யாழ் போதனா வைத்தியசாலையில் மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மூன்று நாட்களாக இத்தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியசாலை நோயாளிகள் தெரிவிக்கின்றனர். இம்மருந்து தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
முன்றாம் ஆண்டு காலாண்டுக்கான மருந்துப் பொருட்கள் இது வரை வராத காரணத்தினாலேயே இத்தட்டுப்பாடு நிலவுவதாக வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதே வேளை, யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகளுக்கான இரத்தப் பரிசோதனைகள் உட்பட்ட மருத்துவ பரிசோதனைகள் அங்கு செய்யப்படுவதில்லை எனவும் தனியார் மருத்துவ ஆய்வு கூடங்களிலேயே இப்பரிசோதனைகளை மேற்கொள்ள நோயாளிகள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.