யாழ். குடா நாட்டில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்புகளின் போது பல குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்ட 66 பேர் சிக்கியுள்ளதாக யாழ்.பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் நேவின் பத்மதேவா தெரிவித்துள்ளார். கடந்த மாதம் இவ்வாறான அதிரடி நடவடிக்கையின் போது, நூற்றுக்கும் மேற்பட்டோர் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக இனங்காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். சட்டவிரோதமான முறையில் போதைப்பொருட்களை வைத்திருந்தமை, பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள், ஆகியார் இவர்களில் இனங்காணப்பட்டுள்ளதாகவும், இலங்கையில் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசேட அதிரடி நடவடிக்கைகள் யாழ்.குடாநாட்டிலும் தற்போது மேற்கொள்ளப்படுவதாகவும் இதன்மூலம் குற்றச்செயல்களை பெருமளவில் தடுக்க முடியும் எனவும் அவர் மேலும் கூறினார்.