வன்னியில் கிளிநொச்சி மாவட்டத்தில் குறிப்பிட்ட அளவிலான மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதும் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார வசதிகளை மேற்கொள்ளும் பணிகள் மிகவும் மந்த கதியிலேயே நடைபெற்று வருகின்றன. குறிப்பாக அழிவடைந்த பொதுமக்களின் வீடுகளை மீளமைத்துக்கொடுக்கும் பணிகள், சேதமடைந்த வீடுகளை புனரமைத்துக் கொடுக்கும் பணிகள் என்பன மிக மெதுவாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் தங்கள் சொந்தக் காணிகளிலும் கூடாரங்களிலேயே தொடர்ந்தும் வசித்து வரும் நிலை காணப்படுகின்றது.
இதேவேளை, முறிகண்டிப்பகுதியில் பெருமளவிலான வீடமைப்புப் பொருட்கள் கொண்வரப்பட்டு குவிக்கப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகிறது. முறிகண்டியில் ஏ-9 பாதையின் இருமருங்கிலும் பெருமளவிலான வீடமைப்புப் பொருட்கள் காணப்படுகின்றன. இவை இராணுவத்தினருக்கான வீடுகளை அமைப்பதற்கானவை எனவும் பொதுமக்களுக்கானவை அல்ல எனவும் தகவல்கள் தெரவிக்கின்றன.