இலங்கையில் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவி வரும் இவ்வேளையில், நேற்று (June 15 2010) யாழ்ப்பாணத்தில் டெங்கு ஒழிப்பு தொடர்பான கூட்டம் ஒன்று நடைபெற்றது. வடமாகாண சகாதார வைத்திய அதிகாரிகள், பிரதேச சபை செயலாளர்கள், கல்விப்பணிப்பாளர்கள் ஆகியோர் இக்கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், யாழ்.மாநகரசபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, யாழ்.மேலதிக கல்விப்பணிப்பாளர் தி.செல்வரத்தினம், யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கடந்த சில தினங்களில் இலங்கையின் தென்பகுதிகளில் டெங்கு காய்ச்சலினால் சிலர் பாதிக்கப்பட்டும் உயிரிழந்துமுள்ள நிலையில். யாழ்.மாவட்டத்தில் இதன் தாக்கத்தை கட்டப்படுத்துவது தொடர்பாக இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது.