புகையிரத்தில் பயணிகளிடம் கொள்ளையடித்து வந்த நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வு அதிகாரிகள் என்று தங்களைக் கூறிக்கொண்டு, அதற்கான போலி அடையாள அட்டைகளையும் காண்பித்து, புகையிரத்தில் பயணம் செய்யும் தமிழ் மக்களை அச்சுறுத்தி, அவர்களிடமிருந்து பணம் நகைகளை இவர்கள் அபகரித்து வந்தள்ளனர்.
விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
பொலகாவல, மீரிகம, வெயங்கொட, ராகம மற்றும் கோட்டை ரயில் நிலையங்களில் இவர்கள் கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வெயங்கொட, கட்டான ஆகிய பகுதிகளில் வைத்து இந்நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.