இலங்கை அரசு தனது விசிறிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாக MIA. குற்றச்சாட்டு

mia.jpgபொப் இசை உலகில் முன்னணிப் பாடகர்களில் ஒருவர். MIA. என அழைக்கப்படும் மாதங்கி அருள்பிரகாசம் . மாயாவின் பாடல்களில் பெரும்பாலானவற்றில் ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது என தெரிவித்து YouTube  இருந்து நீக்குமாறு இலங்கை அரசு தனது விசிறிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாக MIA. தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 Comments

  • BC
    BC

    பாரதிக்கு பிறகு புரட்சி பாடும் ஒரே தமிழர் இவர் தான் என்று புலி ஆதரவாளர்களால் புகழப்படுபவர். தன்னை முன்னிலைபடுத்துவதற்காக, தன்னை Topஆக்குவதற்காக அழிவு பாட்டு பாடுகிறார்.

    Reply
  • karuna
    karuna

    தன் தந்தை தான் ஈழப்போராட்டத்தை தொடங்கியதாக தனக்கு நெருங்கியவர்களுக்கு இப்பெண் சொல்லி இருக்கின்றார். ஆனாலும் பாட்டுக்கள் அருமை. குறிப்பாக போதையுடன் கேட்டுப்பாருங்கள்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    “லங்காராணி”யை எத்தனை பேர் வாசிப்பு உள்ளாக்கியிருக்கிறீர்கள். இதன் ஆசியர் மியாவின் தகப்பனார் அருள்பிரகாசம் (அருளர்) தான்.
    ஆயுதப்போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்தவரும் இவரே தான். இவருடைய அறப்படித்த “அறைகூவலும்” இவர் கூறிய புரட்சிகர சித்தாந்த போராட்ட வழிமுறைகளும் தான் பிரபாகரனின் தமிழீழ-போராட்டத்திற்கு ஒருபக்க உரமாக மாறியது.
    முப்பது வருடங்களுக்கு பிறகே அருளரின் உபதேசம் எவ்வளவு பாதிப்புக்களை தமிழ்- பாட்டாளி மக்களுக்கு கொண்டு வந்ததை என்பதை அறிந்தோம். தந்தை எப்படியோ! மகளும் அவ்வழியே!! தந்தையும் மகளும் ஈழப்போராட்டத்தின் விளைவுகளில் ஏதும் பாதிப்படைந்தவர்கள் இல்லை. மாறாக தமது வாழ்வை வளப் படுத்தியிருக்கிறார்கள்.

    “மியா”புலித்தோல் போட்டு ஆடியஆட்டத்தை ஆட்டத்தை ரசிக்காத நாம் கூட ரசித்தோம். மியா இன்று வரை புலிப்போராட்டம் தவறானது என கருத்துச் சொன்னதில்லை. அருளரும் தான். கலைவடிவத்தில் எழுத்துவடிவத்தில் அப்பனுக்கும் மகளுக்கும் இருக்கும் கருத்துச் சுகந்திரத்தை மறுக்கப் போவதில்லை. மறுத்தால் தவறான இடத்திற்கே நாம் தள்ளப்படுவோம்.
    ஆனால்…
    உங்களுடைய மத்தியவர்க்க அபிலாஷைகளுக்காக ஒரு சின்னஅழகான தீவை… இலங்கை பாட்டாளிமக்கள் மேல் இனவெறியாகவும் மதவெறியாகவும் உங்கள் கண்டுபிடிப்பின் மூலம் வெளிப்படுவதையோ தாக்குதல் தொடுப்பதையோ இனியும் அனுமதியோம். உங்கள் பாடல்களுக்கு மதிப்பு மரியாதை இருக்கும் போது உயருவதும் இல்லாத போது தாழ்வதும் இயல்பானதே!.

    தமிழ் மத்தியதர வர்கத்தின் கனவுகள் குறிப்பாக யாழ்பாணகனவுகள் சிதைக்கப்பட்டும் நிர்மூலமாக்கப் படும் போதும் உங்கள் எதிர்காலமும் உங்கள் ஒட்டுண்னி தனமான போக்குகள் அடிபாதாளத்தை நோக்கி வேகமாக சரிந்துபோவதும் தவிர்கமுடியாததே. உங்கள் கலைமுயற்சியில் தொடர்ந்து முன்னேறுங்கள். அதற்காக ஒரு துன்பத்தின் விழும்பிற்கே வந்துவிட்ட இனத்தை துணைக்கிழுக்காமல் கலைப்பயணத்தை தொடருங்கள். அதற்கு இலங்கையரசு ஏதும் பாதிப்புகள் ஏற்படுத்தும் என்று நாம் நினைக்கவில்லை.

    Reply
  • vanthiyadevan
    vanthiyadevan

    even she could not to find a tamil husband
    even she cant speak tamil
    but she wants tamil eelam
    …..

    Reply
  • palli
    palli

    அழகான பெண்னுதான்
    அதுக்கேற்ற எழுத்துதான்
    அதனிடம் இருப்பதெல்லாம்
    புலி புகழ் ஒணுதான்;

    மியா ஈழமக்களுக்கு பல பிரச்சனை உண்டு என்பதை தாங்கள் புரிந்து கொண்டு தேவாரம் பாடினாலும் அதுவே எமக்கு புகழ், அதைவிட்டு புலி புகழ் பாடி பொப் பாடினால் என்ன நாட்டு புற பாட்டு பாடினால் என்ன, ஆனாலும் உங்களுக்கும் தமிழர் வாழ்வு ஒரு கவர்ச்சி விளம்பரம்தான்;

    Reply
  • Varathan
    Varathan

    even she could not to find a tamil husband
    even she cant speak tamil
    but she wants tamil eelam// vanthiyadevan on August 10, 2010 9:28 pm

    I am wondering how anybody could relate her personal life and her ideology??

    If you are not agree with her ideology share your opinion critically about her ideology. I don’t think, husband and speaking ability in Tamil are the prerequisite for Tamil Eelam.

    However, the fact is Maya doesn’t have a clear picture about the liberation struggle of Tamils in Sri Lanka. As many Tamils in abroad, she still believe pro LTTE websites and their propaganda. Her interviews and talks clearly depict that she doesn’t know anything when it comes to politics.

    Reply
  • BC
    BC

    வந்தியத்தேவன், தகவலுக்கு நன்றி. பெற்றோரை தவிர அவாவுக்கும் தமிழுக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்ற விடயம் எனக்கு தெரியாது.

    Reply
  • Ajith
    Ajith

    MIA is a really talented tamil woman. Tamils should be proud of her For some hypocrtics, any one raising voice against murderous Rajapkase regime is a deadly pision. These people who enjoy the western life think they are the only people who are true tamils and their path (no idea what is their path) every one else are LTTE.

    People should understand the mentality of those who raise the following:
    1. even she could not to find a tamil husband
    2. அழகான பெண்னுதான் அதுக்கேற்ற எழுத்துதான்

    Reply
  • அ. பிரதாபன்
    அ. பிரதாபன்

    மாயா அருள்பிரகாசம் என்கின்ற ‘மியா’வின் தத்துவார்த்தமான புரட்சிப்பாடல்களுக்கும், அவரது கருத்துக்களுக்கும் – வவுனியாவுக்கு அசின் வந்து சமூக சேவை செய்வதற்கு முயன்றதற்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

    எத்தனை நாட்களுக்குத்தான் எம் போன்ற பாமரர்கள் அசினும், ‘மியா’வும், சீமானும் இத்தியாதிகளும் படம் காட்டப் பார்த்துக் கொண்டு பசியில் கிடப்பது?

    இங்கிலாந்தில் வசதியாக இருந்து கொண்டு சுடுமணலில் வெந்து நொந்து கிடக்கின்ற பாமர மக்கள் கேட்பதற்கு தத்துவப்பாடல்களை போதைதரும் ஆட்டங்களுடன் ஆடிக்காட்டுகின்ற ‘மியா’ வேணுமென்றால் வன்னிக்கு வந்து மீள்குடியேற்றம் நடக்கும் ஒரு கிராமத்தில் வாழ்ந்து காட்டட்டும் பார்க்கலாம்…

    Reply