பாராளு மன்ற உறுப்பினர்களான அஜித் குமார, விஜித ஹேரத் மற்றும் மாகாணசபை உறுப்பினரான நளின் ஹேவகே ஆகியோர் காலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காலியில் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு நடைபெற்ற போராட்டத்தின் பின் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்ய சென்ற போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் குமார, விஜித ஹேரத் மற்றும் மாகாணசபை உறுப்பினரான நளின் ஹேவகே ஆகியோர் பொலிஸார் மீது போராட்டத்தின் போது கல்வீச்சு செய்த இருவரை விடுதலை செய்யுமாறு வாக்குவாதப்பட்டு பொலிஸாருக்கு தாக்கமுறபட்டதாலேயே கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் உயர் அதிகாரி கிங்ஸிலி ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.