க.பொ.த. உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகின்றது. செப்டம்பர் 3ம் திகதி வரை பரீட்சை நடைபெறும். நாடளாவிய ரீதியில் 1931 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்க தெரிவித்தார். க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு 2 இலட்சத்து 69 ஆயிரம் பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர். இவர்களுள் 64 ஆயிரம் பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் என்று ஆணையாளர் கூறினார்.
இதேவேளை, மோதல்களின் போது படையினரிடம் சரணடைந்த முன்னாள் புலி உறுப்பினர்கள் 400 பேரும் இன்று ஆரம்பமாகவிருக்கும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதாகவும் ஆணையாளர் அநுர எதிரிசிங்க தெரிவித்தார். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலும் வழமை போலவே பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.