ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயத்திற்கு முன்பாக நபரொருவர் தனக்குத்தானே தீமுட்டிக்கொண்ட சம்பவம் நேற்று மாலை (26-07-2010) நடைபெற்றுள்ளது. கொழும்பில் அமைந்துள்ள ஐக்கியதேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயமான சிறிக்கோத்தாவின் முன்பாக வைத்து இந்த நபர் தன்னைத் தீயிட்டுக்கொண்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடுமையான எரிகாயங்களுடன் இந்நபர் தற்போது களுபோவில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
வெலிகம என்ற இடத்தைச் சேர்ந்த றியான்சி அல்கம என்ற 60 வயதான நபரே இவ்வாறு தீயிட்டுக்கொண்டவர் என களுபோவில வைத்தியாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதே வேளை, ஐக்கியதேசியக் கட்சிக்குள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படும் கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இவர் தீக்குளிப்பு நடவடிக்கையில் இறங்கினார் என மற்றுமொரு செய்தி தெரிவிக்கின்றது.