பாராளுமன்ற உறுப்பினரும் ‘இளைஞர்களுக்கான நாளை’ என்ற அமைப்பின் தலைவருமான நாமல் ராஜபக்ச தலைமையிலான குழுவினர் நேற்று (Aug 11 2010) பூனகரிப் பகுதிக்கு விஜயம் செய்தனர். பூனகரிப் பிதேசத்தின் காரைக்காய்தீவு மகாவித்தியாலயம், ஞானிமடம் அ.த.க பாடசாலை, நல்லூர் மகாவித்தியாலயம் உட்பட பூனகரி கோட்ட பாடசாலைகளுக்கு இக்குழுவினர் விஜயம் செய்து அப்பாடசாலைகளின் குறைபாடுகள் மாணவர்களின் கல்விநிலை என்பனவற்றை ஆராய்ந்தனர்.
இதே வேளை, அப்பகுதி பொதுமக்களின் குறைபாடுகளையும் கேட்டறிந்ததோடு அப்பிரதேச விவசாய நடவடிக்கைகளுக்கான உதவிகளை மேற்கொள்வது, பாடசாலைகளைப் புனரமைப்பது, கிராமங்களுக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துவது போன்ற மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கைகள எடுப்பதாகவும் இக்குழுவினர் உறுதியளித்தனர்.
இக்குழுவில் நாமல் ராஜபக்சவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் உதித் லொக்குபண்டார மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.