இலங்கை இந்திய அணிகளுக்கிடையேயான 3 ஆவது ரெஸ்ட் போட்டி கொழும்பு பி. சரவணமுத்து மைதானத்தில் நடைபெறுகின்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கையணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய இலங்கை அணியினர் தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 425 ஓட்டங்களை பெற்றுள்ளது.
துடுப்பாட்டத்தில் டி.எம்.டில்ஷான் 48 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ரன்னவுட் முறையில் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது, சங்கக்கார 75 ஓட்டங்களையும் ஜயவர்தன 56 ஓட்டங்களையும் சமரவீர ஆட்டமிழக்காது 137 ஓட்டங்களையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.