை தந்த இக்கப்பல் நாளை வெள்ளிக்கழமை (16) வரை தரித்து நிற்கும். இக்கப்பலில் வந்தோர் திருகோணமலையில் பல வேலைத்திட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

திருகோணமலை கடற்படைத்தள வீதியில் அமைந்துள்ள மெதடிஸ்த சிறுவர் இல்லத்திற்கு சென்ற இவர்களுள் ஒரு பகுதியினர் அச்சிறுவர் இல்லத்திற்கு வேண்டிய வர்ணங்களை பூசியதோடு துப்புரவுப் பணிகளிலும் ஈடுபட்டனர். மற்றொரு குழுவினர் திருகோணமலையின் வடக்கே அமைந்துள்ள திரியாய் கிராமத்திற்கு சென்று திரியாய் தமிழ் மகா வித்தியாலயத்தில் சுத்திகரிப்பு பணிகளில் ஈடுபட்டனர். திருகோணமலைக்கு வந்துள்ள படையினரை இலங்கை கடற்படையினர் வரவேற்று இவ் இடங்களுக்கு அழைத்துச் சென்றனர். திருகோணமலையில் இவர்கள் சமூக அபிவிருத்தி வேலைகள், மருத்துவ முகாம்கள், என்பனவற்றை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • கந்தையா
    கந்தையா

    மேதகு அனுப்பச் சொல்லி ஒபாமாவிட்டை ஓடர் போட்டபோது கப்பல் விடேலை ஆனா இப்ப ஏதோ வந்து நிக்கிறாங்கள். 20 வருடத்துக்குப் பிறகு யாருக்கு அல்லது எந்த நாட்டுக்கு உலை வைக்கப் றோங்களோ?…

    Reply
  • thurai
    thurai

    இந்தக் கப்பலின் இலங்கை வருகை குறித்து புலிகளின் மவுனம் ஏனோ. ஒரு வேளை உருத்திரக்குமார் அனுப்பிய கப்பலாக இருக்குமோ.

    துரை

    Reply
  • BC
    BC

    தலைவரை காப்பாற்ற அமெரிக்கா கப்பல் அனுப்பாத கோபத்தால் இப்போ திருகோணமலைக்கு வந்த அமெரிக்க கப்பல் பற்றி புலியாதரவு இணைய தளம் இன்று எழுதிய கட்டுரையின் தலைப்பு “தமிழர் வளத்தை அள்ளத்துடிக்கும் வல்லரசுகள்”

    Reply