கிளிநொச்சியிலும் மாங்குளத்திலும், நவீன வசதிகள் கொண்ட பிராந்திய அஞ்சல் நிலையங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வடமாகாண பிரதி அஞ்சல் மாஅதிபர் வி.குமரகுரு தெரிவித்துள்ளார். தபால்கள் சேகரிப்பு, தரம்பிரிப்பு உட்பட சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளக்கூடியதாக இப்பிராந்திய அஞ்சல் அலுவலகம் இயங்கும் எனவும் அவர் தெரிவித்தார். இப்பிராந்திய அஞ்சல் அலுவலகங்களுக்கான கட்டட வேலைகள் விரைவாக மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.