கிளிநொச்சியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கான பணிகளை கிராமசேவகர்கள் இழுத்தடித்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் குறை கூறுகின்றனர். மீள்குடியமர்ந்துள்ள மக்கள் பல்வேறு பதிவுகளுக்காக கிராமசேவகர்களை நாடவேண்டியுள்ளது. இந்நிலையில் சில கிராமசேவகர்கள் மக்களை அலைக்கழிப்பதும். பொதுமக்களிடம் சினந்து கொள்வதுமாக நடந்துகொள்வதாக பொதுமக்களால் தெரிவிக்கப்படுகின்றது. கிராமசேவையாளர்களிடம் பணிபரியும் அவர்களின் உதவியாளர்களும் மக்களிடம் சரியாக நடந்து கொள்வதில்லை என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் வைத்து பொதுமகன் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் எல்லாப் பதிவகளுக்கும் கிராசேவர்களையே நாடவேண்டியுள்ளது ஆனால், அவர்வர்களிடம் சென்று அவற்றை செய்து கொள்வதென்பது சிரமமானதாகவுள்ளது சில வேலைகளை வேறு அதிகாரிகளிடம் சாதாரணமாக சென்று மேற்கொள்ளக்கூடியதாவுள்ளது. எனத் தெரிவித்தார்.
கிளிநொச்சிப் பிரதேசங்களில் உள்ள கிராமசேவகர்கள் சிலர் சிலரிடம் லஞ்சம் பெற்று உதவிகளைச் செய்வதாகவும் சிலர் முழுநேரமும் மது போதையில் காணப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.