சாவகச்சேரி மாணவன் படுகொலை வழக்கில் சந்தேக நபருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது!

சாகச்சேரி மாணவன் படுகொலை வழக்கில், சந்தேக நபரான சார்ள்சிற்கு நிபந்தனைகளுடனான பிணை வழங்கப்பட்டுள்ளது. சாகவச்சேரி மாணவன் கபிலநாத் கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஈ.பி.டி.பியின் தென்மராட்சிக்குப் பொறுப்பாக இருந்த சாள்ஸ் என்றழைக்கப்படுகின்ற சூசைமுத்து அலெக்ஸாண்டர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

சாவகச்சேரி நீதவான் முன்னிலையில் கடந்த புதன் கிழமை இவ்வழக்கு விசாரணைக்க எடுக்கப்பட்ட போது, பிணை வழங்கக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மேல் நீதிமன்றத்தின் உத்தரவின் படியே இப்பிணை வழங்க முடியும் என சாவகச்சேரி நீதவான் அப்பிணை மனுக் கோரிக்கையை நிராகரிதிருந்தார். பின்னர், மேல் நீதி மன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டு மேல்நீதிமன்றத்தின் கட்டளைக்கிணங்க நேற்று வியாழக்கிழமை சாவகச்சேரி நீதவான் மூன்று நிபந்தனைகளின் அடிப்படையில் சந்தேகநபரை பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • Rohan
    Rohan

    தர்ஷிகா வழக்கை விரைவாக முடிக்க அக்கறை காட்டியவரும் கபிலநாத்தின் மரணச்சடங்கின் போதி அவரது தந்தையைக் கட்டித் தழுவிப் படம் பிடித்துக் கொண்டவருமான தலைவர் டக்ளஸ் ஒன்றும் சொல்லவில்லையா?

    Reply
  • sangaraligam
    sangaraligam

    கபில்நாத் கொலைசெய்யப்பட்டபின் நடந்த பாராளுமன்ற தோதலில் ஈபிடிபி கட்சியினருக்கு மூன்று உறுப்பினாகளை பாராளுமன்றம் அனுப்பி வைத்து கொலைக்கு அங்கீகாரம் கொடுத்ததே தமிழ்மக்கள்தான் நீதிமன்றம் வெறும் பிணைதானே கொடுத்தது. அலட்டிக்கொள்ள வேண்டாம்.தமிழ் மக்களை கொலை செய்தவர்களுக்கும் அதனை வேடிக்கை பார்த்தவர்களுக்குமே வாக்களித்துள்ளார்கள். பலே ஈழத்தமிழா

    Reply