நோர்வேயில் சிவசுப்பிரமணியர் ஆலயத் தேர்த் திருவிழாவில் நடந்தது என்ன? : ரி சோதிலிங்கம்

Sivaganesh_Vadiveluநோர்வேயின் ஒஸ்லோவில் அமைந்திருக்கம் அம்மரூட் சிவசுப்பிரமணியர் ஆலயத்தின் தேர்த்திருவிழா பிரசித்தமானதோ இல்லையோ அங்கு நடந்த அடிபாடு வேண்டிய அளவு பிரசித்தம் பெற்றுள்ளது. இவ்வாலயத்தில் அடிக்கடி அடிபாடுகள் சகஜமாகி வருகிறது, இது ஆலயத்தின் பொதுச்சபைக் கூட்டங்களிலும் சர்வ சாதாரணமான ஒன்றாகி விட்டது என்கிறார் இவ்வாலயத்தின் அடியார் ஒருவர். 8.8.2010 ஞாயிறு தேர் வீதிவலம் வரும்போது அங்கு பலத்த சலசலப்பும் சண்டையும் நிகழ்ந்தது. அதுவே நோர்வேயையும் தாண்டி தற்போது பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.

அன்பே சிவம் என்று போதிக்கும் சைவ சமயத்தவரின் திருவிழாவில் தொண்டர்கள் கையிலே ஏன் கிரிக்கட் பட், விக்கற்றுக்களும், பொல்லுக் கட்டைகளும் என்று மற்றுமொரு அடியார் தேசம்நெற் இடம் முறைப்பட்டார். ஒழுங்கு விதிகளை உறுதிப்படுத்தவும் அன்பைப் போதிக்கவும் ஆலயம் எதற்காக கராட்டி சிவா என அறியப்பட்ட சிவகணேஸ் வடிவேலுவை நியமித்தது என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
 
சம்பவம் பற்றித் தெரியவருவதாவது; வெள்ளை நிற கார் ஒன்றில் குடும்பமாக வந்தவர்கள் தமது காரை வீதியோரமாக கார் நிறுத்துவதற்கான இடத்தில் நிறுத்த முற்பட்டனர். ஆனால் அங்கு கடமையில் இருந்த தொண்டர்கள் காரை அவ்விடத்தில் தரித்து நிறுத்த அனுமதிக்க மறுத்தனர். இதன் விளைவாக எழுந்த தர்க்கம் கைகலப்பிலும் விக்கற், பொல்லுக் கட்டைகளுடனான மோதலிலும் முடிவடைந்தது.

தொண்டர்களாக கடமையில் அமர்த்தப்பட்டவர்கள் ஏற்கனவே தயார் நிலையில் இருந்தவர்கள் போல் தம்முடன் வைத்திருந்த கிரிக்கெட் பட், விக்கெட்டுகளோடு காரில் வந்தவரைத் தாக்கியுள்ளனர்.

தேர்த் திருவிழாவிற்கு மனைவி, பிள்ளைகள் மற்றும் சகோதரர் ஒருவருடனும் குடும்பமாக வந்த அசோக் என்பவரே தொண்டர்களால் தாக்கப்பட்டு உள்ளார். காரில் வந்த அசோக் மற்றும் அவருடைய சகோதரனும் பதில் தாக்குதலில் ஈடுபட்டும் உள்ளனர்.

என்ன நடந்தது என்பதை விபரிப்பதிலும் பார்க்க காட்சிகளை கீழேயுள்ள இணைப்பில் காணலாம். இது நோர்வே ஊடகங்களில் வெளிவந்த ஒளிப்பதிவு.
http://www.vg.no/nyheter/innenriks/artikkel.php?artid=10026130
 
திருவிழாவின் போக்குவரத்து மற்றும் ஒழுங்குகளைக் கவனிக்க கோவில் நிர்வாகத்தினால் நியமிக்கப்படவர் கராட்டி சிவா என்ற சிவகணேஸ் வடிவேலு என்பவராகும். இவர் தமிழர் அவை (Norwegian Council of Eelam tamil) அங்கத்தவர். அண்மையில் தமிழர் அவைத் தேர்தலில் போட்டியிட்டவர். சிவகணேஸ் வடிவேலு கோவிலின் திருவிழா ஒழுங்குகளை கவனிக்கும் பொறுப்பை ஏற்கும்போதே அடிதடிக்கு தேவையான ஆயதங்களைத் தயார் நிலையில் வைத்திருந்ததாக எமக்குக் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ஆனால் காரில் அசோக் என்பவரும் சாதாரணமானவர் அல்ல என்றும் வாய்ச் சண்டையாக இருக்கும் போதே அவர், தான் பயன்படுத்தும் சிறுகத்தியால் காவல் பொறுப்பை ஏற்ற சிவகணேஸ் வடிவேலுவின் தலையில் கீறியதாகவும் சிவகணேஸ் வடிவேலுவின் பொறுப்பில் இருந்த தொண்டர்கள் தெரிவிக்கின்றனர். இதனைத் தொடர்ந்தே இந்த அடிபாடுகள் ஆரம்பித்தது என அவர்கள் பக்கச் செய்தி தெரிவிக்கின்றது.

இந்த அடிபாட்டில் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அறியவருகிறது.
 
கோயிலில் ஒழுங்கு கடமைகளுக்கு என அமர்த்தப்பட்ட தொண்டர்கள் சமயோசித புத்தியுள்ளவர்களாக, மற்றவர்களின் மனம் நோகாது கையாளுபவர்களாக தெரிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கோவில் அதற்கு முற்றிலும் மாறாக காராட்டி பயிற்சி பெற்ற ஒருவரை அரசியல் பின்னணியுடைய ஒருவரை இப்பணிக்கு பொறுப்பாக நியமித்து, சர்வ சாதாரணமான விடயமொன்றை ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டிய வன்முறைக் கலகமாக மாற வழிவகுத்துள்ளது.

மேலும் இத்தேர்த் திருவிழாவிற்கு முதல்நாள் இடம்பெற்ற அன்னதான நிகழ்விலும் நோர்வே அரசின் உணவுக் கட்டுப்பாட்டு அலுவலர்கள், ஆலயம் உணவு சமைப்பது மற்றும் அதனை கையாளவது பரிமாறுவது தொடர்பில் சரியான வழிமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி அங்கு உணவு சமைத்து மக்களுக்கு பரிமாற வேண்டாம் என்று அறிவுறுத்திச் சென்றனர். ஆனால் அதனையும் மீறி அன்னதானம் பரிமாறப்பட்டது.

வன்னியில் மக்கள் ஒருவேளை உணவுக்கே மிகுந்த கஸ்டத்தை எதிர் நோக்கியுள்ள நிலையில், இலங்கையின் வடக்கு கிழக்கில் ஒருவேளை உணவுக்கு எவ்வளவோ கஸ்டங்களை சந்திக்கும் போது நோர்வேயில் அன்னதானம் கொடுக்கும் உபயகாரர்கள் தங்கள் பெயருக்காகவே இதனைச் செய்கிறார்கள் என்றும் அபிப்பிராயம் தெரிவித்தார்கள்.
 
சிவகணேஸ் வடிவேலு வன்முறைகளுடன் நெருக்கமானவர். இவரது கோஸ்டியைச் சேர்ந்த ஒருவர் சில வருடங்களுக்கு முன்னர் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்ட அதிர்ச்சி தரும் சம்பவத்தின் ஆரம்பமே இந்தக் கோவில்தான். இன்று இவர்கள் மீண்டும் வன்முறைகளில் இறங்கியுள்ளனர்.

மக்கள் அவையின் உறுப்பனர்களாக அறியப்பட்ட சிவகணேஸ் வடிவேலு போன்றவர்கள் இன்னமும் கோவிலில் பொது இடங்களில் மக்கள் கூடும் இடங்களில் உள்ள மிகச்சிறிய நடைமுறைகளையே பண்பாக நடத்தத் தெரியாதவர்களாகவே இருக்கிறார்கள்.
 
தனிநாடு பெற்ற பின்னர் பணம் தருவோம் என்று கூறிப் பணம் பெற்றவர்களும், இந்த கோவில் நிர்வாகத்தினரும் தேர்திருவிழா உபயகாரர்களும் ஊரை அடித்து உலையில் போட்டு கணக்கு விட்டு கணக்குக் காட்டிக் கொண்டு திரிகிறார்கள், என்று கடன் கொடுத்தவர்கள் கோவிலில் வந்து சாமியின் முன்னால் குமுறி அழும்குரலைக் கேட்டதாக ஒரு அடியார் என்னிடம் தெரிவித்தார்.

இந்த குறிப்பிட்ட வன்முறை எழுந்தமானமாக விபத்தாக நடந்த விடயம் அல்ல என்பதை உறுதிப்படுத்த முடிகிறது. இவ்வாறான சம்பவங்கள் நிகழ்வதற்கான சூழல் இன்னமும் இந்த ஆலயத்தில் உள்ளது. சிவசுப்பிரமணியர் ஆலயம், மக்கள் அவை போன்ற அமைப்புகள் இவ்வாறான அடிபாடுகள் நிகழாமல் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த அடிபாடு அரசியல் சம்பந்தப்பட்டது என பிபிசி சந்தேசயா செய்தி வெளியிட்டு இருந்தது. சிவகணேஸ் வடிவேலு தமிழீழ விடுதலைப் புலிகளின் நெடியவனைத் தலைமையாகக் கொண்டு இயங்கும் மக்கள் அவை உறுப்பினர் என அச்செய்தி சுட்டிக்காட்டி இருந்தது. இவ்வடிபாட்டில் சம்பந்தப்பட்ட மறு தரப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் நெடியவன் பிரிவுக்கு எதிரானவர்கள் எனச் செய்தி தெரிவித்து இருந்தது. தமிழ்நெற் இச்செய்தியை மறுத்து அச்சம்பவம் முற்றிலும் தனிப்பட்ட ஒரு ஒழுங்குப் பிரச்சினையில் ஏற்பட்ட தகராறு எனச் சுட்டிக்காட்டி இருந்தது. நோர்வே மக்கள் அவை உறுப்பினரான சிவகணேஸ் வடிவேலு காயப்பட்டதை வைத்துக் கொண்டு சந்தேசயா செய்தியைத் திரிபுபடுத்தியதாக தமிழ்நெற் தனது செய்திக் கட்டுரையை வெளியிட்டு இருந்தது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

32 Comments

  • Thalaphathy
    Thalaphathy

    இப்பவாவது விளங்குதா நம்மட சமூகம் காட்டுமிராண்டித்தனமானதென்பது!

    Reply
  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    மதவெறிக்கும், சாதிவெறிக்கும் தூபம் போடும் கூட்டம் வாழும்வரை இத்தகைய சம்பவங்கள் தவிர்க்க முடியாதவை. புலித்தனமும், சிங்க வால்பிடித்தனமும் தமிழ்க் கதாநாயகர்களின் கருப்பொருளானபின், தொடருகிற அங்கலாய்ப்பாளர்கள் “நம்மட சமூகம் காட்டுமிராண்டித்தனமானதென்பது”, கதாநாயகர்களை நியாயப்படுத்துகிற செயல்வடிவமே.
    முதலில் கோவில்களை இடி,
    கொள்ளையர்களைப் பிடி,
    கதாநாயகர்களை கழை.
    சமூகம் உனக்கு வழிகாட்டும்.

    Reply
  • PALLI
    PALLI

    நம்ம சமூகம் என்பது சரியோ தெரியவில்லை:
    கட்டுரை தகவலின்படி கலகலப்பாக கலகலப்பில் ஈடுபட்ட இரு தரப்பினருமே அன்றய புலி பக்தர்கள். அவர்களே முருகனின் பக்கதர்களாய் களம் இறங்கி கலகம் செய்தார்களாம்; என்னை கேட்டால் இவர்களை இலவசமாக கே பி யிடம் அனுப்புவதே நோர்வே தமிழருக்கு உதவும் இந்த விடயத்தில் சேது கவனம் எடுக்கலாமே, முதியோர் சொல்வார்களே முள்ளை முள்ளால் தான் அகற்ற வேண்டுமென. இதிலாவது அவர்களின் அறிவுரையை கேக்கலாம்;

    அதுசரி தேர் இழுத்து முடிந்துதா?? அல்லது நடைபயணம் போல் காலவரையற்ற இழுப்புதானோ கட்டுரையாளர் கோவில் வீதிவரை சென்றுவிட்டு கடவுளை மறந்து விட்டார் ,

    Reply
  • thurai
    thurai

    இவையெல்லாம் தமிழரின் பழக்க வழக்கங்களில் ஒன்றே. முன்பெல்லாம் வடபகுதியில் கோவில்களில் தியேட்டர்களில், வீதிகளில் நடப்பவைதான்.

    ஒரு இந்துக்கோவில், தேர்தலில் நின்ற ஒருவர் அந்நியர்களின் நாடு அகதிகளாக வந்த நாம் இவைகளே கணக்கிலிடப்பட வேண்டும். இந்துக் கோவில் என்பது ஆன்மீக வளர்ச்சிக்காகவா? அல்லது மூடநம்பிக்கை மூலம் பணம் தேடும் நிறுவனங்களா?

    இக்கோவிகளை தொடங்குபவர்களின் நடத்துபவர்களின் உள்நோக்கமென்ன? தமிழரின் காட்டு மிராண்டி கலாச்சாரத்தின் ஒரு பகுதியா? தமிழீழ விசுவாசிகளே பதில் தாருங்கள்.

    துரை

    Reply
  • Kumar
    Kumar

    இந்துக் கோவில் என்பது ஆன்மீக வளர்ச்சிக்காகவா? அல்லது மூடநம்பிக்கை மூலம் பணம் தேடும் நிறுவனங்களா?//thurai

    கடவுளிடம் வரம்கேட்க காசுகொடுத்து ரிசீற் வாங்கித்தான் முடியும் என்ற கருத்தியலை உலகச்சமயங்களில் சைவ சமயம் தான் தன் கோவில் நிறுவனங்களின் மூலம் செய்கின்றது. இதிலிருந்து தெரியவில்லையா கோவில்கள் எல்லாம் அன்ட் கொம்பனி லிமிட்டெட் என?

    இதனால் தானே பல சனங்கள் கோவிலுக்குப் போவதையே நிறுத்திவிட்டன. கடவுளைத் தரிசிக்க கையூட்டுத் தேவை என நினைக்கும் எமது சமூகத்தின் ஒரு பகுதியினர் உள்ளவரை இது தொடரும்.

    ஆன்மீக வளர்ச்சிக்கு வேண்டுமானால் லைப்ரரிக்கு போய் இந்து தத்துவம்> சைவ சமயம் மற்றும் அறநூல்களைப் படிக்க வேண்டியதுதான். கோவில் எதற்கு?

    Reply
  • Kumanan
    Kumanan

    கட்டுரையின் தகவல்கள் மிகச்சரியானவையே. ஓரு அமைப்பின் முகமாக முயற்சித்தவர் அடிபாட்டில் இறங்கும் போது அந்த அமைப்பு தெருவுக்கு இழுக்கப்படும் என்பது தடுக்கப்படமுடியாதது. கார் நிறுத்தியிருக்கும் இடம் பாக்கிங் செய்வதற்கு உத்தரவுள்ள இடமாகும். அதில் காரை விடக்கூடாது என்று கூறுவதற்கு யாருக்கோ அரசாங்க வீதிப் பரிபாலனசபைக்கோ உரிமை கிடையாது. அப்படி கோவிலின் வளவில் விடக்கூடாது என்று தடுத்திருந்தால் அதையும் மீறி காரை பாக் பண்ணியிருந்தால் அதற்கென்று பொலிஸ் இருக்கிறது. கத்தியால் கார்காரன் வெட்டிவிட்டான் என்றால் அதற்கும் பொலிசும் அம்புலன்சும் இருக்கிறது. வீடியோ கிளிப்பில் பார்க்கிற மாதிரிக்கு காட்டுமிராண்டி என்ற வார்த்தை மிக மிக மென்மையானதே. அந்தச் சம்பவத்தை அரசியலாக்கி தமிழரின் பாரம்பரியமாக்க முயல்வது மறுப்பதற்குரியது. கே.பி குறூப்புக்கும் இச்சண்டைக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
    சூரன் போர் வீதிக்கு வெளியில் நடந்திருக்கிறது.

    Reply
  • pakthan
    pakthan

    இப்பவும் கோயில் புலிகளிடம்தான் இருக்கு. ஒருவரும் அசைக்கேலாது. சுணை இல்லாத் தமிழன் திருந்தமாட்டான்.

    Reply
  • PALLI
    PALLI

    தமிழ்வாதம் உங்களுடன் பல்லிக்கு மிக முரன்பாடுகள் உண்டு ஆனால் உங்களது இந்த பின்னோட்டத்தில் எனக்கு உடன்பாடுதான் காரனம் நான் பெரியாரின் ரசிகன்; ஆனாலும் எடுத்த எடுப்பில்நாம் பெரியாரின் கொள்கைகளை சமூகம் மீது திணிக்க முடியாது என்பது என் கருத்து, பல்லி அடிக்கடி சொல்லுவேன் எம்மை மதியாத யாரையும் நாம் மதிக்க வேண்டாம் இதில் கடவுளும் அடங்கும்; அமைதி வேண்டி கடவுளிடம் போகிறோம் அங்கும் இரத்த கறையா?? தமிழிச்சி உங்கள் தளத்தில் எழுதுவதில் குறைந்த பட்ச பகுதறிவு சிந்தனையாவது தேசத்தில் எழுதலாமே, பலர் படிக்கும் தளம் இதுவும் ஒன்று என்பதால்;

    Reply
  • Kumanan
    Kumanan

    இக்கோவிலின் தேரில்தான் என்றும் பெரிய அடிபாடுகள் வருகின்றன. காரணம் என்ன என்று சிந்தித்தீர்களா? தேர் உபயகாரர்கள் தேருக்கு என்றும் கடைக்கு என்றும் பணங்களை வாங்கி ஊரில் மாடமாளிகை கட்டியது மட்டுமல்ல வாங்கிய பணத்தை ஏறக்குறைய ஒருவருக்கும் திருப்பிக் கொடுக்கவில்லை என்று அறியப்படுகிறது. சுமார் எட்டு மில்லியன் குரோண்கள் குத்துவிளக்கில் பார்க்கும் கணக்காகவே உள்ளது. இந்தத் தேர் உபயகாரர் பெரிய எழுப்பில் கார் நகை நட்டு என்று ஷோ காட்டி கடன்வாங்கி அவற்றில் எதையும் கொடுக்காது வாழ்பவர்கள். இதில் அரசாங்கமும் தப்பிய பாடில்லை. சோசியலில் சீவியம் செய்யும் இவர் எப்படி குறைந்தது ஒரு இலட்சம் குரோண்கள் செலவில் தேர்செய்ய முடியும் என்று யாராவது சிந்தித்தார்களா? இப்படி ஊர்முழுக்கக் கடன்வாங்கிவிட்டுச் சுத்துபவர்கள் நிர்வாகத்தில் இருந்தால் கோவில் எப்படி உருப்படும்? மானம் மரியாதை உள்ளவர்களாக இருந்தால் வாங்கிய கடனைக் கொடுத்து விட்டு தேர் இழுக்கலாமே. காசைக் கேட்டதற்கு சண்டித்தனங்கள் வேறாம். தேர் உபயகாரர்கள் நடத்தைகளுக்கு அவர்களின் கெளரவக்கதைகள் அதிகமாம். இப்படியாக இருப்பதை விட தேர்திருவிழாவை குறிப்பிட்ட காலத்துக்கு யாருக்காவது கொடுத்துவிட்டு வாங்கிய கடன்களைத் தீர்த்தால் முருகனாவது வழிவிடுவார். காசு கொடுத்தவர்கள் திட்டித்தீர்ப்பதை காது கொண்டு கேட்க முடியவில்லை. இப்படிப்பட்டவர்கள் திருவிழாச் செய்தால் அடிபாடு வராமல் என்ன வரும்?

    தேர் உபயகாரர்களுக்குக் காசு கொடுத்தவர்கள் பொறுமைகாக்காது பொல்லும் தடியும் தூக்கினால் தேர் தொடர்ந்தே அடிபாடாகத்தான் இருக்கும் இப்படியானவர்களை நிர்வாகத்தில் இருந்த விலக்குவது கோவிலைக் காப்பாற்ற உதவும். வாங்கிய காசுகளைக் கொடுக்க வக்கில்லையாம் இதற்குள் தேர் எதற்கு. இப்படி மானம் கெட்டவர்கள் எப்படி உடுத்துமினுக்கிக்கொண்டு கோவிலுக்கு வருகிறார்களே தெரிவில்லை. இப்படி ஒரு பிழைப்பா என்று இந்த தேர் உபயகாரர்கள் ஈசன் குடும்பத்தினரின் காது படக்கேட்டும் மானமற்றவர்களாக இருப்பவர்களை என்ன செய்யமுடியும்.

    இந்தத் தேர் உபயகாரர் சீட்டுப்பிடித்துச் சுற்றியவர்கள் அதைவிட அதிகம். சீட்டுப்பிடித்து விட்டு தாங்களே முழுப்பணத்தையும் எடுத்து விட்டார்களாம். சீட்டுப்பிடிப்பது சட்டவிரோதமானது பணம் கொடுப்பது சட்டவிரோதமற்றது. இப்படிச் சீட்டுப்பிடித்தவர்கள் ஒன்றாகக் கூடி சட்டநடவடிக்கை எடுக்கலாம் என்றால் இவர்களிடம் இருந்து எடுப்பதற்கு எதுவுமே இல்லையாம். எல்லாம் ஊரில் கொண்டுபோய் ஒழித்துள்ளார்கள் என்று அறியப்படுகிறது. சீட்டுப்பிடித்த குற்றத்தை சட்டத்தின் முன் நிறுத்தினால் தண்டனையாவது வாங்கிக் கொடுக்கலாம். கோவில்காசுகளும் தனிப்பட்டவர்களுக்கு வட்டிக்குக் கொடுத்ததாக அறியப்படுகிறது.
    புதிய விபரங்களுடன் தொடர்வேன்.

    Reply
  • Nadarajah Sethurupan
    Nadarajah Sethurupan

    அடித்தது அடிவாங்கியதும் புலிகள்தான். அடித்தது தமிழ் இழையோர் அமைப்பு தலைமை தாங்கியது மக்களவை கறாட்டி மாஸ்டர். அடிவாங்கியது தீவபத்து வர்த்தகச் செம்மல். ஆனால் அவருடைய தம்பியார் புலிசண்டியரில் முக்கியஸ்தர். அவரும் அந்த இடத்தில் தமயனுடன் நிண்றார். இதற்கும் அப்பால் இது கார் பிரச்சனை இல்லை. இதற்கு அப்பால் பெண் தகராறும் உள்ளது. புலிகள் பொல்லுகள் தடிகள் சகிதம் எவரோ ஒருவரை காத்து நிண்டனர். இவருக்கு அடித்தனர். இந்த கும்பல் 03 நாட்களாக குறித்த அசோக்குடன் சிறு தகராற்றில் ஈடுபட்டனர். புலிகள் மட்டும்தான் அந்த கோவிலில் கடை போட அனுமதி. அசோக்கும் வியாபாரிதான். புலிகள்தான் கோவிலுக்கு காவல் தொழில். இதனால் கோவிலுக்கு பல பொதுமக்கள் தற்போது போவது இல்லை. இத்தகய அரசியல் மயற்படுத்தலாம் நோர்வேயில் 05 கோவில்கள் உருவாகி உள்ளது.

    இப்படி ஒரு மோதல் உருவாகும் என்று மோதல் நடைபெறுவதற்கு 05 நாட்களுக்கு முதலே நான் நோர்வே பொலிசிற்கு அறிவித்திருந்தேன்.

    Reply
  • BC
    BC

    //தமிழிச்சி உங்கள் தளத்தில் எழுதுவதில் குறைந்த பட்ச பகுதறிவு சிந்தனையாவது தேசத்தில் எழுதலாமே பலர் படிக்கும் தளம் இதுவும் ஒன்று என்பதால்//
    இலங்கையர்களால் அதிகம் பார்க்கபடும் தமிழ் இணையதளம் தேசம்நெற் தான். புலி ஆதரவாளர்கள் உண்மைக்கு பார்க்கும் தளமும் அதுவே. தமிழ்வாதம்-தமிழிச்சி ஒருவரா? நான் நினைத்தேன் தமிழிச்சி இப்போ சில வருடங்களாக எழுதுவதில்லை என்று. பல்லி, இங்கே நல்ல கருத்து சொல்லும் நீங்கள் குலனின் கட்டுரையின் பின்னோட்டங்களில் இஸ்லாமிய அடிப்படைவாததிற்காக விதாண்டாவாதம் செய்வதையும் கவனத்தில் எடுங்கோ.

    Reply
  • palli
    palli

    //குலனின் கட்டுரையின் பின்னோட்டங்களில் இஸ்லாமிய அடிப்படைவாததிற்காக விதாண்டாவாதம் செய்வதையும் கவனத்தில் எடுங்கோ.//
    பி சி இந்த கட்டுரையில் மட்டுமல்ல எல்லா கட்டுரையிலும் நான் மிகவும் கவனம் எடுப்பேன், இருப்பினும் எனக்கு அறிவுரை சொன்னதுக்கு நன்றி, பி சி நான் எங்கும் வாதம் செய்யவில்லை; மறுப்பும் சொல்லவில்லை, இந்த வாதமே திசை திரும்பி ஒரு இன போரை மெல்ல தொடக்கி விடுமோ
    என பயத்தால் இனவாதம் வேண்டாம் என்பதே என்வாதம்; குலனை நான் அறிவேன் அவரது கருத்துக்களும் வலுவானவை, இருப்பினும் இந்த மதவாதத்தில் என்னால் அவருடன் சேர்ந்து போக முடியவில்லை, ஆனாலும் அவரது கட்டுரை வந்தபோது அதை உள்வாங்கி நான் எழுதிய சில வரிகளை பி சி க்காக திரும்பவும் தருகிறேன்;

    குலனின் கட்டுரையில்
    குறையில்லை நிறையுண்டு
    குண்டு சட்டி குதிரை போல்
    குறை பல புலி சொல்லும்;

    நட்புடன் பல்லி;;

    Reply
  • palli
    palli

    //இப்படி ஒரு மோதல் உருவாகும் என்று மோதல் நடைபெறுவதற்கு 05 நாட்களுக்கு முதலே நான் நோர்வே பொலிசிற்கு அறிவித்திருந்தேன்.//
    நல்ல முயற்சி பாராட்டுக்கள். இதை தேசத்தில் எழுதியிரிந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்; இனிமேல் காலத்தில் அப்படி நடக்க இருப்பவைகளைnசேது மக்களுடன் பகிர்ந்து கொள்ளுக்கள். மக்களாவது பாதுகாப்பு தேடலாமல்லவா?
    இருப்பினும் கிறிக்கட் மட்டைகளை தூக்கும் அளவுக்கு புலியின் பலம் வந்துவிட்டது சிரிப்புதான், (விளையாட அல்ல போருக்கு)

    Reply
  • thurai
    thurai

    //இருப்பினும் கிறிக்கட் மட்டைகளை தூக்கும் அளவுக்கு புலியின் பலம் வந்துவிட்டது சிரிப்புதான், (விளையாட அல்ல போருக்கு)//பல்லி

    ஆகாயத்தில் அம்புலிமாமா காட்டி பாட்டிமார் குழந்தைகளிற்கு சோறு தீற்றுவார்கள். அதேபோல்தான் ஈழத்தில் நடந்த போரையும் புலியையும் காட்டி வாழ்க்கை நடத்தியவர்கள்தான் இவர்களெல்லாம். இவர்களிற்கு விளையாட்டும் வராது போரும் வராது.

    துரை

    Reply
  • pakthan
    pakthan

    சண்டைக்கும் தேர் அடிபிடிக்கும் தொடர்பில்லை. சும்மா எழுதக் கூடாதெல்லே. இவர்தான் வட்டிக்குக் குடுத்தார் எண்டு நினைக்கிறன். முருகனுக்குத்தான் வெளிச்சம். புலிக்கு குடுத்த காசு எவ்வளவு எண்டு ஆராவது எழுதலாமே!!

    Reply
  • Kumanan
    Kumanan

    சென்றமுறைக் கொமிட்டியிடன் ஒருமில்லியன் குரோண்கள் புலிகள் கேட்டவர்களாம். கோயில் கொமிட்டி ஒரேயடியாக தர இயலாது 2தரமாக 5லட்சம் தருவதாக வாக்களித்தார்களாம். கொமிட்டியில் அதிகமானோர் புலிகளாய் இருந்த காரணத்தால் மற்றவர்களின் வாய்கள் அடக்கப்பட்டது. இவர்கள் ஐயரில்லா ஒருவரை சைவம் என்று உதவிக்குருக்களாக பொய்யகப்பதிந்து கூப்பிட்டார்களாம். இந்த யெயம் ஒரு புலிக்குடும்பமாம். கோவில் வேலைகள் அவசர அவசரமாக முடித்துவிட்டு புலிகளின் ஒவ்விசுக்குப் போய்விடுவார். கோவில் கூப்பிட்டாலும் ஜெயம் புலிகளுக்குத்தான் வேலை செய்தாராம். ஜெயத்தைப்போல் கோயிலின் ஊடாகத்தான் புலிகளை எடுத்தார்கள் குறிப்பிட்ட தொகையில் அரைப்பங்கு கொடுக்கப்பட்டது. மீதி பங்கு கொடுப்பதற்கும் புலிகளுக்குக் கருமாதி செய்து விட்டார்கள். மீதி அரைப்பங்கும் யார் யார் கைகளிலே எல்லாம் பக்தன் சொன்னதுபோல் முருகனுக்குத்தான் வெளிச்சம். தேருக்கு பாதுகாப்புப் போடவேண்டியது யார்? திருவிழா உபயகாரர்களும்தான். தேர் உபயகாரர்கள் ஒஸ்லோவில் வட்டிக்குக் காசு வாங்காதவர்களே கிடையாதாம். கடைகள் கொம்பனிகள் தனிமனிதர்கள் என்று யாரையும் விட்டதில்லையாம் வெளிநாடுகளிலும் போதிய அளவு வாங்கியுள்ளார்கள். கடன் வாங்குவது கொடுப்பது எங்கும் உள்ள விசயம் தான் ஆனால் அதைக் கொடுக்காமலேயே அவர்கள் முன்னால் போட்டு எப்படித்தான் மினுக்க முடியுதோ தெரியவில்லை.

    வட்டியைப்பற்றி பக்தன் சொன்னபடியால் சொல்கிறேன். சீட்டுப்பிடித்து விட்டு இவர்களே மற்றவர்கள் பணத்தைக் கூறி எடுப்பார்களாம் வட்டி தருவதாகக் கூறிச் சிலமாதங்களுக்கு வட்டியும் கொடுப்பார்களாம். ஒரு சீட்டல்ல 3சீட்டு ஒரே நேரத்தில் ஒருலட்சம் இரண்டு இலட்சம் என்றுதான் பிடிப்பது வழக்கமாம்.

    Reply
  • PALLI
    PALLI

    அடேங்கப்பா இம்மட்டு சமாசாரம் அங்கு உள்ளதா?
    கொட்டுங்க கொட்டுங்க உள்ள குப்பைகள் யாவையும் இங்கே கொட்டுங்க. கோவிலடி துப்பரவாகட்டும்;

    கோவிலுக்கு போகும் போதும்
    கோடாலி தேவைதானோ
    கொண்டுபோன கோடாலி
    கொத்தியது யாரையடா????

    Reply
  • Kulan
    Kulan

    இந்தகோவில் அடிபாடு நீயா நானா என்று எழுந்த மனிதத்துக்கு மரணதண்டனை கொடுக்க இருசாராரும் முயற்சித்துள்ளனர். எம்மிடம் பேசித்தீர்க்கும் கலாச்சாரம் எப்ப இருந்தது. அண்ணம் தம்பி அம்மா அப்பாவில் இருந்து ஆசிரியர் வரை அடித்து அடித்தே சுணைகெட்டு போன சமூகத்தின் பிரதி நிதிகளுடன் எப்படிப் பேசி அல்லது கதைத்து விளங்கப்படுத்துவது என்ற எண்ணம் எழுத்தானே செய்கிறது. இது எமது சமூகத்தின் அடிப்படைச் பிரச்சனை அதாவது பலாற்காரம் என்பது பிறந்த உடனேயே ஆரம்பமாகிறது. இது மதம்சார்ந்து வருவதால் எப்படிக் கண்டிக்காமல் விடமுடியும். என்றோ எழுதிவைத்த புத்தகங்களுக்காக பலாற்காரம் அடிப்படைவாதிகளால் முன்னெடுக்கப்படும் போது எப்படி பல்லி பிசி பார்த்துக் கொண்டிருக்க முடியும்.

    Reply
  • pakthan
    pakthan

    I dont know why these Koil people are keeping quit? Is it true that they fought for 300000Kroner without accunts? why are they alweys trying to stay in the koil cashbox? why should they selsect only Ariyalai Pulikal to ledrership? They know parking problem. why they select a land with same problem? why they keep sivaganes in this post? Why not pay for those work as guards?

    only aanser is
    Kaseithaan Kadavolada!!

    Reply
  • Kumanan
    Kumanan

    புரியவில்லையா பக்தன்? பவர் பணம் இவைதான் அரியாலையாரின் தேவைகள். சாதியை மறைப்பதற்கும் பணத்தை இலகுவாகச் சூறையாடுவதற்கும் கோவிலை விடச் சிறந்த இடம் எங்குள்ளது. ஒருதலைக்கு எவ்வளவு பணம் என்று அரசும் கொடுக்கிறது. இது லட்சக்கணக்கில் கிடைக்கிறது தெரியுமோ? பொய்யாகக் அங்கத்துவர்களைக் காட்டி காசெடுத்த விடயம் தெரியுமோ? கோயிலுக்கு வருவர்கள் எல்லோரும் அங்கத்தவர்கள் அல்ல அவர்கள் அங்கத்துவப்பணம் செலுத்துவதில்லை. அவர்களையும் பூசை;அரிச்சனை செய்தவர்களையும் அங்கத்தவர்களாகப் பொய் கணக்குக் காட்டி பிறந்த நாழுடன் கூடிய அரச எண்களைக் களவாடி பத்திரங்களை நிரப்பி அரசிடம் பணம் பிடுங்கியதை அறிவீரோ?பொய்பணத்தில் முருகனுக்கு அபிசேகமா? வட்டிக்குக் காசு கொடுப்பவர்களும் வாங்கிய காசைச் சுற்றுபவர்களில் பலர் கோவில் நிர்வாகத்தில் உள்ளனர். கோயில் வளர்ச்சியை தடுப்பதற்காகவே சண்டை சச்சரவில் ஈடுபட்டவர்கள் பலர் இன்று நிர்வாகத்தில் உள்ளனர். இப்படிப்பட்ட ஒருவர் மணவறை வாடைக்கு விடுவதும் மனைவியைக் கொண்டு அலங்காரம் செய்வதும் பக்க உழைப்பாக உள்ளது. இதற்கு அரசுக்கு வரியேதும் கட்டுவதில்லை. இதிலும் சுவாமிக்கு …. யூ என்று விரல்காட்டிய வாத்தி ஒருவர் கோவிலின் முன்னணி நட்சத்திரமாம். கோவிலுக்கு சாமான்கள் இந்தியாவில் இருந்து கொண்டு வரும்போது தனது வீட்டுக்கும் சாமான் கொண்டுவந்து கோவில்கணக்கில் கணக்குக் காட்டியவரும் தலைவராக மட்டுமல் கணக்குப் பரிசோதகராக இருந்தாராம். கணக்குக் பார்ப்பதற்குக் கள்ளர்கள்.

    சென்ற சிலமாதங்களுக்கு முன் பெருந்தொகை பணத்தைக் காணவில்லை என்று ரசீதுகளைக் ஒழித்து விட்ட கணக்கு விட்ட சீலன் என்பவர் தன் கொம்பனிக் கணக்கில்தான் எல்லாம் செய்கிறேன் என்று புதியகணக்கு விடுகிறாராம். கோவிலுக்கு இரண்டு கணக்கு வளக்குக் கொப்பியாம் அரசாங்கத்துக்குக் காட்டுவதற்கு ஒன்று தங்களுக்கு இன்னொன்றாம். இது கோயிலாக கள்ளக்கோட்டான்களின் கூடாரமா?

    Reply
  • london boy
    london boy

    ஜரோப்பாவில் ஒரு சண்டை அடி தடி நடக்கிறது என்றால் இதில் பெரும்பான்மையானதில் புலிகளின் அங்கக்ததவர்கள் – ரிவைஓ- பிரிஎப் -பேரவை- கேபி புலி பிரிவு- நாடுகடந்த நாடு- தலைவர் இருக்கிறார் புலி-பொட்டம்மான் படையுள்ளார் புலி இவர்களின் தலையீடு உள்ளது என்பது கேபியும் இவர்கள் போராட்த்தை ஒரு தெருச்சண்டித்தனமாகவே விளங்கிவைத்துள்ளார்கள் இது இவர்கள் மட்டுமல்ல பிரபாகரனும் கூடத்தான்

    இந்த கோயில்காரர்கள் உட்பட புலிகளின் சண்டியர்கள் புலிகளின் பெயரால் தம்ஊயிரை கொடுத்த புலிப்போராளிகளின் பெயரால் இவர்கள் எத்னை அட்காசங்கள நடத்துகிறார்கள் இவர்களது கடந்த 30 வருட பயங்கரவாத்தினால் உருவாகிய அநாதை சிறுவர்கள் குழந்தைகள் விதவைகள் பற்றி ஒரு கணமேனும் சிந்தித்தார்களா!

    சாப்பாடே இல்லாத ஜரோப்பாவிலா சாப்பாடு அவித்து கொட்டித் தீர்க்கிறார்கள் ஏன் ஜரோப்பாவில் உள்ள சைவக் கோயில்கள் இந்த உணவை நாட்டிலுள்ள எத்தனையோ அநாதையாகிவிட்ட குழந்தைகளுக்கு உணவு கிடைக்க செய்வதையே சைவம் அறிவுறுத்துகின்றது. இதைசெய்தால் கோயிலுக்கும் போகத்தேவையில்லை தேர் இழுக்கவும் தேவையில்லை.

    புலிகளின் போராட்டத்தில் வெளிநாடுகளில் ஆதரவளித்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமது சுயலாபத்திற்காக என்பதை மீண்டும் மீண்டும் பலதடவைகள் நிரூபிக்கப்பட்டுவிட்டது

    பெண்கள் விதவைகளாகியதும் எமது குழந்தைகள் அநாதைகளாகியது புலிவியாபாரிகளின் வியாபாரப்போராட்டத்தினால் இதற்கு இவர்கள் செய்யும் பிராயச்சித்தம் அவர்களுக்கு இங்குள்ள கோவில்கள் தேர்கள் புலிகளின் சொத்துக்கள் எல்லாவற்றையும் இந்த போரினால் பாதிக்கப்பட்ட விதவைகள் குழந்தைகளுக்கு கிடைக்கச் செய்வது அவர்களது வாழ்விற்கு உத்தரவாதம் செய்வதுதான்.

    எப்படி கோவிலுக்கு போகும் இவர்கள் சண்டைக்கு தயாராக போவார்கள் வெட்கம் கெட்வர்கள். நோர்வேயில் இந்த கோயிலுக்கு போகாதவர்கள் சரியாகவே செய்துள்ளனர் இந்த கோயிலின் விலாசம் தொலைபேசி இலக்கத்தை இங்கே பதிவிடுங்கள்

    Reply
  • Nadarajah Sethurupan
    Nadarajah Sethurupan

    ஆலய தொலைபேசி இலக்கம் 0047 – 22251301

    Reply
  • lio
    lio

    லண்டன பிரித்தானியா ஈலிங் அம்மன் கோவில், வால்தம்ஸ்ரொ பிள்ளையார் கோவில் போன்றவைகள் தமது கோவில் வருமானத்தில் பகுதியை தமிழ்ப்பிரதேசத்தில் உள்ள குழந்தைகளை பராமரித்தல் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல் போன்ற விடயங்களில் நிறையவே செயல்ப்படுகிறார்கள்

    இந்த அம்ரூட் ஆலயம் என்ன உதவிகளை வட கிழக்கில் உள்ள தமிழ் பகுதியில் செய்கிறார்கள் என்பதை நோர்வே தமிழர்கள் உங்களுக்கு தெரிந்தால் இங்கு தயவு செய்து இங்கே பதிவிடவும்

    Reply
  • unmai
    unmai

    இந்திய அரசியலும் தமிழ்நாட்டு சினிமாவும் ரொம்பதான் புலம் பெயர்தமிழ் இனைய எழுத்தாளர்களை பாதித்துள்ளது அதில் ஒரு சாதாரண பிரச்சனை கோபத்தின் உச்சத்தில் தூளும் சோறும் சாப்பிடும் தமிழனிற்கு மூக்கில் கோபம் யாஷ்தி அதன் விளைவுதான் அது ஆனால் இது மதிநுட்பமாக அரசியளக்கபட்டுள்ளது.

    Reply
  • பல்லி
    பல்லி

    ஜெயபாலன் எனது பின்னோட்டம் சில சமீபகாலமாக காணாமல் போகிறது காரணம் நான் அறியேன், தவறா? அல்லது தடாவா??
    பல்லி

    Reply
  • Kumanan
    Kumanan

    //சாப்பாடே இல்லாத ஜரோப்பாவிலா சாப்பாடு அவித்து கொட்டித் தீர்க்கிறார்கள் ஏன் ஜரோப்பாவில் உள்ள சைவக் கோயில்கள் இந்த உணவை நாட்டிலுள்ள எத்தனையோ அநாதையாகிவிட்ட குழந்தைகளுக்கு உணவு கிடைக்க செய்வதையே சைவம் அறிவுறுத்துகின்றது// லண்டன் போய்-
    நீங்கள் கூறுவதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால் தேர்திருவிழா உபயகாரர்களின் (ஈசன் செல்வியின்)கெளரவம் என்னாவது. கெளரவக்குன்றுகள் அல்லவா. இவர்கள் தங்களின் பணத்திலா அன்னதானம் போடுகிறார்கள். ஊரை அடித்தகாசு. சீட்டுப் போட்டுக் கொடுக்காமல் விட்டகாசுகள். வட்டிக்குவாங்கி கணக்கு விட்டுகாசுகள். கடைநடத்த என்று வாங்கிக் கந்தறுந்த காசுகளில் தானே அன்னதானம் நடக்கிறது. பாவப்பணத்தில் தானே அன்னதானம் நடக்கிறது. யேசு வார்த்தைகள் பாவத்தின் சம்பளம் மரணம்.

    Reply
  • Kumanan
    Kumanan

    //இந்த அம்ரூட் ஆலயம் என்ன உதவிகளை வட கிழக்கில் உள்ள தமிழ் பகுதியில் செய்கிறார்கள் என்பதை நோர்வே தமிழர்கள் உங்களுக்கு தெரிந்தால் இங்கு தயவு செய்து இங்கே பதிவிடவும்//
    தந்திரவேந்திரா என்ற அமெரிக்கன் சாமியார் நன்கு தமிழ் பேசுவார். இவர் திருகோணமலையில் விதவைகள் மறுவாழ்வு: பசுவதைக்கெதிரான போராட்டம் என்று நடத்தி வந்தவர். இவர் அந்த ஆலயத்துக்கு வந்தபோது நிர்வாகம் 5000குரோண்களை மட்டுமே கொடுத்தார்களாம். ஆனால் சாதாரணமக்கள் பலர் 10000 குரோண்களும் கொடுத்திருக்கிறார்கள். அங்கு செய்கிறோம் இங்கு செய்கிறோம் என்று சொல்கிறார்கள் எங்கும் செய்வதாகத் தெரியவில்லை. கடைபோட்டு உழைக்கிறார்கள். உண்டியல் குலுக்கிப் பணம் கலக்குகிறார்கள். கணக்குக் கெட்டால் பொதுக்கூட்டத்தியேயே நெஞ்சில் உதைக்கிறார்கள். பொலிசில் முறைப்பாடுகள் அதிகம் உள்ளன. இது கோவிலா? கோவிலைத் தொடக்கிய திலீபன் என்பவர் கோவில் பக்கமே வருவதில்லை. முதல் கொமிட்டியில் இருந்தவர்கள் பலர் எட்டியும் பார்ப்பதில்லை ஏன்?

    Reply
  • malan
    malan

    குடும்பசகிதமாய் தேர்திருவிழாவுக்கு வந்த அசோக் குடும்பத்தினர் பாதுகாப்புக்காய் நின்றவார்களால் பாதுகாப்பற்ற முறையில் தாக்கப்பட்டனர். இன்றைய நோவேயியப் பத்திரிகை ஒன்றின் செய்திப்படி அசோக்கின் மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை இத்தாக்குதல்களால் அதாவது கிறிக்கெட் பட் விக்கட் தாக்குதல்களால் கொல்லப்பட்டுள்ளது. முக்கியமாக அசோக்கிடம் கார் பழகியவரும் சேர்ந்து அடித்ததாக அசோக் கவலைப்பட்டாராம்:
    இவ்வளவும் நடந்தபின் கோவில் கட்டைப்புட்டு குட்டித்தம்பி வாமதேவன் தலைவர் சொல்கிறார் சமாதானமான ஒரு முடிவை எதிர்பார்க்கிறோம். என்ன நடக்குது? பலருக்கு வெட்டுக்காயம் பொல்லடிக்காயங்கள் வயிற்றில் இருந்த சிசு செத்துப்போய் விட்டது. இதற்குப்பின் என்னடா சமாதானம் வேண்டி இருக்கு. நாட்டை மக்களை கொன்று குவித்து நாசமறுத்தது போதாதா? இதற்கான சரியான முடிவு நோவே அரசால் எடுக்கப்படாவிட்டால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறும். சமாதானமாகப்போ என்று சொல்வதற்கோ கேட்பதற்கோ குட்டித்தம்பியர் வாமதேவனுக்கு என்ன உரிமை இருக்கிறது. செத்தபிள்ளையைத் திருப்பிக் கொடுப்பாரா?

    Reply
  • palli
    palli

    ஜயோ இது பளசு, இப்போ புதிதாய் பாரிஸ் தேரில் குத்து வெட்டாம்,
    ஆனால் இதில் ,,,,,,இல்லையாம்;

    Reply
  • Kusumpu
    Kusumpu

    நோர்வேயில் இருந்து போய் குத்து வெட்டா? அல்லது அங்குள்ள புலிகளால் வெட்டுக் குத்தா? //இதில் ——இல்லையாம்// எது இல்லையாம்? என்ன பூடகம் போடுகிறியள் சொன்னாத்தான் என்னவாம்? போட்டுத் தாழுங்கையா? ஆமியை ஊரில் போட்டாங்கள் இப்ப தன்ரை ஆக்களையே போடுகிறாங்கள்.

    Reply
  • மாயா
    மாயா

    சுவிற்சர்லாந்தில், ஓல்ரன் மனோன்மணி அம்பாள் ஆலய நிர்வாத்தினர் நிதிமோசடிகளை செய்துவருவதாகவும் மக்கள் இவ்விடயத்தில் விழிப்படைந்து தங்களின் பங்களிப்புக்களை ஆலய நிர்வாகம் சீரமைக்கப்பட்டு , புதிய நிர்வாகம் தெரியப்பட்டு , கணக்குகள் காட்டப்பட்ட பின்னர் பங்களிக்கவும் என துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    http://3.bp.blogspot.com/_qKP1tij2zvQ/THpDG-VnAiI/AAAAAAAAJDI/jmicGYTEnyc/s1600/notice.jpg

    Reply
  • Malan
    Malan

    மாயா-உதுதான் நோவேயிலும் நடக்குது. உதைவிட மோசம் எண்டும் சொல்லலாம். ஒருவர் கோவில்காசில் வீட்டுத்தளபாடங்கள் கொண்டவாந்தாராம். கோவில்காசு வட்டிக்குக் கொடுக்கப்படுகிறது. கோவில்காசில் கடை நடத்தி பாங்கிறப்சி அடைத்தவர்களும் கொமிட்டியில் இருக்கிறார்கள். கணக்கு வளக்குக் கேட்டால் கைகலப்பு புலி அரியாலையாரின் ஆட்சிதான். மாமன் மச்சானுக்கு பாராட்டுக்களும் பரிசளிப்புகளும். ஒருவர் கொமிட்டிக்குள் இருந்த பக்கவியாபாரம் மணவறை வாடைக்கு விடுவது முதல் பெண்களை அலங்காரப்படுத்துவதை வரி வரிகட்டாத வருமானம். கணக்குக் கேட்டால் பேசிய காரைவிட அதிகம் கேட்பார்கள் வரிக்கு என்று. சீட்டுப்போட்டுச் சுத்தியவர்கள் பலர் கோயில் கொமிட்டியில் இருந்தார்கள் இருக்கிறார்கள்.

    Reply