தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்குவதற்கு ஜனாதிபதி தயார் – அமைச்சர் நிமல்

nimal1.jpgவட பகுதியில் மீள் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அரசியல் தீர்வு ஒன்றையும் அரசாங்கம் வழங்குமென்று பாராளுமன்ற சபை முதல்வரும், நீர்ப்பாசன, நீர் முகாமைத்துவ அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்று வழங்கப்படவேண்டுமென்பதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகக் கூறிய அமைச்சர் சில்வா, அதனை வழங்க ஜனாதிபதி தயாராக இருக்கிறாரென்றும் குறிப்பிட்டார்.

“இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு அவசியம் என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஜனாதிபதி இது தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார். தனி ஈழத்தைத் தருவதற்கு எவரும் இணங்கமாட்டார்கள். ஆனால், தமிழ் மக்களுக்குத் தீர்வொன்றை வழங்க வேண்டுமென்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஜனாதிபதியும் அதற்குத் தயாராக இருக்கிறார்” என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

புலிகள் இயக்கத்துடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டபோது அரசாங்கக் குழுவிற்குத் தலைமை தாங்கியவர். அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா என்பது குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • Rohan
    Rohan

    ஆனா எப்போ எண்டு சொல்ல மாட்டோமே!

    Reply
  • PALLI
    PALLI

    //ஆனா எப்போ எண்டு சொல்ல மாட்டோமே!//
    உன்மைதான். ஆனால் நாமும் யாரிடம்(இவரிடம்) கொடுங்கோஎன ஒருவரை கைகாட்ட முடியாத நிலையில்தானே உள்ளோம்;

    Reply
  • nantha
    nantha

    தமிழர்களின் பிரச்சனை என்ன என்று தமிழ் கட்சிகளுக்கே இன்னமும் தெரிந்த பாடாகத் தெரியவில்லை. இனி மஹிந்த ராஜபக்ஷ அதனைக் கண்டு பிடித்து கொடுக்க வேண்டும் என்றால் கொஞ்சம் கஷ்டம்தான்!

    Reply
  • Ajith
    Ajith

    What a joke?
    Solution??
    For the security of tamils in the North-East he will establish a Sinhala only military and Sinhala settlements.He has already created a village called “Boganpola Patna” which is just 9 Km from Keerimalai.

    Reply
  • nantha
    nantha

    Welcome “Boganpola Patuna”. We can add those names to existing Sinhala names like Mirusuvil, Kodigama(kodikaamam), Sooraawatte, Kapputhoo,Thumpola, Yarkaru, Sarasaala(i), Meesaala(i) and other village names.

    Reply