வன்னிப் பகுதிகளில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நடைபெற்று வரும் நிலையில் மீண்டும் குண்டுச்சத்தங்களின் அதிர்வுகளை பல சந்தர்ப்பங்களில் கேட்க முடிகிறது. இன்றும் (08-08-2010) கிளிநொச்சிப் பகுதிகளில் இச்சத்தங்களை கேட்க முடிந்தது. படையினரால் மீட்கப்படும் வெடிபொருட்கள் சில சமயங்களில் வெடிக்கவைக்கும் போது இச்சத்தங்களை மக்களால் உணரமுடிகின்றது. எனினும் கடந்தகால போரின் கொடுமைகளில் சிக்கியிருந்த மக்கள் இவ்வாறான ஒலிகளை கேட்கும் போது அச்சமடைகின்றனர். போரின் நினைவுகள் அவர்கள் மனங்களில் மீண்டும் எதிரொலிக்கின்றன.
இது இவ்வாறிருக்க, யாழ்.குடாநாட்டிலுள்ள மக்கள் வன்னி நிலமைகள் தொடர்பாக பல்வேறு வதந்திகளை பரப்பி வருகின்றனர். வன்னியில் சில இடங்களில் சண்டை நடைபெறுவதாகவும், விமானக்குண்டு வீச்சுக்கள் சில பகுதிகளில் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர்கள் தங்களுக்குள் வதந்திகளை பரப்பி வருகின்றனர். ஆனால் உண்மையில் வன்னிப்பகுதிகளில் சில சமயங்களில் கேட்கும் வெடிகுண்டு சத்தங்கள் படையினரால் மீட்கப்படும் அல்லது, அவர்களால் செயலிழிக்கச் செய்யப்படும் குண்டுகளின் ஒலி என்பது குறிப்பிடத்தக்கது.
கந்தையா
இப்படியான சத்தங்கள் கேட்டால் பதட்டமடைய வேண்டாம். நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என முதலேயே அரசு அறிவுறுத்தியிருந்தால் சனமும் பதட்டப்படாதிருப்பதுடன் வதந்திகள் பரப்பப்படுவதையும் தவிர்த்திருக்கலாம்தானே.
nantha
இந்தக் குண்டுச் சத்தங்களைக் கனடாவில் உள்ள “சுதந்திரன்’ என்ற பத்திரிகை மூக்கும் நாக்கும் ஒட்ட வைத்து இலங்கை அரசு “போர் குற்றங்களில்” இருந்து தப்புவதற்கு தங்கள் இராணுவத்தினரைக் கொல்லுகிறார்கள் என்று எழுதித் தள்ளியுள்ளது. வாசகன் இரத்தினதுரை என்ற ஆளின் புளுகு மூட்டைகள் சகிக்க முடியாதாவை. இதனை பார்த்துவிட்டுக் கதைக்க பலர் உள்ளனர் என்பது மற்றொரு விசேஷம். இலங்கையில் கொலைகள் விழாமல் இருப்பதினால் கதைக்க வழியின்றி அலையும் இவர்கள் தற்போது தாராளமாக “கற்பனைக்” கதைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தக் கதைகளின் பின்னணியில் பல “கத்தோலிக்க” பாதிரிகள் உள்ளனர். முன்னர் ஈரப் பெரிய குளம் இராணுவ முகாமில் நடந்த வெடி விபத்தினை கத்தோலிக்கர்கள் “வவுனியா அகதி முகாம்களில் தமிழர்களைக் கொல்லுகிறார்கள்” என்றும் வெடிச் சத்தம் இரவிரவாகக் கேட்கிறது என்றும் கதை பரப்பினார்கள். எனது நண்பருக்கு “கதை” சொன்ன கத்தோலிக்கர் இப்போது வவுனியாவுக்கே நிரந்தர வாசியாகி கனடாவை விட்டு போய் விட்டார் என்பது மற்றொரு உண்மை!
BC
சுதந்திரன் மாதிரி மூக்கும் நாக்கும் ஒட்ட வைத்த செய்தி ஒன்று பார்த்தேன்.”அமெரிக்க முப்படையினர் ஸ்ரீலங்கா விஜயம் – அச்ச நிலையில் ஸ்ரீலங்கா அரசு”
naanee
சுதந்திரன் மட்டுமல்ல, சுய அடையாளம் தேடி அலையும் கோஸ்டிகளின் அட்டகாசம் தாங்க முடியாமலிருக்கின்றது. புலிகள் இருக்கு மட்டும் ஒன்றை பத்தாக்கி பத்திரிகையிலும், வானொலியிலும், ரெலிவிசனிலும் கட்டுக்கதைவிட்டுக் கொண்டிருந்தவர்கள் இப்போது மக்களின் மனங்களை குளிர வைக்க செய்தி இல்லாமல் அவனவன் ஆலாய் பறக்கின்றான்.
இவர்களின் தேசியப் பற்றும்,புலி விசுவாசமும் சிலவேளைகளில் புல்லரிக்கவும் வைத்துவிடும்.இப்படிதான் ஒரு சீ.எம்.ஆர் ஆய்வாளர் சுனாமி வருவது முன் கூட்டியே தலைவருக்கு தெரியுமாம் என்றார். முதல் வருட மாவீரர் உரையில் கோடிட்டு வேறு காட்டினாராம் தனக்கு அழிவுவருவது தெரியாத தலைவர்.
சில வேளைகளில் சும்மா இருப்பமோ என்றிருக்கும் எமது மக்களின் சிந்தனைகளையும் செயல்பாட்டுகளையும் யோசித்தால் .முழுக்கமுழுக்க தன் நலம் மட்டுமே சார்ந்த இனமென்றால் தமிழினம் மட்டுமே மாதிரித்தான் இருக்கின்றது