மடுத் திருத்தல வருடாந்த திருவிழாவை யொட்டி விசேட ரயில், பஸ் சேவைகளை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. திருவிழாவுக்குச் செல்லும் யாத்திரிகர்களின் நன்மை கருதி வழ மையான ரயில் சேவைகளுக்கு மேலதிக மாக சேவைகளை நடத்தவும் இதனோடி ணைந்ததாக மதவாச்சியிலிருந்து விசேட பஸ் சேவைகளை நடத்தத் தீர்மானித் துள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.
நீர்கொழும்பு – மதவாச்சி, களுத்துறை – மதவாச்சி, மதவாச்சி – மொரட்டுவை, மதவாச்சி – களுத்துறை கொழும்பு கோட்டை – மதவாச்சி என இந்த ரயில் சேவைகள் 13 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.
இதற்கிணங்க 13, 14ம் திகதிகளில் நீர்கொழும்பிலிருந்து மதவாச்சிக்கும் 14ம் திகதி களுத்துறையிலிருந்து மதவாச்சிக்கும், 15ம் திகதி மதவாச்சியிலிருந்து மொரட்டுவைக்கும், மதவாச்சியிலிருந்து களுத்துறைக்கும் இந்த ரயில் சேவைகள் நடைபெறவுள்ளன. அத்துடன் வழமையான ரயில்களின் பயணிகள் பெட்டிகளை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளன. இதற்கிணங்க நீர்கொழும்பிலிருந்து காலை 7.45ற்கும் மதவாச்சியிலிருந்து நீர்கொழும்பிற்கு பிற்பகல் 1.45 ற்கும் ரயில்கள் புறப்படவுள்ளன.