ஊடக அபிவிருத்தி அதிகார சபை ஒன்றை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெகுசன ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்ல தெரிவித்தார். கண்டி மாவட்ட ஊடகவியலாளர்களுக் கான கருத்தரங்கொன்றை கண்டி சுவிஸ் ஹோட்டலில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் தொடர்ந்து கூறுகையில் :ஊடகவியலாளர்களின் தொழில்சார் தன்மை மற்றும் அது சார்ந்த துறையில் மேம்பாட்டையும் ஏனைய தொழில் துறையினருக்குக் கிடைக்கின்ற தொழில் அங்கீகாரத்தை ஊடகவியலாளர்களுக்கும் ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும் எனக் குறிப்பிட்டார்.
இந்த அதிகார சபை ஊடாக ஊடகங்களை கட்டுப்படுத்தாது அதற்குப் பதிலாக ஊடகவியலாளர்களின் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும் என மேலும் தெரிவித்தார்.