தென்னிலங்கையில் தெஹிவளை. கல்கிஸை பிரதேசங்கள் டெங்கு நோய் அபாயப் பிரதேசங்களாக பிரடனப்படுத்தப்பட்டுள்ன. கடந்த யூன் மாதமும், நடைபெறும் யூலை மாதமும் இப்பகுதிகளில் டெங்கு நோயாளிகள் அதிகமாக இனங்காணப்பட்டுள்ளனர். இப்பிரதேசங்களில் இந்நோயின் தாக்கம் வெகுவாக அதிகரித்து வருவதால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பிரதேசங்களில் வீடு வீடாகச் சென்று டெங்கு நோய் தொடர்பான அறிவறுத்தல்கள் வழங்கப்பட நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக கல்கிஸை மாகநரசபை தெரிவித்துள்ளது.