வெற்றி எவ்.எம் வானொலி நிலையத்தின் மிதான தாக்குதலுக்கும் அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அமைச்சர் கெஹலியரம்புக்வெல தெரவித்துள்ளார். அரசாங்கத்தின் ஆதரவு குழுவொன்றே இத்தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தவறானவை எனவும் அவர் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். வர்த்தகப் போட்டிகள் காரணமாக எவரும் இதனைச் செய்திருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார். வெற்றி எவ்.எம், சியத எவ்.எம் ஆகிய வானொலிகள் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுபவை அதனால் அரசாங்கமோ அதன் ஆதரவாளர்களோ இத்தாக்குதலை மேற்கொள்வில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
Rohan
“வெற்றி எவ்.எம், சியத எவ்.எம் ஆகிய வானொலிகள் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுபவை அதனால் அரசாங்கமோ அதன் ஆதரவாளர்களோ இத்தாக்குதலை மேற்கொள்வில்லை” கெஹலிய ரம்புக்வெல.
“சந்திரிகாவின் கைகள் தூய்மையானவை (அவரை நாம் ஏன் கொல்லப் போகிறோம்)” மதியுரைஞர் பாலசிங்கம்.
அப்படியானால் சிரசவைநீங்கள் தானா சிதறடித்தீர்கள்?