புனித ரமழான் மாதத்தின் தலைப்பிறை நேற்று புதன்கிழமை மாலை நாட்டின் பலபகுதிகளிலும் தென்பட்டதால் இன்று வியாழக்கிழமை முதல் புனித நோன்பு ஆரம்பமாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நேற்று மாலை மஃரிப் தொழுகையின் பின்னர் கூடிய பிறைக் குழுக்கூட்டத்தில் பெரியபள்ளிவாசல் உட்படக் கொழும்பு மாநகரின் பல பள்ளிவாசல்களின் நிருவாகிகளும் ஜெம்இய்யதுல் உலமாவின் பிரதிநிதிகளும் பிறைக்குழுவினரும் கலந்துகொண்டனர்.
நாட்டின் பல பகுதிகளிலும் ரமழான் தலைப்பிறை தென்பட்டதாக உறுதி செய்யப்பட்டதன் பின்னர் இன்று வியாழக்கிழமை முதல் ரமழான் நோன்பு ஆரம்பமாவதாகப் பிறைக்குழுவும் பெரியபள்ளிவாசலும் அறிவித்துள்ளது.