தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் ஜனாதிபதியின் ஆலோசகரும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவருமான வாசுதேவ நாணயக்காரவை நாளை (02-08-2010) சந்திக்கவுள்ளனர். நீண்டகாலமாக எதுவித விசாணைகளுமின்றி சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர், உறவினர்கள் கடந்த மாதம் இவ்விடயம் குறித்து வாசுதேவ நாணக்காரவிடம் தெரிவித்திருந்தனர். இதற்கிணங்கவே இச்சந்திப்பு நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை திங்கள் கிழமை இச்சந்திப்பு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சந்திப்பின் பின்னர் வாசுதேவ நாணயக்கார ஜனாதிபதியை சந்தித்து இப்பிரச்சினை குறித்து கலந்துரையாடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.